“தெய்வீக சமாதானம் மாநாடு”—இதற்கு நீங்கள் ஏன் ஆஜராயிருக்க வேண்டும்
பயங்கரச் செயல், புரட்சி, மற்றும் யுத்தம் ஆகியவை இன்றைய நாளின் சர்வசாதாரண நிகழ்ச்சிகளாக இருக்கையில், அக்டோபர் 1986 துவங்கி, நீங்கள் யெகோவாவின் சாட்சிகளின் “தெய்வீக சமாதானம்” மாநாட்டுக்கு ஆஜராயிருக்கக்கூடியது எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது! அங்கே சமாதானத்தைக் காத்துக்கொள்வதன் பேரில் நடைமுறையான கிறிஸ்தவ போதனையை பெறுவதோடுகூட, அப்போதனையை நூற்றுக்கணக்கானோர் நடைமுறையில் பயன்படுத்துவதையும் நீங்கள் காண்பீர்கள்.
வியாழக்கிழமை பிற்பகல் 1:30-க்கு நிகழ்ச்சிநிரல் தொடங்கும் சமயத்திலிருந்து அங்கு இருங்கள். நீண்ட காலம் சமாதானம் அறிவித்து வந்திருப்பவர்களின் அனுபவங்களை நீங்கள் அன்று கேட்பீர்கள். சமுதாய பொழுதுபோக்குகளின் அபாயங்களையும் அவற்றைக் தவிர்க்கும் வழிகளையும் கற்றுக்கொள்வீர்கள். மேலும் நிகழ்ச்சி நிரலின் முடிவில், அழகுள்ள அதோடு மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதில் பயனுள்ள ஒன்றை நீங்கள் பெறுவீர்கள்.
“யெகோவாவால் போதிக்கப்படுகிறவர்களுக்கு தெய்வீக சமாதானம்” என்பது வெள்ளிக்கிழமை காலை நிகழ்ச்சிநிரலின் முக்கிய பேச்சாக இருக்கும். “பஞ்சகாலத்தில் உயிரைக் காப்பாற்றுதல்” என்ற நாடகம் உங்கள் இருதயத்தை ஆழமாகத் தொடும். அதைத் தவறவிடாதீர்கள்.
சனிக்கிழமையன்று, குடும்ப வட்டாரத்திற்குள் சமாதானத்தைக் காத்துக்கொள்ள நடைமுறையான வழிநடத்தும் குறிப்புகள், நடிப்புகள் பேட்டி காண்பது மற்றும் போதனை நிறைந்த பேச்சுகள் மூலமாக கொடுக்கப்படும். “‘சமாதானப் பிரபு’வின் கீழ் உலகளாவிய பாதுகாப்பு,” என்ற முக்கிய பேச்சோடு நிகழ்ச்சிநிரல் முடிவுபெறும்.
ஞாயிற்றுக்கிழமை காலையில், தப்பிப் பிழைத்திருக்க கடவுளின் நீதியைத் தேட வேண்டிய அவசியத்தை வெளிப்படையாய்க் காட்டி, ஆழமாய் அறிவுறுத்தும் தற்கால நாடகம் ஒன்று அளிக்கப்படும். பிற்பகல் கொடுக்கப்படும் “கடவுள் பேசுகையில்—கடைசியில் சமாதானம்!” என்ற வல்லமை வாய்ந்த சொற்பொழிவு மாநாட்டின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக இருக்கும்.
இந்தியாவில் சுமார் 20 மாநாடுகள் திட்டமிடப்பட்டிருப்பதால், உங்கள் வீட்டிற்கு அருகில் நிச்சயமாகவே ஒரு மாநாடு நடைபெறும். கூடுதலான தகவல்களுக்காக உள்ளுர் யெகோவாவின் சாட்சிகளிடம் கேளுங்கள்.
மாநாடு நடைபெறும் பட்டணங்கள்:
இடம் மொழி தேதி
பெங்களூர் தமிழ்/ஆங்கிலம் அக்டோபர் 2 -5
கல்கத்தா பெங்காலி அக்டோபர் 2 -5
டார்ஜீலிங் நேப்பாலி அக்டோபர் 9 -12
புது டில்லி ஹிந்தி/ஆங்கிலம் அக்டோபர் 9 -12
மதுரை தமிழ் அக்டோபர் 9 -12
விஜயவாடா தெலுங்கு/ஆங்கிலம் அக்டோபர் 9 -12
கல்கத்தா ஆங்கிலம் அக்டோபர் 23 -26
பம்பாய் கொங்கனி அக்டோபர் 30 -நவம்பர் 2
பூனா மராத்தி/ஆங்கிலம் அக்டோபர் 30 -நவம்பர் 2
ஆகமதாபாத் குஜராத்தி நவம்பர் 6 -9
பம்பாய் ஹிந்தி நவம்பர் 6 -9
பம்பாய் ஆங்கிலம் நவம்பர் 13 -16
மைசூர் கன்னடம் நவம்பர் 13 -16
கார்வார் கொங்கனி டிசம்பர் 4 -7
சென்னை தமிழ்/ஆங்கிலம் டிசம்பர் 11 -14
கோழிக்கோடு மலையாளம் டிசம்பர் 25 -28
கொல்லம் மலையாளம் டிசம்பர் 25 —28
காட்டப்பன்னா மலையாளம் ஜனவரி 1 —4
போர்ட் ப்ளேர் ஹிந்தி ஜனவரி 1 —4
திருச்சூர் மலையாளம் ஜனவரி 1 —4
REDG. No. M 7032