அவர்கள் அதை மேசையின் மேல் கண்டார்கள்
இத்தாலியில் மிலான் விமான நிலையத்தில் வேலை செய்யும் ஒருவர் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தின் ஒரு பிரதியை 12 மற்றும் 13 பக்கங்களிலுள்ள அழகிய படங்கள் பகுதிக்குத் திறந்தவண்ணம் தன் மேசையின் மேல் வைத்தார். அங்கு வந்தவர்கள் சற்று நின்று அந்தப் புத்தகத்தைப் பார்த்து தாங்கள் ஒரு பிரதியை எங்கே வாங்கலாம் என்று கேட்டார்கள். விமான ஓட்டி ஒருவர் ஒரு புத்தகத்தை வாங்கி தனது சக ஓட்டுனர்களிடம் காண்பித்தார். அவர் மீண்டும் வந்து 37 பிரதிகளை தருவித்தார். ஒரு மாதத்திற்குப் பின்பு மற்ற சக விமான ஓட்டிகளுக்கு 48 கூடுதலான புத்தகங்கள் கேட்டார். காலப்போக்கில் அந்த வேலையாள் விமான நிலையத்தில் வேலை செய்த மற்றவர்களுக்கு 120 புத்தகங்களை விநியோகித்தார்.
இந்தக் குறிப்பிடத்தக்க பிரசுரத்தை நீங்களும் படித்து அனுபவிக்கலாம். இந்தப் பத்திரிகையின் அளவான பக்கங்கள் 256. அதில் மிக அழகிய வண்ணங்களில் 150 படங்கள் குறிப்புகளை விளக்குகிறது. பூமியில் பரதீஸில் என்றும் வாழப்போகும் ஆட்களுடன் நீங்களும் எப்படி இருக்கலாம் என்பதைக் கற்றுக்கொள்வீர்கள். இப்பொழுதே தருவியுங்கள். ரூபாய் 25 மட்டுமே.
தயவுசெய்து நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை அனுப்பவும். இத்துடன் ரூ.25-ம் பதிவு தபால் செலவுக்கு ரூ.2.75-ம் அனுப்பியுள்ளேன்.