ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
அன்பு “ஐக்கியத்தின் பூரண கட்டு”
கிறிஸ்தவர்களின் மத்தியில் அன்பு ‘ஐக்கியத்தின் பூரண கட்டாக’ இருக்கிறது. அதை வெளிக்காட்டுவது உலகளாவிய சகோதரத்துவத்தில் விளைவடைகிறது. (கொலோசெயர் 3:14) ஆப்பிரிக்காவிலுள்ள நம்முடைய சகோதரர்கள், ஒருவர் பேரிலொருவர் அன்புள்ளவர்களாயிருக்கும்போதும், உயிர் கொடுப்பவரும் அதை பராமரிப்பவருமாகிய யெகோவாவின் பேரில் அன்புள்ளவர்களாய் இருக்கும்போதும், இந்த ஐக்கியத்தின் பூரண கட்டை வெளிப்படுத்துகிறார்கள்.—சங்கீதம் 36:9; அப்போஸ்தலர் 17:28.
◻ சிம்பாப்வேயில் சமீபத்தில் ஏற்பட்ட மூன்று வருட வறட்சியின் காரணமாக, அநேக இடங்கள் மிக மோசமான நிலையில் இருந்தன. இது, நிச்சயமாக அந்த பகுதிகளில் வாழ்ந்த நம்முடைய சகோதரர்களை பாதித்தது. என்றபோதிலும், உதவிக்கான தேவை அறிவிக்கப்பட்டபோது, உடன் சாட்சிகள் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் பிரதிபலித்தார்கள். உண்மையில் நன்கொடையாக கொடுக்கப்பட்ட துணிமணிகள் அவ்வளவு அதிகமாக இருந்ததினால், மறுபடியும் அறிவிக்கப்படும் வரை கொடுப்பதை நிறுத்திவிடும்படியாக தெரிவிக்க வேண்டியதாக இருந்தது. இந்த உதவியோடுகூட அரசாங்கம் கொடுத்துவந்த உதவியும் சேர்த்து, அவர்களுக்கு போதுமானதாயிருந்தது. “இன்னும் தேவையிலிருப்பவர்கள் கவனிக்கப்பட்டு வருகிறார்கள்” என்று சங்கத்தின் கிளைகாரியாலயம் அறிக்கை செய்கிறது.
நம்முடைய சகோரர்களின் இந்த அன்பான உதவி பிறர் கவனத்தை தப்பவில்லை. விசுவாசத்தில்லாத ஒரு கணவன் சாட்சியாயிருக்கும் தன் மனைவியிடம் சொன்னான்: “மற்றவர்கள் மக்களிடமிருக்கும் எல்லாவற்றையும் பரித்துக்கொள்ளுகிறபோது, நீங்களோ [சாட்சிகள்] அவர்களுக்கு உணவையும் துணிமணிகளையும் கொடுக்கிறீர்கள்.” மற்றவர்களிடமிருந்தும் போற்றுதல் குறிப்புகள் வந்தன.
யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் அன்பு “ஐக்கியத்தின் பூரண கட்டாக” விளங்குவதுடன், அவர்களை உண்மையான கிறிஸ்தவர்களாகவும் அது அடையாளப்படுத்துகிறது.—யோவான் 13:35.
◻ யெகோவாவின் ஜனங்கள் மத்தியில் வெளிப்படுத்தப்படும் அன்புக்கும் ஐக்கியத்துக்கும் இன்னொரு உதாரணம் சியரா லியோனிலுள்ள ஃப்ரீ டவுனில் நடைபெற்ற “ராஜ்ய ஒற்றுமை” மாவட்ட மாநாடு. இந்த மாநாட்டிற்கு கினி மற்றும் லைபீரியாவிலிருந்து பிரதிநிதிகள் வந்தனர். சியரா லியோனின் மற்ற பாகங்களிலிருந்தும் வந்தனர். ஒரே சமயத்தில் இரண்டு நிகழ்ச்சி நிரல்கள், ஒன்று ஆங்கிலம் மற்றும் கிரியோ மொழிகளிலும் மற்றொன்று கசி மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் நடைபெற்றன. இந்த சமயத்தில் நிலவிய அன்பையும் ஐக்கியத்தையும் குறித்து கிளைக்காரியாலய அறிக்கை விவரிக்கிறது. அது சொல்லுகிறது:
“கசி மற்றும் பிரெஞ்சு பேசும் சகோதரர்கள், பாட்டிலும் ஜெபத்திலும் ஆங்கில நிகழ்ச்சி நிரலில் கலந்து கொண்டபோது, அது ஒரு உள்ளத்தை கவரும் சமயமாக இருந்தது. 400 பிரதிநிதிகள் வெளியே நடந்து யெகோவாவை ஐக்கியமாக வணங்குவதில் பாட்டிலும் ஜெபத்திலும் கலந்துகொள்வதை பார்க்கும்போது அநேகர் ஆனந்த கண்ணீர் சிந்தினர்.” அதை பார்த்த ஒருவர்: “நம்முடைய ஜனங்களை எவ்வாறு கூட்டிச் சேர்ப்பார் என்று யெகோவா அறிந்திருக்கிறார். ஐக்கியத்தின் என்னே ஒரு தெளிவான வெளிக்காட்டு!” என்றார்.
மாநாட்டிற்கு வருகை தந்தவர்கள் வெவ்வேறான ஜாதியினராக இருந்தபோதிலும், அவர்கள் சமாதானத்தோடு ஒன்று கூடினது, இந்த ஐக்கியத்தின் தன்மையை வெளிக்காட்டுகிறது. இதை நிறைவேற்றுவதற்கு யெகோவாவின் தேவையாயிருக்கிறது. இந்த ஐக்கியத்தைக் குறித்து வெளிப்படுத்துதல் 7:9 பின்வருமாறு கூறுகிறது: “இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.” இதே அதிகாரத்தில் 10-ம் வசனம் இந்த ஐக்கியத்தின் இரகசியத்தைக் காட்டுகிறது: “அவர்கள் மகா சத்தமிட்டு: ‘இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக,’ என்று ஆர்ப்பரித்தார்கள்.” (w85 12/1)