நாத்திகர் கண்ட விடை
“தங்களின் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! என்ற இந்த இரண்டு பத்திரிகைகள் கொண்டிருக்கும் விஷயங்கள் அப்பப்பா. . . வியக்க வைக்கிறது. உங்களுடைய சமீபத்திய பத்திரிகைகள் கிடைத்தவுடன் படிக்க சொல்லுமளவிற்கு அது உற்சாகத்தை அளிக்கின்றது. அதைப் படிப்பதனால் அநேக கேள்விகளுக்கு விடை காண முடிகிறது. அதனால் மனநிம்மதியும் கிடைக்கிறது.”
தென் இந்தியாவிலிருந்து ஒரு வாசகர் தெரிவித்த கருத்துக்களே இவை. அவர் இந்து குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், அவருடைய அப்பா அவரை ஒரு நாத்திகராகவே வளர்த்தார். அவர் இப்படியாக எழுதுகிறார்: ‘மனித பிறப்பு அர்த்தமற்றதாக தோன்றினது. டார்வினுடைய தியரி பிதற்றலாக எனக்கு விளங்கினது. பல வருடங்களாக என் மனதிலிருந்த குழப்பமான எண்ணிலடங்கா கேள்விகள் குறிப்பாக, கடவுள் யார்? உலகம் ஏன் சீர்கேடாக இருக்கிறது? நாம் மரித்த பிறகு எங்கே போகிறோம்? ஆவிகள் உண்மையிலேயே இருக்கிறதா? மறுஜென்மம் என்று ஒன்று உண்டா? போன்ற எண்ணிலடங்கா கேள்விகள் அநேக வருடங்களாக என் மனதை குழப்பிக்கொண்டிருந்தன.’
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலை காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் கண்ட இந்த வாசகர், இந்த இரண்டு பத்திரிகைகளுக்கும் சந்தா செய்தார். அதோடு தன்னுடைய சகோதரிக்கு ஒரு பரிசு சந்தாவையும் அனுப்பினார். இப்போது யாரையெல்லாம் அவர் சந்திக்கிறாரோ அவர்களுக்கெல்லாம் இந்த பத்திரிகைகளை அளிக்கிறார். ஒரு புகைப்பட கலைஞராகவும் ஓவியராகவும், பத்திரிகைகளில் வரும் படங்களும் கலைநயம்மிக்க புகைப்படங்களும் “சொல்லாமலேயே சொல்லும்” அநேக அம்சங்களை பேசுவதாக வெகுவாக பாராட்டுகிறார். இந்த சிறந்த பத்திரிகைகளை வாசிப்பதன்மூலம், தங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் பெற்று, மன அமைதியை அனுபவிக்கிற உலகம் முழுவதுமுள்ள கோடிக்கணக்கானோரின் அணியில் நீங்களும் சேர்ந்துகொள்ளலாம்.
கடவுளைப் பற்றியும் நமக்காக அவருடைய நோக்கங்களைப் பற்றியும் கூடுதல் தகவல் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் வசிக்கும் இடத்திலுள்ள எங்களுடைய பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைப்பதன் மூலம் பெருமளவில் விநியோகிக்கப்பட்டுள்ள கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேட்டை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பின்வரும் கூப்பனை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கோ அல்லது பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கோ அனுப்பி வைக்கவும்.
□ கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?
□ என்னை சந்திப்பதற்கு உங்களுடைய பிரதிநிதிகளில் ஒருவரை அனுப்பி வையுங்கள்.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
அட்டை, பக்கங்கள் 2-9, 32: ஐன்ஸ்டீன்: U.S. National Archives photo; மாடல்-T ஃபோர்ட்: From the Collections of Henry Ford Museum & Greenfield Village; பொருளாதார சீர்குலைவு: Dorothea Lange, FSA Collection, Library of Congress; இரண்டாம் நிகோலஸும் அவரது குடும்பமும்: From the book Liberty’s Victorious Conflict; சர்வதேச சங்க கட்டிடம்: U.S. National Archives photo; சர்ச்சில்: The Trustees of the Imperial War Museum (MH 26392); போர்க்கப்பல்: U.S. Navy photo; அணுகுண்டுகள்: USAF photo; காந்தி: Culver Pictures; சந்திரனில் மனிதன்: NASA photo; தூய்மைக்கேடு: Godo-Foto; மா சே-துங்: Culver Pictures; ஆப்பிரிக்க பிள்ளைகள்: FAO photo/F. Botts; லெனின் சிலை: Juraatis/Sipa Press; விண்வெளிக்கலம்: NASA photo; இளவரசர் ஃபெர்டினான்ட்: From the book The War of the Nations; லெனின்: Musée d’Histoire Contemporaine-BDIC