‘அவர்களை சந்தித்தது இன்பமான அனுபவம்!’
ஜப்பானில் ஒரு சர்வதேச விமான நிலையத்தின் அருகே இருந்த ஒரு ஹோட்டலின் ஜெனரல் மானேஜர் அண்மையில் எபினாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தைப் பார்க்கச் சென்றார். அவர் மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். ஏன் என்று தெரியுமா?
1998-ம் ஆண்டில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கொரியா, வட அமெரிக்கா ஆகிய இடங்களில் நடந்த சர்வதேச மாநாடுகளுக்குச் சென்ற 200-க்கும் மேற்பட்ட சாட்சிகள், மாநாடுகளுக்குப் போகும் வழியிலும் வரும் வழியிலும் இவருடைய ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். ஹோட்டலின் பணியாளர்கள் தங்களுடைய கடந்த ஆண்டு சாதனைகளை கலந்துபேச கூடியபோது, ஹோட்டலில் அந்த ஆண்டு தங்கிய 30,000 பேரில் அங்கு வந்து தங்கிய மாநாட்டு பிரதிநிதிகளே தங்களை மிகவும் கவர்ந்ததாக அவர்கள் கூறினார்கள்.
ஆகவே, இவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்பிய ஹோட்டல் மானேஜர் எபினாவுக்கு பயணப்பட்டார். ‘இவர்கள் மிகவும் மரியாதையுடன் நடந்துகொண்டார்கள். தங்களுடைய அறையை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் விட்டுச் சென்றார்கள். அடிக்கடி நன்றி தெரிவித்தார்கள். அதைவிட பைபிளிலிருந்து உற்சாகமான வார்த்தைகளை வாசித்துக் காண்பித்தார்கள். அவர்களை சந்தித்தது இன்பமான அனுபவம்!’ என்றார் அவர்.
‘பிரச்சினைகளில் தவித்துக்கொண்டிருக்கும் பலர் எங்கள் ஹோட்டலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் தகவல் கிடைக்குமா என்று நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். பைபிளின் போதனை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதால் அவர்கள் அதிலிருந்து பயன்பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.’
அதனால், யெகோவாவின் சாட்சிகளுடைய பல்வேறு பிரசுரங்களின் 80 பிரதிகளை மானேஜர் கேட்டு பெற்றுக்கொண்டார். ஹோட்டலில் வந்து தங்குபவர்களுக்கு அவற்றை கொடுக்க விரும்புவதாக அவர் கூறினார். அவர் கேட்டு பெற்றுக்கொண்ட புத்தகங்களில் ஒன்று குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற 192-பக்க புத்தகம். நீங்கள் வசிக்கும் இடத்திலுள்ள எங்களுடைய பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைப்பதன் மூலம் இந்தப் பிரசுரத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நீங்கள் விரும்பினால், இந்தக் கூப்பனை பூர்த்திசெய்து கீழ்கண்ட விலாசத்திற்கோ அல்லது இப்பத்திரிகையின் 5-ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ எழுதி அனுப்பலாம்.
◻ என்னை சந்திப்பதற்கு உங்களுடைய பிரதிநிதிகளில் ஒருவரை அனுப்பி வையுங்கள்.
□ இலவசமாக பைபிளைக் கற்றுக்கொடுக்க தயவுசெய்து என்னை தொடர்புகொள்ளுங்கள்.