ஆரம்ப கால பைபிள் மொழிபெயர்ப்பு நிலைத்திருக்கிறது
உவில்லியம் டின்டேல் மொழிபெயர்த்த கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் 1526-ம் ஆண்டு பதிப்பு ஒன்றை பிரிட்டிஷ் லைப்ரரி 1994/95 ஆண்டுகளின்போது காட்சிக்கு வைத்தது; அது ஜெர்மனியில் வாம்ஸ் நகரில் அவர் சிறையில் இருந்தபோது அச்சிடப்பட்டது. இந்தப் புத்தகம் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரிஸ்டல் பாப்டிஸ்ட் காலேஜிலிருந்து கிட்டத்தட்ட 16,00,000 டாலருக்கு வாங்கப்பட்டது; ஏனெனில், இங்கிலாந்துக்குள் மொத்தமாக கடத்தப்பட்டிருந்த சுமார் 3,000 பிரதிகளை லண்டன் பிஷப்பின் தூண்டுதலால் எரித்தபோது அதில் தப்பிய ஒரே ஒரு முழுமையான பிரதியாக இது நம்பப்பட்டது. என்றாலும், இதே பதிப்பின் மற்றொரு முழுமையான பிரதி, ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட்டில் உள்ள லைப்ரரி ஒன்றில் இருப்பதாக தெரியவந்துள்ளது. சரிவர லேபல் இடப்படாமலும் கவனியாமல் விடப்பட்டும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் அப்படியே இருந்த இப் புத்தகம், முதல் முதல் செய்யப்பட்ட அதே பைண்டிங்கில் காணப்படுவதோடு, மதிப்புமிக்க தலைப்பைக்கொண்ட முன்பக்கத்துடனேயே காணப்படுகிறது.
[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]
ஆக்ஸ்போர்ட்டைச் சேர்ந்த ஹெர்ட்ஃபோர்ட் கல்லூரி முதல்வர், உயர் கலைக்கழக உறுப்பினர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோரது தயவான அனுமதியின் மூலம் பெறப்பட்டது
© Württ. Landesbibliothek/Fotograf: Joachim Siener