நம்பிக்கையின் செய்தியை கேட்க வாரீர்!!!
“முன்னறிவித்தபடி சகலத்தையும் புதிதாக்குதல்,” என்ற பேச்சில் இந்த செய்தியைத் தான் கேட்பீர்கள். இந்த வருடத்தில் நடக்கவிருக்கும் யெகோவாவின் சாட்சிகளின் மாவட்ட மாநாட்டின் பொதுப் பேச்சுக்கான தலைப்பு இதுவே. மாநாட்டின் பொருள் “கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை.” வருடம் இரண்டாயிரத்தில் மனிதகுலம் முழுவதற்குமே மகத்தான ஆசீர்வாதம் காத்திருக்கிறதென அநேகர் நம்புகின்றனர்.
“இரண்டாயிரமாவது ஆண்டு என்றாலே, கடந்த நூற்றாண்டில் நடந்த கொடூரங்கள் அனைத்திற்கும் நாம் பொறுப்பல்ல எனக் கை கழுவி விடுவதே அதன் அர்த்தம்” என்று பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் குறிப்பிடுகிறார். “எல்லா வருடங்களைப் போலவே வருடம் 2000-ம் சாதாரணமாக காலண்டரில் வரும் ஒரு வருடமே. இருந்தாலும், “இதனால் சமுதாயத்திற்கு ஒரு புதிய ஆரம்பம் இருக்கலாம்” என மாக்லீன்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது. ஆனால், அப்படிப்பட்ட நிலை ஏற்படுவது சாத்தியமல்ல என்பதை நம்முடைய அனுபவம் காட்டுகிறது.
“புதிய ஆரம்பத்தை” கொண்டு வருவதற்கான மனிதனின் முயற்சிகள் அனைத்தும் முற்றிலும் தோல்வியே அடைந்துள்ளன. அப்படி என்றால், “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” என கடவுள் 1,900 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த வாக்குறுதியை நாம் நம்பலாமா? (வெளிப்படுத்துதல் 21:5) திருப்தி அளிக்கும் காரணங்கள் இந்த உற்சாகமளிக்கும் பேச்சில் அளிக்கப்படும். இந்த மாதத்தில் இருந்து, உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மாநாடுகளில் இந்தப் பேச்சு கொடுக்கப்படும். உங்களுக்கு அருகில் மாநாடு நடைபெறும் ஓர் இடத்தில் நீங்களும் இந்தப் பேச்சைக் கேட்டு மகிழலாம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த மாநாடு இந்தியா முழுவதும் 27 இடங்களில் நடக்க இருக்கிறது.
உங்களுக்கு அருகில் மாநாடு நடக்கும் இடத்தை தெரிந்து கொள்ள உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளையோ அல்லது இந்தப் பத்திரிகையை பிரசுரிப்பவர்களையோ அணுகுங்கள்.