பாடம் 13
தீமோத்தேயு எல்லாருக்கும் உதவி செய்தார்
மத்தவங்களுக்கு உதவி செய்ய தீமோத்தேயுவுக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய ஊருக்கு போய் மக்களுக்கு உதவி செய்தார். அதனால, தீமோத்தேயு ரொம்ப சந்தோஷமா இருந்தார். அவரைப் பத்தி இன்னும் தெரிஞ்சிக்க உனக்கு ஆசையா?—
தீமோத்தேயுவோட அம்மாவும் பாட்டியும் யெகோவாவை பத்தி சொல்லிக் கொடுக்கிறாங்க
தீமோத்தேயு இருந்த ஊர் லீஸ்திரா. அவர் குழந்தையா இருந்தப்போ அவரோட பாட்டி லோவிசாளும் அம்மா ஐனிக்கேயாளும் யெகோவாவைப் பத்தி அவருக்கு சொல்லிக் கொடுத்தாங்க. சின்ன வயசுல இருந்தே, யெகோவாவை பத்தி எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்க தீமோத்தேயு ஆசைப்பட்டார்.
தீமோத்தேயு வளர்ந்த பிறகு, ‘வேற ஊருக்குப் போய் கடவுளை பத்தி சொல்லிக் கொடுக்க போறேன். என்கூட வருவியா?’னு பவுல் ஒருநாள் கேட்டார். ‘சரி வரேன்’னு தீமோத்தேயு சந்தோஷமா சொன்னார். வேற வேற ஊருக்குப் போய் கடவுளை பத்தி சொல்லிக் கொடுக்க அவருக்கு அவ்ளோ பிடிச்சிருந்தது!
கிரீஸ் நாட்டுல தெசலோனிக்கேயா-னு ஒரு ஊர் இருந்தது. பவுல்கூட தீமோத்தேயுவும் அந்த ஊருக்குப் போனார். அந்த ஊருக்குப் போக ரொம்பத் தூரம் நடக்கணும். அப்புறம் படகுல ஏறி போகணும். பவுலும் தீமோத்தேயுவும் அந்த ஊர்ல நிறைய பேருக்கு கடவுளை பத்தி சொல்லிக் கொடுத்தாங்க. அதை பார்த்து சிலபேருக்கு பயங்கர கோபம் வந்துச்சு. பவுலையும் தீமோத்தேயுவையும் அடிக்க வந்தாங்க. அதனால அவங்க அங்கே இருந்து கிளம்பி, வேற ஊருக்குப் போய் கடவுளை பத்தி சொன்னாங்க.
தீமோத்தேயு சந்தோஷமா இருக்கிறார்
சில மாசத்துக்கு அப்புறம், தீமோத்தேயுவை பவுல் தெசலோனிக்கேயாவுக்கு போக சொன்னார். ‘நம்ம நண்பர்கள் எல்லாம் எப்படி இருக்காங்கனு பார்த்துட்டு வா’னு சொன்னார். தெசலோனிக்கேயா ரொம்ப பயங்கரமான ஊரு. அங்கே போக ரொம்பத் தைரியம் வேணும். அங்கே இருந்த நண்பர்கள் மேல தீமோத்தேயுவுக்கு ரொம்ப அன்பு. அதனால அந்த ஊருக்கு போனார். அவங்களை பார்த்துட்டு வந்து, அவங்க நல்லா இருக்காங்கனு பவுல்கிட்ட சொன்னார்.
நிறைய வருஷம் பவுல்கூட சேர்ந்து தீமோத்தேயு பல ஊர்களுக்குப் போனார். எல்லாருக்கும் கடவுளை பத்தி சொல்லிக்கொடுத்தார். ‘சபையில இருக்கிறவங்களுக்கு உதவி செய்ய தீமோத்தேயு மாதிரி நல்ல பையன் யாருமே இல்லை’னு பவுல் ஒரு கடிதத்தில எழுதினார். தீமோத்தேயு யெகோவாகிட்ட அன்பா இருந்தார். மத்தவங்க மேலயும் பாசமா இருந்தார்.
உனக்கும் மத்தவங்க மேல அன்பு இருக்குதா, யெகோவாவை பத்தி அவங்களுக்கு சொல்லிக் கொடுப்பியா?— அப்படிச் செய்தா தீமோத்தேயு மாதிரி நீயும் ரொம்ப சந்தோஷமா இருக்கலாம்.