“ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை”
“ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்கு சமானம்” என்று நீதிமொழிகள் 25:11 சொல்கிறது. நாம் சிந்தித்துச் சொல்லும் வார்த்தைகளும், தயவான செயல்களும் ஒரு நீதிமானின் இருதயத்தை யெகோவா தேவனின் அங்கீகாரத்தைப் பெறும் வழியில் நடக்க மென்மையாய் தூண்டக்கூடும். பல வருடங்களுக்கு முன்னால் நாம் சொன்ன அல்லது செய்த சில காரியங்கள், அன்பாக இன்னொரு ஆளால் இன்றும் நினைவுகூரப்படலாம். உதாரணமாக, ஒரு சபையை சந்திக்கச் சென்ற போது ஒரு வட்டார கண்காணியும் அவரது மனைவியும் புதிதாக முழுக்காட்டப்பட்ட ஒரு சகோதரியின் வீட்டில் விருந்தினராகச் சென்றிருந்தனர். வட்டார கண்காணியின் மனைவி அவர்கள் அனுபவித்த உபசரிப்புக்கு ஒரு நன்றிக் கடிதம் அனுப்பினார்கள். ஏழு வருடங்களுக்கு பிறகு பின்வரும் கடிதத்தை இவர்கள் பெற்றுக் கொண்டார்கள்:
“நீங்கள் அறியாமலே, பல வருடங்களாக நீங்கள் எனக்கு உதவியாக இருந்திருப்பதைக் குறித்து நான் உங்களுக்கு எழுதி அதை தெரிவிக்க வேண்டுமென்றிருந்தேன். மதிய உணவுக்காக உங்களையும் ஜிம்மையும் அழைத்திருந்தேன். நீங்கள் நல்ல ஒரு நன்றி கடிதத்தை அனுப்பியிருந்தீர்கள். அது மிகவும் அனலுள்ளதாயிருந்தது, ஆனால் அதிலிருந்த வசனமே என் இருதயத்தை எட்டியது. அதை நான் மறக்கவே இல்லை. 1976-ம் ஆண்டு இது நடந்தது. என் குடும்பத்தில் நான் மட்டுமே சத்தியத்தில் உண்மையான அக்கறையுள்ளவளாயிருந்தேன். என் பெண் பிள்ளைகளுக்குப் பைபிள் படிப்பு நடத்தி, ஒரு நல்ல மனைவியாக இருக்க முயன்றேன். ஆனால் சத்தியத்தைவிட்டு விலகிடவும் உத்தரவாதங்களைத் தட்டிக் கழிக்கவும் நான் விரும்பிய சமயங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் நீங்கள் எழுதிய அந்த வசனம் என் இருதயத்தில் பதிந்துவிட்டிருந்தது. ‘நான் எவ்வளவு சுயநலமுள்ளவள்’ என்று நானே எனக்குள் சொல்லிக்கொண்டு, தொடர்ந்து சென்றேன்.
“இந்த எட்டு வருடங்களில் வேறு எந்த ஒரு காரியமும் என்னை இதுபோல பாதித்ததில்லை. அதைக்குறித்து நான் உங்களிடம் சொல்ல வேண்டுமென்றிருந்தேன். அதிகமான வேலையின் மத்தியிலும் நான் செய்ய வேண்டிய காரியத்தை நான் செய்வதற்காக, நேரம் எடுத்து எனக்கு நன்றி சொன்னது எவ்வளவு நன்றாக இருந்தது.
“ஆம், அந்த வசனம்—2 யோவான் 8.
“சான்ட்ரா”
இன்று, சான்ட்ராவின் கணவன் முழுக்காட்டப்பட்டு அவளோடு சேர்ந்து நற்செய்தியை அறிவிக்கும் பிரஸ்தாபியாக இருக்கிறார். அவர்களுடைய இரண்டு மகள்களில் ஒருத்தி ஒழுங்கான பயனியராகவும், மற்றொருத்தி தன் பள்ளி படிப்பை முடித்ததிலிருந்து துணைப்பயனியராகவும் இருக்கிறாள்.
கடைசியாக, 2 யோவான் 8 என்ன சொல்கிறது? “உங்கள் செய்கைகளின் பலனை இழந்து போகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.” (w88 2⁄1)