உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w89 6/1 பக். 16-17
  • தேசங்கள் மெகிதோவில் கூடுகின்றன

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேசங்கள் மெகிதோவில் கூடுகின்றன
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
  • இதே தகவல்
  • மெகிதோ—தீர்க்கதரிசன அர்த்தமுள்ள பண்டையகால போர்க்களம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • அர்மகெதோன்—மகிழ்ச்சியான ஓர் ஆரம்பம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • அர்மகெதோன்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
w89 6/1 பக். 16-17

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்

தேசங்கள் மெகிதோவில் கூடுகின்றன

“உலக அர்மகெதோன் பேரில் ஆராய்ச்சியாளர்கள் தயக்கம் காண்பிக்கிறார்கள்,” என்று அணு ஆயுதப் போர் உறைய வைக்கும் “அணு ஆயுதக் குளிர் காலத்தை” ஏற்படுத்துமா அல்லது உருக்கிடும் “அணு ஆயுத கோடைக் காலத்தை” ஏற்படுத்துமா என்பதன் பேரில் ஓர் அறிவியல் கட்டுரை அறிக்கை செய்தது.

“அர்மகெதோனையும்” நம்முடைய இக்கட்டான காலங்களையும் இணைத்துக் குறிப்பிடும் அப்படிப்பட்ட கூற்றுகளை நீங்கள் ஒருவேளை பார்த்திருக்கக்கூடும். “அர்மகெதோன்” என்றால் என்ன? உங்களுடைய ஜீவன் அதில் உட்படுவதால், அதை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புவீர்கள்.

உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் மெகிதோ காட்சியைப் பாருங்கள். இது பூர்வ இஸ்ரவேலில் போர்த்திற முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடம். அப்போஸ்தலனாகிய யோவான் “எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் [மெகிதோ மலை] என்னும் இடத்தைக்” குறித்து எழுதினான். (வெளிப்படுத்துதல் 16:16) மெகிதோவின் பின்னணியைத் தெரிந்திருப்பது அந்த வார்த்தைகளுக்கு ஒளியூட்டுகிறது.

மறு பக்கத்தில் இருக்கும் நிலவரைப் படத்தில் அது இருக்கும் இடத்தைக் காணலாம். அது இரண்டு அடிப்படை சாலைகளை நோக்கியவண்ணம் இருந்தது. தெற்கே எகிப்துக்கும் வடக்கே தமஸ்கு அல்லது ஐபிராத்து பிரதேச பட்டணங்களுக்கும் இடையேயுள்ள வடக்கு—தெற்கு மாக்கத்தைக் கர்மேல் மலைகள் தடை செய்தன. எனவே சேனைகளும் வணிகர் கூட்டங்களும் மெகிதோவுக்குப் பக்கமாய்த் தாழ செல்லும் ஒரு கணவாய் வழியாய்ச் செல்ல வற்புறுத்தப்பட்டனர். அதுதான் படத்தின் வலது பக்கத்தில் காணப்படும் கணவாய். அதன் வழி சென்ற வடக்கு—தெற்கு சாலை, தீருவுக்கும் யோர்தான் பள்ளத்தாக்குக்கும் அல்லது சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் இடையில் அமைந்த முக்கியமான மார்க்கத்தையுடைய யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் குறுக்கே சந்திக்கின்றன. இந்த மார்க்கங்களின் குறுக்கே அமர்ந்திருக்கும் மெகிதோ, கடந்து செல்பவர்கள் மீது ஆதிக்கம் கொண்டிருக்கக்கூடும், மற்றும் மெகிதோவுக்கு எதிரிலிருந்த பள்ளத்தாக்கு தீர்வான போர்களின் இடமாக ஆனது.

உதாரணமாக, இந்த இடத்தில்தான் நியாயாதிபதியாகிய பாராக் சிசெராவின் தலைமையில் 900 இருப்புரதங்களைக் கொண்டிருந்த கானானியரை முறியடித்தான். (நியாயாதிபதிகள் 4:1–3; 12–16; 5:19) பின்னால், ஐபிராத்துக்கு அருகாமையிலிருந்த அசீரியரின் வலிமையைப் பெருக்கிட, பார்வோன் நேக்கோ வீரர்களையும் ரதங்களையும் கொண்டிருந்த ஒரு பலமான எகிப்திய சேனையை கடற்கரை மார்க்கமாய் (எனவேதான் அந்த மார்க்கத்தின் பெயர் மாரிஸ் வழி, அல்லது சமுத்திரத்துக்குச் செல்லும் வழி என்றிருந்தது) வழிநடத்தினான். ஏதோ ஒரு காரணத்துக்காக, யூதேய அரசன் யோசியா நேக்கோவுடன் ஒரு சர்வதேச அளவிலான மோதலுக்குத் தீர்மானித்தான். ஆனால் எங்கே? அது எருசலேமுக்கு 55 மைல் தூரத்திலிருந்த போதிலும் யோசியா மெகிதோவுக்கு அண்மையிலிருக்கும் அந்தச் சமபூமியைத்தான் தெரிந்துகொண்டான்.—2 நாளாகமம் 35:20–22; எரேமியா 46:2.

எகிப்தியர் அப்பக்கமாகக் கடந்திட வேண்டும் என்பதை அவன் அறிந்திருந்தான். அதே சமயத்தில் தனக்கும் சாதகமாக இருக்கும் என்று உணர்ந்திருக்கக்கூடும், ஏனென்றால் இஸ்ரவேலின் ஓர் அரணுக்கு அண்மையிலும் இருப்பான். தெல் (குன்று) மெகிதோ ஓரளவுக்குப் பெரிதாக இருக்கிறது என்பதை நீங்கள் காணக்கூடும். பூர்வீக பட்டணம் மிகப் பிரம்மாண்டமானதாயிருந்தது. சாலொமோன் மெகிதோவை அரணிப்பான பட்டணமாகக் கட்டினான், பிரம்மாண்டமான கற்களாலான மதில்களையும் ஒரு பெரிய பாதுகாப்பான வாயிற் கதவையும் அமைத்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.a (1 இராஜாக்கள் 9:15) குன்றுக்கு இடது பக்கத்தில் ஒரு பெரிய நீள்சதுர பள்ளத்தைப் பார்க்கிறீர்கள், இதுதான் புரியா புதிராக இருக்கும் நீர் வழங்கும் முறைக்கு வாயிலாக இருந்தது. செங்குத்தான படிகள் பாறைவழியாய் வெட்டப்பட்டிருக்க, இஸ்ரவேலர் ஊற்றுத்தண்ணீரைப் பெற்றுக்கொள்ள வழிவகுத்தது, அதே சமயத்தில் தாக்குதல்களிலிருந்தும் பாதுகாப்பைத் தந்தது. தொல்பொருளாராய்ச்சியாளர் ஏறக்குறைய 450 குதிரைகளுக்கான கொட்டில்களைக் கண்டுபிடித்திருக்கின்றனர், இது ஒருவேளை ஆகாப் அரசனின் காலத்திற்குரியதாக இருக்கலாம்.—1 இராஜாக்கள் 9:19.

மெகிதோவுக்கு அண்மையில் நடந்த அந்தத் தீர்வான யுத்தத்தில் யோசுவாவுக்குப் படுகாயம் ஏற்பட்டு, எருசலேமுக்குத் திரும்பும் வழியில் அவன் மரித்துவிட்டான். (2 இராஜாக்கள் 23:28–30) சகரியா 12:11-ல் குறிப்பிடப்பட்ட ‘மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் புலம்பலுக்கு’ இது காரணமாக இருந்திருக்கக்கூடும். யோசியாவின் தோல்விக்குப் பின்பு சீக்கிரத்திலேயே பாபிலோன் தன்னுடைய இராணுவ செல்வாக்கை பலவீனமாயிருந்த யூதேயாவின் மீது செலுத்தியது.—2 இராஜாக்கள் 24:1, 2, 12–14; 2 நாளாகமம் 36:1–6.

இந்தப் பின்னணி தகவலறிந்தவர்களாய், அப்போஸ்தலனாகிய யோவானுக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்துதலில், “பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்திற்குக்” கூட்டிச்சேர்ப்பதை முன்னறிவிப்பதில் மெகிதோ ஏன் குறிப்பிடப்பட்டது என்பதை நீங்கள் மதித்துணர முடியும். பூமியில் எந்த ஒரு தனி இடமும், மெகிதோ குன்று இருக்கும் அந்தச் சமவெளிப் பகுதியும், கடவுளுக்கு எதிரான எல்லாத் தேசங்களும் கூடமுடிந்த இடமாக இருக்க முடியாது. ஆனால் அர்மகெதோன் பொருத்தமாக அந்தத் தீர்வான யுத்தத்திற்கான நிலையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.—வெளிப்படுத்துதல் 16:14, 16; 19:11–21.

எனவே அர்மகெதோன் என்பது நம்முடைய பூகோளத்தை வெறுமையாக்கிடும் ஓர் அணு ஆயுத யுத்தம் என்று அரசியால்வாதிகளும் செய்தியாளர்களும் தவறாக நினைத்துக்கொண்டிருக்கட்டும். மெகிதோவின் சரித்திரத்தை மனதில் கொண்டவர்களாக, அந்தக் காரியத்தை நீங்கள் அதிக திருத்தமாகப் புரிந்துகொள்ளமுடியும். அர்மகெதோன் என்பது, அந்த மகா யுத்தத்துக்காகத் தேசங்கள் கொண்டுவரப்படும் நிலை என்பதை நீங்கள் மதித்துணர முடியும். அப்பொழுது கடவுள் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையை நிர்மூலமாக்கி, நீதியுள்ள ஒரு புதிய உலகிற்கு வழிவகுப்பார்.—2 பேதுரு 3:11–13. (w89 1⁄1)

[அடிக்குறிப்புகள்]

a மெகிதோ வாயில் குறித்த ஒரு கிளர்ச்சியூட்டும் விவரப் பதிவுக்கு நீங்கள் ஆங்கில காவற்கோபுரம் ஆகஸ்ட் 15, 1988, பக்கங்கள் 24–26-ஐ வாசிக்கலாம்.

[பக்கம் 17-ன் வரைப்படம்]

(For fully formatted text, see publication)

மத்தியதரைக் கடல்

தீருவுக்கு வழி

அக்கோ

தமஸ்குவுக்கு வழி

கலிலேயாக் கடல்

கர்மேல் மலைத்தொடர்

மெகிதோ

பேத்சியான்

தோத்தான்

சமாரியா

யோர்தான் நதி

சீகேம்

மாரிஸ் வழி

எருசலேமுக்கு வழி

யோப்பா

எகிப்துக்கு வழி

மைல் 0 10

கி.மீ. 0 10 20

[படத்திற்கான நன்றி]

Based on a map copyrighted by Pictorial Archive (Near Eastern History) Est. and Survey of Israel

[பக்கம் 16-ன் படம்]

நீங்கள் மெகிதோவின் ஒரு பெரிய படத்தை யெகோவாவின் சாட்சிகளின் 1989-ம் வருட நாள்காட்டியில் காண்பீர்கள். அதன் ஆறு படங்களும் இந்த ஆண்டு காவற்கோபுரம் கட்டுரைகளில் சிந்திக்கப்படும். எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்காக இவற்றை நீங்கள் உங்கள் நாள்காட்டியுடன் பத்திரப்படுத்த விரும்புவீர்கள்.

[பக்கம் 17-ன் வரைப்படம்]

இந்த எகிப்திய சிற்பம் பார்வோன் நேக்கோ அரசனாகிய யோசியாவை முறியடித்த இடமாகிய மெகிதோவைக் கடந்துசெல்வதை நீங்கள் மனக்கண்களின் பார்வைக்குக் கொண்டுவர உங்களுக்கு உதவும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்