“என் மிகப் பெரிய ஆசை”
யூகோஸ்லாவியாவில் வரானி என்ற இடத்திலுள்ள வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டுரை தலைப்புதான் இது. பின்வரும் இந்தக் கட்டுரை சிர்ஜியா என்ற எட்டு வயது சிறுவனால் எழுதப்பட்டது. இவன் எழுதிய இந்தக் கட்டுரை மற்றவர்களும் வாசிப்பதற்காக பிற்பாடு பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்டிவைக்கப்பட்டது.
“நிறைய மார்க்கு வாங்கி என் பள்ளிக்கூட படிப்பை முடித்து லீவுக்கு பெல்கிரேடுக்குப் போக வேண்டும் என்பதே என் மிகப் பெரிய ஆசை என முதலில் எழுத விரும்பினேன். ஆனால் வீட்டில் வேறொன்றைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய மிகப் பெரிய ஆசை என்னவென்றால், முழு உலகமும் சமாதானமாயிருக்க வேண்டும், எல்லா மக்களும் சந்தோஷமாக வாழ வேண்டும், ஒருவருக்கொருவர் அன்புகாட்டி உதவிசெய்ய வேண்டும். எல்லா மக்களும் நல்ல சுகத்தோடு வாழ வேண்டும். நம்முடைய பூமி இப்பொழுது இருப்பதைவிட ரொம்ப தூய்மையாக இருக்க வேண்டும் என்றும் நான் ஆசைப்படுகிறேன்.
“இன்று இந்த பூமி இரசாயனங்களால் மாசுபட்டிருக்கிறது. தண்ணீரும் காற்றும்கூட அசுத்தமாக்கப்பட்டிருக்கிறது. இந்த உலகில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பசியால் இறந்துகொண்டிருக்கிறார்கள். வியாதியின் காரணமாகவும் அநேகர் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாமே நீங்க வேண்டும் என விரும்புகிறேன். எல்லா பிள்ளைகளுக்கும் பெற்றோரின் அன்பு கிடைக்க வேண்டும். அப்போதுதான், விடியப்போகும் ஒவ்வொரு புதிய நாளும் நல்ல நாளாக இருக்கும் என அறிந்து சந்தோஷத்துடன் அவர்களால் தூங்க செல்ல முடியும். இந்த உலகத்தில் இது நடக்காத காரியம், ஆனால் எதிர்காலத்தில் இது நடக்கும். இதுவே என் மிகப் பெரிய ஆசை.”
இந்தக் காரியங்கள் நிறைவேற்றப்படும் என்பதில் சிர்ஜியா நம்பிக்கையோடு இருப்பதற்கு காரணம் என்ன? பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள கடவுளின் வாக்குறுதிகளில் அவன் நம்பிக்கை வைக்கிறான். கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற புரோஷரில் “கடவுள் உருவாக்கும் மகத்தான புதிய உலகம்” என்று தலைப்பிடப்பட்ட பகுதியில் கடவுளின் வாக்குறுதிகள் விவரிக்கப்படுகிறது. கீழே உள்ள கூப்பனில் கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கோ அல்லது இந்த பத்திரிகையின் 5-ம் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ பூர்த்திசெய்து அனுப்பினால் இந்த புரோஷரின் ஒரு பிரதியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
□ “கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?” என்ற புரோஷரை எனக்கு அனுப்புங்கள்.
□ இலவசமாக பைபிளைக் கற்றுக்கொடுக்க தயவுசெய்து என்னை தொடர்புகொள்ளுங்கள்.