இயேசுவின் மரணத்தை நினைவுகூருதல்
இயேசு கிறிஸ்து எளிமையான ஒரு நிகழ்ச்சியின்போது, தாம் மனிதவர்க்கத்துக்காக பலியாக செலுத்த இருந்த மானிட உயிருக்கு அடையாளச் சின்னங்களாக திராட்ச ரசத்தையும் புளிப்பில்லா அப்பத்தையும் பயன்படுத்தினார். இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தபோது அவர் சொன்னார்: “என்னை நினவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.”—லூக்கா 22:19.
கடந்த ஆண்டு இயேசுவின் மரணத்தின் ஞாபகார்த்த ஆசரிப்புக்காக, யெகோவாவின் சாட்சிகள் ஏற்பாடு செய்திருந்த விசேஷித்தக் கூட்டங்களுக்கு வருவதன் மூலம், 92,01,071 பேர் இயேசுவை நினைவுகூர்ந்தார்கள். இந்த ஆண்டு உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள ராஜ்ய மன்றத்துக்கு ஞாபகார்த்த ஆசரிப்புக்காக வரும்படியாக நீங்கள் அன்பாக அழைக்கப்படுகிறீர்கள். இது மார்ச் 22-ம் தேதி புதன் கிழமையன்று சூரிய மறைவுக்குப் பின்பு நடை பெறும். சரியான நேரத்தை உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து கேட்டு தெரிந்துகொள்ளவும்.