உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w89 11/1 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
  • இதே தகவல்
  • ஓய்வுநாளில் நல்ல செயல்களைச் செய்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • ஓய்வுநாளில் நற்காரியங்களைச் செய்தல்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • ஓய்வுநாளில் நல்லது செய்யலாமா?
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • அவர் மக்களை நேசித்தார்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
w89 11/1 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

◼ யோவான் 5:2–7 குறிப்பிடுகிறபடி, கலங்கிய பெதஸ்தா என்னப்பட்ட குளத்தில் நோயாளிகளும் ஊனமுற்றவர்களும் உண்மையிலேயே சுகமடைந்தார்களா? அப்படியென்றால், அந்த அற்புதங்கள் எந்த வல்லமையில் நிகழ்ந்தன?

பூர்வ எருசலேமிலுள்ள குளத்தில் அநேக அற்புதங்கள் நிகழ்ந்தனவா என்பதை யோவான் 5:2–9-லுள்ள பதிவு உண்மையில் உறுதிசெய்வதாயில்லை. 38 வருடங்களாய் வியாதிகொண்டிருந்த ஒரு மனிதனை இயேசு சுகப்படுத்திய அந்த ஓர் அற்புதத்தைக் குறித்து மட்டுமே நாம் நிச்சயமாயிருக்கலாம். இந்த அற்புதத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாம், ஏனென்றால் இதைப்பற்றிய அறிக்கை தேவாவியினால் ஏவப்பட்டெழுதப்பட்ட வேதவார்த்தைகளில் காணப்படுகிறது. (2 தீமோத்தேயு 3:16) ஆனால் புனித ஸ்தலங்களில் அற்புதங்கள் நடக்கின்றன என்று அநேகர் இன்று நம்புவது போல் அந்த இடத்திலும் மற்ற அற்புதங்களும் நிகழ்ந்தன என்று எருசலேமில் அப்பொழுதிருந்த அநேகர் நம்பினார்கள்.

பைபிள் என்ன சொல்லுகிறது, அது உண்மையில் என்ன சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள்: “எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டுவாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு. அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்தார்கள்.——முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனை இயேசு கண்டு அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான். இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துபோனான்.”—யோவான் 5:2–9.

இங்கு குறிப்பிடப்படும் குளம் “ஆட்டுவாசலினருகே” இருந்தது, தெளிவாகவே இது ஆலயமிருந்த மலைக்கு அண்மையில் எருசலேமுக்கு வடகிழக்கில் இருந்தது. (நெகேமியா 3:1; 12:39) அண்மையில் நடத்தப்பட்ட நில அகழ்வாய்வுகள் இரண்டு பூர்வீக குளங்களையும் தூண்கள் மற்றும் அஸ்திவாரங்களின் சேதமடைந்த பகுதிகளையும் கண்டுபிடித்திருக்கின்றன. யோவான் 5:2 கூறுகிறபடி, ஏரோதின் காலங்களில் மண்டபங்களையுடைய ஒரு கட்டிடம் இருந்தது என்பதைக் காண்பிக்கிறது. ஆனால் இவ்விடத்தில் என்ன நடக்கக்கூடும் என்று அக்காலத்து மக்கள் நம்பினர்?

யோவான் 5:2–9-ல் (NW) ஒரு கோட்டுக் குறி இருப்பதைக் கவனியுங்கள். சில மொழிபெயர்ப்புகள் யோவான் 5:9 என்று எண்ணிட்ட ஒரு கூடுதல் பகுதியைக் கொண்டிருக்கிறது. அந்தக் கூடுதல் பகுதி இப்படியாக வாசிக்கிறது: “ஏனெனில் சில சமயங்களிலே தேவ தூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.”

என்றபோதிலும், பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (New World Translation of the Holy Scriptures) உட்பட ஏராளமான நவீன பைபிள்கள் இந்தப் பகுதியை விட்டுவிடுகின்றன. ஏன்? ஏனென்றால் இது அநேகமாக யோவானின் சுவிசேஷத்தில் இருக்கவில்லை. தி ஜெருசலேம் பைபிள் (The Jerusalem Bible) கொடுக்கும் கீழ்க்குறிப்பு ஒன்றில் “சிறந்த சாட்சியங்கள்” இந்தப் பகுதியை விட்டுவிடுகின்றன என்கிறது. இங்கு குறிப்பிடப்பட்ட “சிறந்த சாட்சியங்கள்” கோடெக்ஸ் சைனாய்ட்டிக்கஸ் மற்றும் வத்திக்கன் 1209 (இரண்டுமே பொ. ச. 4-வது நூற்றாண்டைச் சேர்ந்தது.) மேலும் சீரியா மற்றும் லத்தீன் மொழியிலுள்ள ஆரம்பக்கால மொழிபெயர்ப்புகள் போன்ற பூர்வ கிரேக்க மூலப்பிரதிகளைக் குறித்தது. ‘சிறந்த மூலப்பிரதிகளில் வசனம் 4 காணப்படவில்லை’ என்று குறிப்பிட்ட பின்னர் தி எக்ஸ்பொசிட்டர்ஸ் பைபிள் விளக்கவுரை (The Expositor’s Bible Commentary) பின்வருமாறு கூறியது: “அந்தக் குளத்தின் தண்ணீர் விட்டுவிட்டு கலங்கியதை விளக்குவதற்காக உட்படுத்தப்பட்ட ஒரு விளக்கக்குறிப்பாகவே பொதுவாய்க் கருதப்படுகிறது. இதில் சுகமடைவதற்கான ஊற்றுமூலத்தைக் கொண்டிருக்கும் சாத்தியம் இருப்பதாகப் பொதுமக்கள் கருதினர்.” (கத்தோலிக்கத் தமிழ் மொழிபெயர்ப்பு இந்த அடிக்குறிப்பைக் கொண்டிருக்கிறது: “இவ்வசனம் மூலப்பிரதிகள் பலவற்றில் காணோம்.”) Kindly check if the passage in bracket be included for the benefit of vernacular readers

எனவே தேவதூதன் ஒருவன் அந்தப் பெதஸ்தா குளத்தில் அற்புதங்கள் நிகழ்த்தினான் என்று பைபிள் உண்மையில் சொல்லவில்லை. சரி, தண்ணீர் கலங்கியபோது மக்கள் அற்புதமாக சுகமடைந்தனரா? அதை இன்றுள்ள எவருமே உறுதியாக சொல்ல முடியாது. ஒருவேளை நோய்ப்பட்ட அல்லது ஊனமுற்ற ஆட்கள் அங்கு சுகமடைந்தனர் என்ற ஒரு பாரம்பரியக் கருத்து வளர்ந்திருக்கக்கூடும். சுகமடைந்ததாகக் கருதப்படும் கதைகள் ஒருமுறை பரவ ஆரம்பித்து, அதனால் வாழ்க்கையை வெறுத்துவிட்ட ஆட்கள் சுகமடையும் நம்பிக்கையுடன் அவ்விடத்தில் கூடிவர ஆரம்பித்திருப்பார்கள். இந்தக் காரியம் நம்முடைய காலத்திலேயே பல இடங்களில் நடந்திருக்கிறது, தெய்வீக சுகம்பெறுதல் சம்பந்தமான அதிகாரப்பூர்வ பதிவுகளைக்கொண்ட நிரூபணங்கள் இல்லாதிருந்தும் இப்படி நடந்திருக்கிறது.

என்றபோதிலும் பெதஸ்தா குளத்தருகே தேவனுடைய குமாரன் சுகப்படுத்திய காரியத்தைக் குறித்து நம்பிக்கையற்றவர்களாக இருந்துவிடக்கூடாது. ஏன், தண்ணீருக்குச் செல்லாமலேயே அந்த மனிதன் மிகப் பெரிய மருத்துவரால் உடனடியாகக் குணப்படுத்தப்பட்டான். இந்தக் காரியத்தைச் செய்வதற்கு அவரிடம் காணப்பட்ட அதிகாரப்பூர்வமான திறமைதானே நெருங்கிக்கொண்டிருக்கும் ஆயிர வருட ஆட்சியின்போது அவர் செய்யப்போகும் அற்புதங்களை எதிர்நோக்கியிருக்க நமக்குத் தகுந்த காரணத்தையளிக்கிறது. அவர் விசுவாசமுள்ள மனிதரைச் சுகப்படுத்தி மீண்டும் பரிபூரண நிலைக்குக் கொண்டுவருவார்—வெளிப்படுத்துதல் 21:4, 5; 22: 1, 2. (w88 9⁄1)

[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]

Pictorial Archive (Near Eastern History) Est.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்