உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ll பகுதி 3 பக். 8-9
  • ஆரம்பத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆரம்பத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது?
  • கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
  • இதே தகவல்
  • மேலானவர் ஒருவர் இருக்கிறார்
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • நம்மைவிட உயர்ந்தவர்கள்
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • தங்கள் வீட்டை ஏன் இழந்தார்கள்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • சாத்தான் சொன்னதைக் கேட்டதால் என்ன ஆனது?
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
மேலும் பார்க்க
கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள்
ll பகுதி 3 பக். 8-9

பாகம் 3

ஆரம்பத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது?

ஆதாம்-ஏவாளுக்குத் தேவையான எல்லாவற்றையும் யெகோவா கொடுத்தார். ஆதியாகமம் 1:28

ஏவாளைப் படைத்த பிறகு, அவளை ஆதாமிடம் யெகோவா கொடுக்கிறார்

யெகோவா ஒரு பெண்ணைப் படைத்தார். அவள் பெயர் ஏவாள். அவளை ஆதாமுக்கு மனைவியாக கொடுத்தார்.—ஆதியாகமம் 2:21, 22.

மனதிலும் உடலிலும் எந்தக் குறையும் இல்லாமல் யெகோவா அவர்களைப் படைத்தார்.

ஆதாமும் ஏவாளும் அவர்கள் வாழ்ந்த பூஞ்சோலையை ரசிக்கிறார்கள்

ஏதேன் என்ற அழகான தோட்டத்தில் அவர்கள் குடியிருந்தார்கள். அதில் ஒரு ஆறு ஓடியது, விதவிதமான பழ மரங்கள், விலங்குகள் இருந்தன.

யெகோவா அவர்களிடம் பேசினார், அவர்களுக்கு நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார். அவர் சொன்னதைக் கேட்டிருந்தால், பூஞ்சோலை பூமியில் சாகாமல் என்றென்றும் வாழ்ந்திருப்பார்கள்.

ஒரேவொரு மரத்தில் இருக்கிற பழத்தை மட்டும் சாப்பிடக் கூடாது என்று கடவுள் சொன்னார். ஆதியாகமம் 2:16, 17

தோட்டத்திலிருந்த இந்த மரத்தின் பழத்தைத்தான் ஆதாமும் ஏவாளும் சாப்பிடக் கூடாது என்று யெகோவா சொல்லியிருந்தார்

ஆதாம்-ஏவாளிடம் யெகோவா ஒரு மரத்தைக் காட்டி, ‘இந்த மரத்தில் இருக்கிற பழத்தைச் சாப்பிடாதீர்கள், சாப்பிட்டால் செத்துப்போய்விடுவீர்கள்’ என்று சொன்னார்.

கெட்ட தூதனான பிசாசாகிய சாத்தான், ஏவாளிடம் பேச ஒரு பாம்பைப் பயன்படுத்துகிறான்

ஒரு தேவதூதன் கடவுளுக்கு எதிரியாக மாறினான். அந்தக் கெட்ட தூதன்தான் சாத்தான்.

கடவுள் சொன்னதை ஆதாம்-ஏவாள் கேட்கக் கூடாது என்று சாத்தான் நினைத்தான். அதற்காக, ஒரு பாம்பின் மூலம் ஏவாளிடம் பேசினான். ‘அந்தப் பழத்தைச் சாப்பிட்டால், நீங்கள் சாகவே மாட்டீர்கள், கடவுள் மாதிரி ஆகிவிடுவீர்கள்’ என்று சொன்னான். அது சுத்தப் பொய்.—ஆதியாகமம் 3:1-5.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்