உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அண்மையில் வெளியான காவற்கோபுரம் பிரதிகளை நீங்கள் கவனமாக ஆலோசித்துப் பார்த்தீர்களா? அப்படியானால் பின்வருபவற்றை உங்களால் ஒருவேளை ஞாபகப்படுத்திப் பார்க்கமுடியும்:
◻ கீழ்ப்படியாத தேவதூதர்கள் டார்ட்டரஸில் வைக்கப்பட்டிருப்பதால், இது அவர்களுக்கு எதை அர்த்தப்படுத்தியது? (2 பேதுரு 2:4)
யெகோவாவின் பரிசுத்த அமைப்பில் அவர்களுக்கு இனிமேலும் இடமில்லை, மற்றும் அவர்கள் இப்பொழுது தெய்வீக வெளிச்சத்திலிருந்து புறம்பாக்கப்பட்டிருக்கிறார்கள். என்றபோதிலும், அவர்கள் இன்னும் சாத்தானுடைய வழிநடத்துதலின்கீழ் செயல்படுகிறவர்களாய், அவர்கள் மனிதரோடு நெருங்கிய தொடர்பைத் தொடர்ந்து வைத்து, ஆண்கள், பெண்கள், பிள்ளைகளையுங்கூட தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க முயன்றுவந்திருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 12:12, 17)—12/1, பக்கம் 16.
◻ யெகோவாவின் பார்வையில் “தீமையை வெறுத்துவிடுவது” ஏன் அவசியம்? (சங்கீதம் 97:10)
தீமையை வெறுத்துவிடுகிறவர்கள் அதில் ஈடுபடுவதற்கான வழிகளை நாட மாட்டார்கள். மறுபட்சத்தில், அதை வெறுக்காதவர்கள் உடலளவில் அதிலிருந்து விலகியிருக்கக்கூடும், ஆனால் மனதால் அதில் பங்குகொள்ள பிரியப்படக்கூடும்.—12/1, பக்கம் 23.
◻ பெரோயாவிலுள்ள யூதர்கள் என்ன கருத்தில் வேதவாக்கியங்களைக் ‘கவனமாக ஆராய்ந்துபார்த்தார்கள்’? (அப்போஸ்தலர் 17:11)
பெரோயா பட்டணத்தார் பவுலையும் அவன் அவர்களுக்குக் கொண்டுசென்ற செய்தியையும் சந்தேகித்தார்கள் என்பது அல்ல, ஆனால் இயேசுவே மேசியா என்பதை நிரூபிக்க ஆராய்ச்சி செய்தார்கள். அத்தனை அநேகர் விசுவாசிகளானதுதானே, அவர்களுடைய உள்நோக்கம் உண்மையானதாய் இருந்தது என்பதைக் காண்பிக்கிறது. (அப்போஸ்தலர் 17:12)—1/1, பக்கம் 28.
◻இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த சட்டங்கள் எந்த அம்சங்களில் அவர்கள் சுத்தமாக இருப்பதற்கு உதவியது?
யெகோவாவின் சட்டங்கள் இஸ்ரவேலர் ஆவிக்குரிய விதத்திலும், ஒழுக்கத்திலும், மனதிலும், உடலிலும், ஆசார முறைமையின்படியும், அதாவது பின்னர் குறிப்பிடப்பட்டிருப்பது குறித்திடும் வணக்கம் சம்பந்தமாகவும் சுத்தமுள்ளவர்களாக இருக்க உதவியது.—3/1, பக்கம் 22.
◻“மன சுத்தம்” என்ற தொடரின் அர்த்தம் என்ன?
“மன சுத்தம்” என்பது ‘உண்மையுள்ள, நீதியுள்ள, மற்றும் கற்புள்ள’ காரியங்களில் நிலைத்திருப்பதன் மூலமும் ‘இவைகளையே சிந்தித்துக்கொண்டிருப்பதன்’ மூலமும் நாம் மனதில் சுத்தமாக இருப்பதற்கு நம்முடைய பாகத்தில் உள்ளார்ந்த முயற்சியைக் குறிக்கிறது. (பிலிப்பியர் 4:8)—4/1, பக்கம் 14.
◻ நாம் ஏன் இலேசான பயனில வீண்பேச்சிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்?
நாம் எவரையும் புண்படுத்தும் எண்ணமற்றவர்களாய் ஒன்றை சொல்லியிருக்கக்கூடும், ஆனால் குற்றமற்றதாய்த் தென்படும் இந்த வீண்பேச்சு திரும்ப எடுத்துக் கூறப்படும்போது, ஜோடிக்கப்படும்போது, அல்லது திரிக்கப்படும்போது புண்படுத்தக்கூடியதாய் ஆகக்கூடும், பேசப்படும் நபரின் பெயரைக் கெடுத்து அவருடைய நற்பெயரைப் பறித்துவிடக்கூடும். (நீதிமொழிகள் 20:19)—5/1, பக்கம் 26.
◻ஓர் ஆண் ஒரு கிறிஸ்தவ கண்காணியாக இருப்பதற்கு அவனுடைய இருதயத்தின் உள்நோக்கங்கள் என்னவாக இருக்க வேண்டும்? (1 தீமோத்தேயு 3:1)
ஓர் ஆண் கண்காணிப்புக்குத் தகுதிபெற நாட வேண்டும், இதை அதிக மனத்தாழ்மையுடன் செய்ய வேண்டும், ஏனென்றால் அந்த நபர் மற்றவர்களைச் சேவிக்க விரும்புகிறார். இப்படியாக சரியான உள்நோக்கங்களால் உந்துவிக்கப்படும்போது, அவனுடைய பாகத்தில் இந்தச் செயல் உட்பட்டிருக்கும் எல்லாருக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் விளைவடையும்.—5/1, பக்கம் 10.
◻ உலக அதிகாரங்களை “மேலான” அதிகாரங்கள் என்று அழைப்பதில் யெகோவாவுக்கு உரிய கனத்திலிருந்து நாம் எவ்விதத்திலாவது வழிவிலகிச்செல்கிறோமா? (ரோமர் 13:1)
இல்லை, ஏனென்றால் யெகோவா தேவன் மேலானவராக இருப்பதிலும் உயர்ந்தவர். அவர் “பேரரசராகிய ஆண்டவர்,” “உன்னதமானவர்.” (சங்கீதம் 73:28; தானியேல் 7:18, 22) உலக அதிகாரங்கள் மற்ற மனிதர் சம்பந்தமாகவும் அதனுடைய சொந்த செயல் பகுதி சம்பந்தமாகவும் மட்டுமே மேலானவை. அவை மனித சமுதாயங்களை ஆளவும் பாதுகாக்கவும் உரிய கடமைப்பொறுப்பைக் கொண்டிருக்கின்றன.—6/1, பக்கம் 12.