உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 10/8 பக். 11
  • உங்களுக்குத் தெரியுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்குத் தெரியுமா?
  • விழித்தெழு!—1999
விழித்தெழு!—1999
g99 10/8 பக். 11

உங்களுக்குத் தெரியுமா?

(இந்த வினாடிவினாவுக்கான விடைகளை, கொடுக்கப்பட்டுள்ள பைபிள் இடக்குறிப்புகளில் காணலாம், விடைகளின் முழுப் பட்டியல், பக்கம் 14-⁠ல் காணப்படுகிறது. கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட, “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)

1. வனாந்தரத்தில் இரண்டாவது தடவை கணக்கெடுக்கப்பட்டபோது, எந்த இஸ்ரவேல் கோத்திரத்தில், இராணுவ சேவைக்கு தகுதிபெற்றவர்களின் எண்ணிக்கையில் ‘தடாலென’ சரிவு​—⁠60 சதவீதத்திற்கும் மேலாக​—⁠ஏற்பட்டது? (எண்ணாகமம் 1:23; 26:⁠14)

2. உயிர்த்தெழுந்தவர்கள் என்ன செய்யப்போவதில்லை என்று இயேசு சொன்னார்? (லூக்கா 20:⁠35)

3. நீதிமொழிகள் 30-⁠ம் அதிகாரத்தில் காணப்படும் வசனிப்பை ஆகூர் யார் யாரிடம் சொன்னார்? (நீதிமொழிகள் 30:1)

4. கடவுளுடைய சித்தத்தைச் செய்ய எதைப் புதிதாக்க வேண்டும் என்று பவுல் கூறினார்? (ரோமர் 12:2)

5. கிறிஸ்தவர்களை துன்புறுத்த வேண்டாம் என்று கோரி ஆலோசனை சங்கத்தாரின் எண்ணத்தை மாற்ற முயலுகையில் யார் யாரை கமாலியேல் உதாரணமாக காட்டினார்? (அப்போஸ்தலர் 5:34-40)

6. மரியாளை “அவமானப்படுத்த” மனதில்லாத யோசேப்பு என்ன செய்ய யோசனையாயிருந்தார்? (மத்தேயு 1:19)

7. ‘லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் . . . கர்த்தரிடத்தில் திரும்பினது’ எதனால்? (அப்போஸ்தலர் 9:34, 35)

8. பரிசேயரும் சதுசேயரும் இயேசுவை எவ்வாறு சோதிக்க முயன்றனர்? (மத்தேயு 16:1)

9. தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களை யெகோவா என்ன செய்தார்? (யூதா 6)

10. கடவுளுடைய சாயலில் மனுஷனை சிருஷ்டித்தார் என்பதன் அர்த்தம் என்ன? (ஆதியாகமம் 1:27)

11. என்ன அர்த்தத்தில் பூமி தனக்குப் பாதபடி என்று கடவுள் சொன்னார்? (ஏசாயா 66:1)

12. கிலெயோப்பாவும் மற்றொரு சீஷனும் எங்கு போய்க்கொண்டிருந்தபோது, சரீரத்தில் தோன்றிய இயேசுவும் அவர்களோடுகூட நடந்துசென்றார்? (லூக்கா 24:13)

13. நாம் ‘உத்தமமாய் நடந்தால்,’ என்ன நம்பிக்கை இருக்கிறது? (சங்கீதம் 84:11)

14. எந்தத் தொழில் இருவருக்குமே தெரிந்திருந்ததால் பவுல் ஆக்கில்லாவின் வீட்டில் தங்கினார்? (அப்போஸ்தலர் 18:3)

15. ஆபிரகாமின் குமாரனான இஸ்மவேல் எத்தனை குமாரர்களைப் பெறுவான் என்பதாக கடவுள் முன்னுரைத்தார்? (ஆதியாகமம் 17:20; 25:16)

16. பார்வோனின் அனுமதியுடன் எகிப்துக்குப் போன “யாக்கோபின் குடும்பத்தார்” எத்தனை பேர்? (ஆதியாகமம் 46:27)

17. மிகவும் சிறியவராகிய தம் சகோதரரில் ஒருவனுக்கு நன்மை செய்பவர்களை இயேசு எதற்கு ஒப்பிட்டார்? (மத்தேயு 25:31-45)

18. கிரேக்க மொழியின் அகரவரிசை எழுத்துக்களில், முதலும் கடைசியுமான எந்த எழுத்துக்கள் கடவுளுக்குப் பட்டமாக சூட்டப்பட்டுள்ளன? (வெளிப்படுத்துதல் 1:8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்