உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w90 11/1 பக். 32
  • ஏன் அவைகளைத் தவறவிட வேண்டும்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏன் அவைகளைத் தவறவிட வேண்டும்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
w90 11/1 பக். 32

ஏன் அவைகளைத் தவறவிட வேண்டும்?

கடந்த வருடம் கோடையில் நியு யார்க் நகர வங்கி ஒன்றில் வரிசையில் நின்றுகொண்டிருந்த போது ஒரு நடுத்தர வயதுப் பெண் தனக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த ஒரு மனிதன் காவற்கோபுரம் பத்திரிகையை வாசித்துக்கொண்டிருப்பதைக் கவனித்தாள். அதில் ஜெபத்தைப் பற்றிய ஒரு கட்டுரையை அவள் வாசிக்க ஆவலாயிருந்தாள். ஆகவே அவள் இப்பிரதியின் தேதியைக் குறித்துக்கொண்டாள்.

ஒருசில நாட்களுக்குப் பின்பு யெகோவாவின் சாட்சிகள் அவளை வீட்டில் வந்து சந்தித்தார்கள். அவள் கேட்டாள்: “உங்களிடம் ஜூலை மாத காவற்கோபுரம் இருக்கிறதா?” குறிப்பிட்ட ஒரு பத்திரிகையில் அவள் ஏன் அக்கறையுடையவளாய் இருந்தாள் என்பதைத் தெரிந்து கொண்டபின், சாட்சிகளில் ஒருவர் சொன்னார்: “ஆர்வத்தைத் தூண்டும் எந்த ஒரு பிரதியையும் தவறவிடாதிருப்பதற்கு சந்தா செய்வதே மிகச் சிறந்த வழியாகும்.”

“அவ்விதமாகச் செய்யமுடியும் என்பது எனக்குத் தெரியாது!” என்று அந்தப் பெண் சொன்னாள். வருட சந்தா 5 டாலர் என்பதாக அவளுக்குச் சொல்லப்பட்டபோது, அவள் சொன்னாள்: “நிச்சயமாக உங்களுக்குத் தெரியுமா? முழு வருடத்துக்கும் 5 டாலர் மட்டும்தானா?” அவ்வளவுதான் என்பது அவளுக்கு உறுதியாகச் சொல்லப்பட்டபோது அவள் காவற்கோபுரம் மாத்திரமல்ல, ஆனால் அதன் துணைப் பத்திரிகையாகிய விழித்தெழு! பத்திரிகையுங்கூட வேண்டும் என்று சொன்னாள். “இரண்டு பத்திரிகைகளும் 10 டாலருக்கு மாத்திரமே கிடைக்கும் என்று நீங்கள் நிச்சயமாயிருக்கிறீர்களா?” என்பதாக அவள் மறுபடியுமாகக் கேட்டாள்.

தான் சந்தா செய்ய சாட்சி அங்கிருந்ததற்காக அந்தப் பெண் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். நீங்களும்கூட காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை உங்கள் வீட்டிற்கு வரவழைக்கலாம். ரூபாய் 50 மட்டுமே அனுப்புங்கள். ஓராண்டுக்கு இவ்விரண்டு பத்திரிகைகளையும் (மாதத்துக்கு இரண்டு பிரதிகள்) நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.

தயவு செய்து காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கு ஓராண்டு சந்தாவை அனுப்பிவைக்கவும். இத்துடன் ரூ.50 அனுப்பியுள்ளேன்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்