யெகோவா ஏன் தம்முடைய பெயரை வெளிப்படுத்தி இருக்கிறார்?
போலந்தில் 1964-ல் பிரசுரிக்கப்பட்ட “பழைய ஏற்பாட்டின்” ஒரு விளக்கவுரை இந்தக் கேள்விக்குச் சிந்தனையைத் தூண்டும் ஒரு பதிலைக் கொடுத்தது. ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் அச்சுரிமை ஆணையில் லப்லின் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஸ்டேனிஸ்லா லேச் குறிப்பிட்டதாவது:
“கடவுளுடைய பெயருக்கு மீட்கப்பட்ட மக்களே மனிதவர்க்கத்தினரின் முன்னிலையில் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.” “புறஜாதியார் யாவே [யெகோவா] என்ற பெயரை ஸ்தோத்திரிப்பதற்கும் அதை அவர்கள் தூஷியாதிருப்பதற்குமான” முயற்சிகளை மேற்கொள்ளும் உத்தரவாதம் இஸ்ரவேலருடையதாயிருந்தது. “யாவே ஓர் அர்த்தத்தை உடையதாயிருக்கிறது . . . அந்தப் பெயரை அறிக்கை செய்கிறவர்களுக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் என்பதன் பேரில் இவ்வுலகம் நியாயந்தீர்க்கப்படும்.” “யாவே என்ற பெயர் தேசங்களுக்குள் பெரிதாயிருக்கும் . . . அது உலகமுழுவதும் பரவிடும். மோசேயிடம் சொல்லப்பட்ட அந்தப் பெயர் . . . இதில் விளைவடையும்” என்று பேராசிரியர் அறிக்கை செய்தார்.
ஆம், மல்கியா 1:11 (தி.மொ.) தீர்க்கதரிசனமாய்ச் சொல்வதுபோல் இருக்கிறது: “ஜாதியாருக்குள்ளே என் நாமமே பெரிது என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.” “யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவ”தற்கேதுவாக இன்று அந்தப் பெயரை உலகமுழுவதும் அறிக்கையிடுவது யார்? யெகோவாவின் சாட்சிகள்! “தமது நாமத்திற்கான மக்களுக்கு,” ஆம், “அந்தப் பெயரை அறிக்கையிடுகிறவர்க”ளுக்குப் பொதுமக்களின் பிரதிபலிப்பு அவர்களுக்கு ஜீவன் அல்லது மரணத்தைக் குறிக்கும் ஒரு காரியம். யெகோவாவுக்கும் அவருடைய சாட்சிகளுக்கும் உங்கள் பிரதிபலிப்பு என்ன?—அப்போஸ்தலர் 2:21; 15:14, NW; மல்கியா 3:16–18-ஐ ஒப்பிடவும். (w90 2/15)