“ஜனங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் நேசிக்கும் காலம் வருமா?”
1997-ம் வருடம், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 30 கோடிக்கும் அதிகமான பிரதிகள் 100-க்கும் அதிகமான மொழிகளில் உலகமுழுவதிலும் விநியோகிக்கப்பட்டது. அது என்ன? “எல்லா மக்களும் ஒருவரையொருவர் நேசிக்கும் காலம் வருமா?” என்ற நான்கு பக்க துண்டுப்பிரதியே. அநேகர் அதைப் புகழ்ந்தனர். அதுமட்டுமல்ல, அ.ஐ.மா., பென்ஸில்வேனியாவிலுள்ள எஸ்டான் என்ற இடத்தில் பிரசுரமாகும் எக்ஸ்பிரஸ்-டைம்ஸ் என்ற பத்திரிகையில் பின்வரும் விமர்சனமும் இடம்பெற்றது:
“அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் ஒருவரில் ஒருவர் அக்கறை காட்டாமல் சில சமயங்களில் ஒருவரையொருவர் கொலையும்கூட செய்ய துணிகிறார்கள் என்பதை அது உதாரணங்களுடன் சுட்டிக்காட்டுகிறது. போஸ்னியா-ஹெர்சகோவினா, ருவாண்டா போன்ற இடங்களில் இதுதான் நடந்தது அல்லவா? பல்வேறு மதங்களையும் இனங்களையும் சேர்ந்த முன்னாள் நண்பர்கள் பகைவர்களாகி ஒருவரையொருவர் கொன்று குவித்தனர்.
“கவனித்துக்கொள்ள ஆள் இல்லாமல் வயதானவர்கள் தனியாக வாழ்வதைப் பற்றியும் அது குறிப்பிட்டது. அவர்களை யாருமே போய் பார்ப்பதில்லை. இது நம்ம ஊரில் சர்வ சாதாரணமல்லவா? அதோடு, செயின்போட்ட கதவுக்கு பின்னாலிருந்து ஒரு பெண் பயம் நிறைந்த முகத்துடன் எட்டிப் பார்ப்பதை மற்றொரு படம் தத்ரூபமாக காட்டுகிறது.”
தத்துவ புத்தகங்கள் கிளப் இம்பிரஷே என்ற கிளப்பிலிருந்து ஸ்லோவினியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகத்திற்கு இந்தக் கடிதம் வந்தது: “ஸ்லோவினியாவில் மத சத்தியங்களை விளக்குவதை ரோமன் கத்தோலிக்க மதம் குத்தகைக்கு எடுத்திருக்கிறது. இதுவே வருத்தகரமான உண்மை. இந்த மத சத்தியங்களை நாங்கள் நன்றாக புரிந்துகொள்ள உதவியாக, “எல்லா மக்களும் ஒருவரையொருவர் நேசிக்கும் காலம் வருமா?” என்ற துண்டுப்பிரதியில் 50-ஐ எங்களுக்கு அனுப்பிவைக்கும்படி பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம். அந்தச் செய்தி மட்டுமல்ல அதன் தத்ரூபமான படங்களும்கூட அலாதி என்றே தோன்றிற்று.”
எண்ணிறந்த மக்கள் ஒற்றுமையாக சமாதானத்துடன் வாழமுடியும் என்பதற்கான அத்தாட்சி உங்களுக்கும் வேண்டுமா? கீழ்க்காணும் கூப்பனைப் பூர்த்திசெய்து அனுப்பிவையுங்கள்.
◻ கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற புரோஷரை எனக்கு அனுப்பி வையுங்கள்.
◻ இலவசமாக பைபிளைக் கற்றுக்கொள்ளும் திட்டத்தைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.