உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 11/22 பக். 32
  • “என் நேரத்தை வீணாக்கவில்லை”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “என் நேரத்தை வீணாக்கவில்லை”
  • விழித்தெழு!—1999
விழித்தெழு!—1999
g99 11/22 பக். 32

“என் நேரத்தை வீணாக்கவில்லை”

“நான் செய்தித்தாள்களையும், நாவல்களையும், கவிதைகளையும் விரும்பி படிப்பேன். ஆனால் விழித்தெழு! பத்திரிகையை தொட்டுக்கூடப் பார்த்ததில்லை. அதில் எனக்கு இன்டரஸ்ட் இருந்ததில்லை. யெகோவாவின் சாட்சிகள் வருவதை பார்த்தால், என் சின்ன அப்பார்ட்மெண்டின் கதவை சாத்திவிட்டு, உள்ளே சத்தம் போடாமல் இருப்பேன். ஏனென்றால் அவர்கள் வீட்டில் யாரும் இல்லையென்று போய்விடுவார்கள். அல்லது, பத்திரிகைகளை சட்டுபுட்டுணு வாங்கிவிட்டு அவர்களை உடனே அனுப்பிவிடுவதற்காக அவர்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியிருப்பேன். ஆனால் பத்திரிகைகளை படிக்கவே மாட்டேன். எங்கேயாவது மூலையில் தூக்கி எறிந்துவிடுவேன்” என்று வடக்கு பிரேஸிலை சேர்த்த ஒருவர் எழுதினார்.

“ஒருநாள் படிப்பதற்கு எதுவும் கிடைக்கவில்லை. அப்போது, செப்டம்பர் 22, 1997, விழித்தெழு! கண்ணில்பட்டது. எடுத்து படித்தேன். அதன் தலைப்பு கட்டுரை ‘ஜாக்கிரதை! மோசடிக்காரர்கள் தீவிரம்.’ அதில் தெளிவாக விஷயத்தை சொன்ன விதமும் போதனையும் மனசுக்குள் மகுடி வாசித்தன. உடனே, இதற்கு முன் வாங்கிய பத்திரிகைகளை எல்லாம் தேட ஆரம்பித்தேன். அவற்றை வீட்டில் அங்கே இங்கே என்று தூக்கி போட்டிருந்தேன். பிறகு யெகோவாவின் சாட்சி ஒருவரை சந்தித்து, விழுத்தெழு! பத்திரிகைக்கு சந்தா எடுத்தேன். கடந்த எட்டு மாதங்களாக பத்திரிகைகளை தொடர்ந்து பெற்று, வாசித்து வருகிறேன். என் நேரத்தை வீணாக்கவில்லை.”

மக்கள் விடைகாண துடிக்கும் தலைப்புகளில் பல பிரசுரங்களை யெகோவாவின் சாட்சிகள் வெளியிடுகிறார்கள். பலர் இவ்வாறு கேட்கின்றனர்: “கடவுளுக்கு மனிதர்கள்மீது உண்மையில் அக்கறை உள்ளதா? இருந்தால், ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்? துன்பம் ஒழிந்துவிடுமா?” இக்கேள்விகளுக்கான விடைகளை 32 பக்க சிற்றேட்டில் காணலாம். அதன் தலைப்பு: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? நீங்கள் வசிக்கும் இடத்திலுள்ள எங்களுடைய பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைப்பதன் மூலம் இப்பிரசுரத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நீங்கள் விரும்பினால், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கோ அல்லது இந்தப் பத்திரிகையில் 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசங்களில் ஒன்றிற்கோ அனுப்புங்கள்.

□ கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?

□ என்னை சந்திப்பதற்கு உங்களுடைய பிரதிநிதிகளில் ஒருவரை அனுப்பி வையுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்