அதிகம் தெரிந்துகொள்ள ஆசையா?
இச்சிற்றேடு பைபிள் செய்தியை விறுவிறுப்பான நடையில், சுருக்கமாய் தொகுத்து வழங்குகிறது. பைபிளில் உள்ள எல்லா விஷயங்களையும் விலாவாரியாக எடுத்துரைப்பது இதன் நோக்கமல்ல.
பின்வரும் கேள்விகளுக்கு பைபிள் தரும் பதில்களைத் தெரிந்துகொள்ள ஒருவேளை நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள்: என்மீது கடவுளுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா? சாகும்போது நமக்கு என்ன நடக்கிறது? நான் எப்படிச் சந்தோஷமாக வாழலாம்?
இதற்கும் வேறுபல கேள்விகளுக்கும், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் (யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது) பதில்களைத் தெரிந்துகொள்ளலாம். பைபிளில் உள்ள பல்வேறு விஷயங்களைத் தலைப்புவாரியாகப் படிப்பதற்கு வசதியாக இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தந்த தலைப்புக்குப் பொருத்தமான பைபிள் வசனங்களைக் கண்டுபிடிக்கலாம். இங்குள்ள கூப்பனைப் பூர்த்திசெய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பி இப்புத்தகத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தப் பிரசுரத்தை வாசிக்க, டவுன்லோட் செய்ய அல்லது இலவசமாக பைபிளைப் பற்றித் தெரிந்துகொள்ள www.jw.org-ஐப் பாருங்கள்.