உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 9/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1999
  • இதே தகவல்
  • “இந்த விழித்தெழு! எங்களுக்கென்றே எழுதப்பட்டது”!
    விழித்தெழு!—1999
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2005
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1998
  • உணவே உங்களுக்கு எதிரியாகுமா?
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 9/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

இயேசுவின் தாடி “இயேசு—பார்ப்பதற்கு எப்படி இருந்தார்? இப்போது என்ன செய்கிறார்?” (டிசம்பர் 8, 1998) என்ற தொடர்கட்டுரையில் வந்த படங்கள், லேவியராகமம் 19:27-⁠ல் உள்ள நியாயப்பிரமாண சட்டத்தை இயேசு மீறினார் என சுட்டிக்காட்டுவதாக உள்ளன. “உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்” என்பதாக அந்த வசனம் குறிப்பிடுகிறது. உங்கள் படங்களில் இயேசு, கத்தரிக்காத நீளமான தலைமுடியோடு இருப்பதாக ஏன் காணப்படுவதில்லை?

கே. எஸ்., இங்கிலாந்து

தங்களுடைய தாடியை அல்லது தலைமுடியை கத்தரிப்பதில், யூதர்கள் பொய்மத பழக்கங்களை பின்பற்றுவதைத் தவிர்க்கவே இந்தச் சட்டம் கொடுக்கப்பட்டது. இருந்தாலும், யூதர்கள் தங்களுடைய தாடியையோ அல்லது தலைமுடியையோ கத்தரிக்கவே கூடாது என்பதை கடவுளுடைய சட்டம் அர்த்தப்படுத்தவில்லை. பொதுவாக, யூதர்கள் தங்களுடைய தாடியை “சவரம்” செய்தனர் என 2 சாமுவேல் 19:24-⁠ல் உள்ள பதிவு சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் எந்தளவு செய்தார்கள் என்பது அப்போது நிலவிய பழக்கங்களை சார்ந்தே இருந்தது. பல நூற்றாண்டுகளாக, யூதர்கள் பலவிதங்களில் தாடி வைத்திருந்தனர் என தொல்பொருள் ஆராய்ச்சியின் ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, சீராக வெட்டப்பட்ட குறுந்தாடியும் கத்தரிக்கப்பட்ட தலைமுடியுடன் கூடிய இயேசுவின் படங்கள், ஆதாரங்களுக்கு இசைவாகவே இருக்கின்றன.​—⁠ED.

குறுங்கோள் மோதல்

“குறுங்கோள்கள், வால்நட்சத்திரங்கள், பூமி​—⁠மோதிக்கொள்ளும் பாதையில்?” என்ற தலைப்பில் ஜனவரி 22, 1999, இதழில் வெளிவந்த கட்டுரைக்கு மிக்க நன்றி. பூமியை அச்சுறுத்தும் அபாயத்தைப் பற்றி நம்பத்தகுந்த விளக்கத்தை அக்கட்டுரை அளித்தது. அப்படிப்பட்ட நாசங்கள் ஏதும் நடக்காததற்கு, யெகோவாவுக்கு நன்றி. சுற்றி வளைக்காமல் நேரடியாகவும் நேர்மையோடும் அக்கட்டுரை விளக்கியதை நான் மனதாரப் போற்றினேன்.

ஓ. ஆர்., பின்லாந்து

அழகா ஆரோக்கியமா? ஜனவரி 22, 1999, இதழில் வெளிவந்த “அழகா ஆரோக்கியமா?” கட்டுரை என் உயிரை உண்மையிலேயே காப்பாற்றியது. சாப்பிடும் பழக்கத்தில் உள்ளக் கோளாறுகளால் 20 வருடங்களுக்கு முன்பு நான் அவதிப்பட்டேன். பிறகு, கடந்த பத்து ஆண்டுகளாக சராசரி எடையை காத்துவருகிறேன். இருந்தாலும், சமீபத்தில் மன உளைச்சலால் அவதிப்பட்டு, 16 நாட்களில் ஐந்து கிலோ குறைந்துவிட்டேன். உணவை வாயில் போடும் ஒவ்வொரு தடவையும் மூச்சுத்திணற ஆரம்பித்தேன். எனக்கு என்ன ஆகுமோ என்று ரொம்ப பயந்தேன். என்னுடைய நிலையை நன்கு ஆராய்ந்து, சரியான சத்துள்ள உணவை சாப்பிட தீர்மானம் எடுக்க அந்த கட்டுரை எனக்கு உதவியது. உங்களுடைய கனிவான, அன்பான கட்டுரைகளுக்கு என் இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவிக்கிறேன்.

பி. எம்., ஐக்கிய மாகாணங்கள்

நான் அந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போதே, என் கண்களில் கண்ணீர் திரண்டுவிட்டது. அந்தக் கட்டுரைகள் எனக்காகவே எழுதப்பட்டதுபோல் தோன்றின. அவை என் இருதயத்தில் ஆழப் பதிந்தன. மேலும், யெகோவாவின் மேல் தொடர்ந்து சார்ந்திருந்தால், இந்த வியாதியிலிருந்து நான் மீள முடியும் என்பதை நான் புரிந்துகொள்ளவும் அந்தக் கட்டுரைகள் உதவின.

ஜி. ஜி., பியூர்டோ ரிகோ

நான் 14 வயது பெண். சாப்பிடும் பழக்கத்தில் உள்ள கோளாறுகளைப் பற்றிய கட்டுரைகளுக்காக உளமார நன்றி சொல்லுகிறேன். புளுமியாவின் ஆரம்பக் கட்டத்தில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏனென்றால், இதைப் பற்றிய புத்தகங்கள் எதுவுமே எனக்கு உதவவில்லை. என் நிலையை என் பெற்றோர் கவனித்து, இந்தக் கட்டுரைகளைப் பற்றி என்னிடம் பேசினார்கள். மிக்க நன்றி!

என். ஹெச்., ஜெர்மனி

ஒன்றரை வருடங்களுக்கு முன், நான் புளுமியாவில் அவதிப்பட்டேன். வெயிட் ஜாஸ்தியாக இல்லாதபோதிலும், நான் குண்டாக இருப்பதாக நினைத்தேன். லபக் லபக்கென்று விழுங்கிவிட்டு அதை வாந்திப்பண்ணுவது தவறு என்று தெரிந்தும், என்னால் அதை நிறுத்த முடியவில்லை. யெகோவாவின் உதவியாலும், நெருங்கிய நண்பர்கள் உற்சாகமூட்டியதாலும் ஓரளவு குணமடைந்தேன். அந்தக் கட்டுரைகள் எனக்கு மிகவும் உதவின. இப்படிப்பட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டது நான் மட்டுமே அல்ல என்பதை தெரிந்துகொண்டேன்.

எம். ஆர்., இங்கிலாந்து

நான் இரண்டு வருடங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படித்தேன். பிறகு, மன உளைச்சல் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டேன். நான் புளுமியாவால் அவஸ்தைப்படுகிறேன். எல்லா நேரமும் மருத்துவ உதவி எனக்கு தேவைப்படுவதால், இந்தப் பத்திரிகையை என்னுடைய டாக்டர்களுக்கும் மற்ற நோயாளிகளுக்கும் விநியோகிக்க நான் விரும்புகிறேன். மறுபடியும் பைபிள் படிப்பை துவக்க தீர்மானித்திருக்கிறேன்.

வி. கே., செக் குடியரசு

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்