‘நீங்கள் மக்களுக்கு மகத்தான சேவை செய்கிறீர்கள்’
இந்தியாவிலிருக்கிற கோவாவில் ஒருவர் தன்னுடைய வீட்டில் தன்னை சந்தித்த இரண்டு யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து விழித்தெழு!-வின் இரண்டு பிரதிகளைப் பெற்றுக் கொண்டார். அவற்றை வாசித்த பிறகு, அப்பத்திரிகையின் பிரசுரிப்பாளர்களுக்கு அவர் பின்வரும் கடிதத்தை எழுதினார்:
“அன்றொரு நாள், என் வீட்டிற்கு வந்து விழித்தெழு! பத்திரிகையின் பிரதிகளை கொடுத்துச் சென்ற அந்த இரண்டு பெண்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவை மதப் பிரச்சாரப் பத்திரிகைகளென நினைத்துக்கொண்டு, கொஞ்ச நாளைக்கு நான் அவற்றை எடுத்து புரட்டிக்கூட பார்க்கவில்லை. ஆனால், ஒரு நாள் “அமேசான் மழைக்காடு” (மார்ச் 22, 1997) என்ற தலைப்பிலிருந்த ஒரு பத்திரிகையை எடுத்து நோட்டம் விட்டேன். அப்படியே அதைப் படிக்கவும் தொடங்கினேன். ஆனால், படிக்கப் படிக்க, ஒருவரியைக்கூட விட்டுவிடாமல், கவனமாகப் படித்து முடிக்கும்வரை அதை என்னால் கீழே வைக்க முடியவில்லை.
“விழித்தெழு!-வில் உள்ள விஷயங்கள் அதிக ஆர்வத்துக்குரியவையாகவும் தகவல் நிறைந்தவையாகவும் இருக்கக் கண்டேன். அதிலிருந்த வெவ்வேறு கட்டுரைகளும் என்னை கவர்ந்தன. பல்வேறு கட்டுரைகளை எதார்த்தமாகவும் சமநிலையாகவும் அணுகிய விதத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன்.”
விழித்தெழு!-வை முதல் தடவையாக வாசிக்கும் இவர் தொடர்ந்து சொன்னதாவது: “இத்தகைய மதிப்புமிக்க தகவல்களை மக்களுடைய வீடுகளுக்கே கொண்டுவருவதன் மூலம் நீங்கள் அவர்களுக்கு மகத்தான சேவை செய்கிறீர்கள்.”
விழித்தெழு!-வை வாசிப்பதன் மூலம் நீங்களும்கூட நன்மையடையலாம். நீங்கள் இப்பத்திரிகையின் மற்றொரு பிரதியை பெற்றுக்கொள்ள விரும்பினாலோ, பைபிளைக் கலந்தாலோசிக்க யாரேனும் ஒருவர் உங்களை வீட்டில் சந்திக்க விரும்பினாலோ தயவுசெய்து Praharidurg Prakashan Society, Plot A/35 Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410 401, Mah., India என்ற விலாசத்திற்கோ அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் பொருத்தமான விலாசத்திற்கோ எழுதுங்கள்.