பாடல் 121
சுயக்கட்டுப்பாடு வேண்டும்
1. உள்-ளம் என் உள்-ளம் பா-தை மா-று-தே,
பா-வம்-தான் பள்-ளத்-தில் என்-னை தள்-ளு-தே.
பா-வ சட்-டம், ஓ, என்-னைக் கொல்-லும்,
தே-வன் சக்-தி-தான் வாழ்-வை சொல்-லும்.
2. உள்-ளே என் உள்-ளே தீ-மை வா-ழு-தே,
பா-வம்-தான் தீ-மைக்-கு வே-ராய் ஆ-ன-தே.
பா-வ வே-ரில் நான் தீ-யை வைப்-பேன்.
சத்-ய தீப்-பந்-தம் கொண்-டு சாய்ப்-பேன்.
3. தே-வன் என் தே-வன் பே-ரை நான் காப்-பேன்.
பா-வங்-கள் செய்-யா-மல் நான் போ-ரா-டு-வேன்.
பா-வ ஆ-சை நான் கட்-டிப்-போ-ட,
கட்-டுப்-பா-டு-தான் வாழ்-வில் வேண்-டும்.
(பாருங்கள்: 1 கொ. 9:25; கலா. 5:23; 2 பே. 1:6.)