விழித்தெழு!—“விலைமதிப்பற்ற இன்றியமையாத கருவி”
செப்டம்பர் 8, 1997 இதழில் வெளிவந்த ‘ஆர்எஸ்டி—குழப்பமூட்டும் வலிமிகுந்த ஒரு நோய்’ என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. நீதிமன்றத்தில் ரிப்போர்ட்டராக நான் பணி செய்வதால் பல்வேறு வகைப்பட்ட மற்றும் சிக்கலான பிரச்சினைகளைப் பற்றி வாக்குமூலம் கொடுக்கும்போது அவற்றைப் பதிவு செய்வதே என் வேலை. சமீபத்தில் வலியைக் கட்டுப்படுத்தும் துறையில் வல்லுனரான ஒரு உணர்வகற்றி மருத்துவர் (anesthesiologist) வாக்குமூலம் அளித்தபோது அதை நான் பதிவு செய்தேன். அவர் கொடுத்த முழு வாக்கு மூலமும் ஆர்எஸ்டி [Reflex Sympathetic Dystrophy] சம்பந்தப்பட்டது. நான் ஒழுங்காக விழித்தெழு! பத்திரிகையை வாசித்து வருவதால் அந்த நோய் பற்றிய வார்த்தைகள், சிகிச்சை முறைகள், போன்றவை எனக்கு சுலபமாகப் புரிந்தன; ஏனெனில் அவை செப்டம்பர் பிரதியில் தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு பிறகு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சில வழக்குரைஞர்களிடம் இந்தப் பிரதியை நான் அளித்தேன்.
“அறிவை பெருக்குவதற்காக நான் தொடர்ந்து எடுக்கும் முயற்சிகளில் விழித்தெழு! விலைமதிப்பற்ற இன்றியமையாத கருவி என்றே நான் கருதுகிறேன். அது எக்கச்சக்கமான விஷயங்களைப் பற்றி நான் நல்லவிதமாக அறிந்திருக்க உதவுகிறது.—ஜி. எம். எ.”
தற்சமயம் விழித்தெழு! 81 மொழிகளில் அச்சிடப்படுகிறது; நீங்கள் சமீபத்தில் வெளியான விழித்தெழு! பத்திரிகையின் ஒரு நகலை பெற்றுக்கொள்ள விரும்பினால் உங்கள் அருகில் உள்ள யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்பு கொள்ளுங்கள், அல்லது பக்கம் 5-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் விலாசத்தோடு தொடர்பு கொள்ளுங்கள்.