பாடல் 36
இதயத்தை பாதுகாப்போம்
1. நன்-மை தீ-மை எல்-லாம் இந்-த
நெஞ்-சுக்-குள் போ-கா-தா?
வே-லி போ-டா-த தோட்-டம்-தான்
வீ-ணா-கிப் போ-கா-தா?
சிந்-தித்-தா-லே நெஞ்-சின் உள்-ளே
சிற்-பங்-கள் தோன்-றா-தா?
தே-வன் ஆ-சை போ-ல நெஞ்-சில்
பா-வங்-கள் நீங்-கா-தா?
2. தே-வன் அன்-பை ஏங்-கி ஏங்-கி,
இ-த-யம் தே-டா-தோ.
நன்-மை எல்-லாம் எண்-ணி எண்-ணி,
பா-டல்-கள் பா-டா-தோ.
கள்-ளம் இல்-லா தே-வன் சொல்-லை
எப்-போ-தும் கேட்-டா-லே,
முள்-ளெல்-லாம் நீங்-கி பூ-வென்-றே,
இ-த-யம் பூக்-கா-தோ.
3. யெ-கோ-வா-வின் கண் முன்-னா-லே
வே-ஷங்-கள் போ-டா-தே.
நம் தே-வன் வீட்-டில் வா-ழத்-தான்
பொய்-யை நீ தே-டா-தே.
நம் உள்-ளே ஓ-டும் எண்-ணங்-கள்
நன்-றென்-று ஆ-னா-லே,
நாம் நே-சிக்-கும் தே-வன் நட்-பில்
என்-றும் நாம் வாழ்-வோ-மே.
(பாருங்கள்: சங். 34:1; பிலி. 4:8; 1 பே. 3:4.)