ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
“அவர்கள் நம்முடைய தேவனுடைய உபதேசத்தை அலங்கரிக்கின்றனர்”
ராஜ்ய சத்தியத்தின் எளிமையையும் தெளிவையும் அதை அறிவிப்பவர்கள் ‘அலங்கரிக்க’ முடியும். எப்படி? அவர்களுடைய நல்நடத்தையின் மூலம், அப்போஸ்தலனாகிய பவுல் இதை எவ்வாறு காட்டினான் என்பதை கவனியுங்கள். கிறிஸ்தவ ஊழியர்கள், “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக. . சகல விதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும்” புத்திசொல்லப்பட்டார்கள். (தீத்து 2:10) அர்ஜென்டினாவிலிருந்து வரும் பின்வரும் அனுபவங்கள் இந்த புத்திமதியை பின்பற்றுவதில் ஏற்படும் நடைமுறை பயன்களைப்பற்றி பேசுகிறது.
ஆறு யெகோவாவின் சாட்சிகள் ஒரு சிறப்பு அங்காடியில் அதிக கடுமையாக நடத்தும் எஜமானரின்கீழ் வேலை செய்தனர். கிறிஸ்துவின் மரணஞாபகார்த்த கூட்டத்திற்கு செல் அனுமதி கேட்டபோது, “உங்களுடைய வேலையா அல்லது கூட்டங்களா என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்,” என்று சொல்லப்பட்டனர். தங்களுக்கு சீட்டு கிழிக்கப்படும் என்று நினைத்துக்கொண்டு மறுநாள் வேலைக்கு சென்றனர். ஆனால் ஆச்சரியம் என்னவெனில் அவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டது மட்டுமல்லாமல், அதில் தற்காலிகமான வேலை செய்த நான்கு பேருக்கு வேலை உறுதிபடுத்தப்பட்டது. ஆறு பேர் சம்பளமும் உயர்த்தப்பட்டது! பிறகு அதில் இரண்டுபேர் ஒழுங்கான பயனியர்களாக ஆக் தீர்மானித்தனர், எனவே அந்தச் சிறப்பு அங்காடியின் சொந்தக்காரர் அவர்களுடைய வசதிக்கேற்ப வேலை நேரத்தில் மாற்றங்கள் செய்து கொடுத்தார். அவர் அவர்களிடம் அவ்வளவு கரிசனையுள்ளவராக இருந்த கரணம் என்ன? நேர்மையுள்ள, கடினமாக வேலை செய்யும் தன்னுடைய ஆட்களை அவர் இழந்துவிட விரும்பவில்லை.
எனவே, இந்த ஆறு சாட்சிகளின் நேர்மையும் நல்ல வேலை பழக்கங்களும் அவர்களுடைய போதகத்தை யெகோவாவின் மகிமைக்கென்று ‘அலங்கரித்தது.’
மருந்துக்கடையில் வேலை செய்யும் ஒரு சகோதரி, அதிக நேரம் வேலை செய்ய வேண்டியதாக இருந்ததினால், அவளால் எல்லா கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் செல்ல முடியவில்லை அல்லது அவளுடைய விருப்பப்படி ஒரு பயனியராகவும் முடியவில்லை. மருந்துக்கடையின் சொந்தக்காரர். அவள் விரும்பின வேலை நேரத்தை கொடுக்க முடியாததன் காரணமாக, அவள் வேலையை விட்டுவிட்டாள். பிறகு அவள் ஒரு பணிப்பெண்ணாக வேலை செய்தாள். அது அவளை துணைப் பயனியராக வேலை செய்ய அனுமதித்தது. சில மாதங்கள் கழித்து, மருந்துக்கடை சொந்தக்காரர் அவளுடைய வீட்டுக்கு வந்து அவள் “எந்த விதமாக வேலை நேரத்தை கொண்டிருக்க விரும்பினாளோ” அதை அவளுக்கு அளிக்க முன்வந்தார். ஏன்? அவளுடைய மிக நேர்த்தியான நடத்தை” என்று அறிக்கை கூறுகிறது.
ஒரு சாட்சியின் நல்நடத்தை அவளுடைய போதகத்தை இன்னொரு விதத்தில் ‘அலங்கரித்தது’ இரண்டு சாட்சிகள் அழகி பிரமாண்டமான ஓர் வீட்டை அணுகியபோது வெளியில் நிற்கும் நவீன காரையும் அதனுடைய செல்வந்த தோற்றத்தையும் பார்த்தபோது அவர்கள் சற்று அச்சப்பட்டனர். தங்களுக்கு ஒரு மனமார்ந்த வரவேற்பு கிடைத்ததைப் பார்த்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அதைத்தொடர்ந்து அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிப்பவர்களாய் இரண்டு மணிநேர கலந்தாலோசிப்பை கொண்டிருந்தார்கள் சாட்சிகளின் அறிக்கை பின்வருமாறு “அடுத்த வாரம் திரும்பவும் வந்து சந்திப்பதாக ஒத்துக்கொண்டோம். நாங்கள் சந்தோஷமாக ஆனால் குழப்பம் அடைந்தவர்களாக சென்றோம். ஏனென்றால் அப்படிப்பட்ட வரவேற்புக்குக் காரணம் என்னவென்று அறியாதவர்களாக இருந்தோம். அடுத்த வாரம் அதற்கு கரணம் என்னவென்று அறிந்துகொண்டோம்.
அந்த வீட்டிலுள்ள பெண்மணி விவரித்தாள்: “நான் மார் டெல் பிளாடாவில் வசித்து வந்த சமயத்தில் கட்டுப்பாடற்ற வாழ்க்கையை நடத்திவந்த ஒரு இளம் பெண்ணை அறிந்திருந்தேன். காலப்போக்கில் அவள் பைபிளை யெகோவாவின் சாட்சிகளோடு படிக்க ஆரம்பித்தாள். உடனுக்குடனே அவளுடைய குணாதிசயங்களில் ஒரு மாற்றம் தெளிவாக காணப்பட்டது. நானும் அயலகத்தாரும் அவளில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நம்பமுடியவில்லை, ஏனெனில் அவளுடைய பழைய கொடூரமான தன்மைகள் ஒன்றுகூட இப்போது அவளில் காணப்படவில்லை. இப்போது அவள் மரியாதைக்குரிய ஒரு பெண்ணாகவும், நீங்கள் அழைப்பதுபோல் மூப்பரின் ஒரு மனைவியாகவும், எல்லாருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் குடும்பத்தை கொண்டவளாகவும் இருக்கிறாள்.”
அந்த இளம் பெண் ஒரு யெகோவாவின் சாட்சியானபோது அவளுடைய நடத்தையில் ஏற்பட்ட மாற்றம், இந்த பெண்மணியும் யெகோவாவின் சாட்சிகளுடைய போதகங்களை மிகக் கவனமாக சிந்திப்பதற்கு அவளை தூண்டியது. உடனடியாகவே அந்தத் தம்பதிகளோடு ஒரு பைபிள் படிப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் ராஜ்யமன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தனர். சாட்சிகள் இந்த அனுபவத்தை இவ்வாறு முடித்தனர்: “நம்முடைய நடத்தையும்கூட ஒரு சாட்சியாக விளங்கமுடியும் என்று தெரிகிறது. எல்லாமே யெகோவாவின் நாமத்திற்கு மகிமையும் கனத்தையும் கொண்டுவருகிறது.” (w85 8/1)