“எனக்கு நாற்பது பிரதிகள் வேண்டும்—அவற்றை நான் விநியோகிப்பேன்”
ஜெர்மனியின் தென்பகுதியில் பைபிள் கல்வி புகட்டும் தங்களுடைய வேலையின் பாகமாக, வால்ஃப்காங்கும் அவருடைய மனைவி வால்ட்ரௌட்டும் பல சந்தர்ப்பங்களில் ஒரு நபரிடம் விழித்தெழு! பிரதிகளைக் காட்டியிருக்கின்றனர். காட்டும்போதெல்லாம், “ஏற்கெனவே எங்கிட்ட ஏராளமான புத்தகம் இருக்குதே” என்று சொல்லி அவர் மறுத்துவிடுவார்.
என்றாலும், நவம்பர் 22, 1996 தேதியிட்ட விழித்தெழு! வெளியீட்டில் இருந்த “யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய தப்பபிப்பிராயங்களை அகற்றுதல்” என்ற கட்டுரையை ஒருவேளை அவர் வாசிக்க விரும்பலாம் என்று நினைத்தனர். அந்தக் கட்டுரை, ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த கலிபோர்னியாவிலுள்ள ரோட்டரி கிளப்பில் கொடுக்கப்பட்ட ஒரு பொதுப் பேச்சைப் பற்றியது.
வால்ஃப்காங், அந்தப் பத்திரிகையில் அந்தக் கட்டுரை இருந்த பக்கத்தைத் திறந்து அவரிடம் காட்டியபோது, அவர் அதை வாசிக்க ஆரம்பித்தார். பிறகு, தானே அந்தப் பத்திரிகையை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டார். “இன்னைக்கு ராத்திரி, கொஞ்சம் ஓய்வாகவும் நிசப்தமாகவும் இருக்கும்போது நான் அதை வாசிச்சுப் பார்க்கிறேன்” என்று அவர் சொன்னார்.
வால்ஃப்காங்கும் அவருடைய மனைவியும் அவரை மூன்று நாட்களுக்குப் பின்பு சந்தித்தனர். அவர் என்ன சொன்னார்? “அந்தக் கட்டுரை ரொம்ப நல்லாயிருந்தது” என்று சொன்னார்.
அந்தளவுக்கு அவர் ஏன் ஈர்க்கப்பட்டார்? அவருக்கும் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய சில தப்பபிப்பிராயங்கள் இருந்திருந்தனவாம். ரோட்டரி கிளப்பிலுள்ள தன்னுடைய நண்பர்களும் அந்தக் கட்டுரையை வாசித்து மகிழ்வார்கள் என்று அப்போது அவர் உறுதியாய் எண்ணினார். “இன்னும் பல பிரதிகளை நீங்கள் கொண்டுவந்து தர முடியுமா?” என்று அவர் கேட்டார்.
“உங்களுக்கு எத்தனை பிரதிகள் வேண்டும்?” என்று வால்ட்ரௌட் கேட்டார்.
“எனக்கு நாற்பது பிரதிகள் வேண்டும். அவற்றை நான் விநியோகிப்பேன்.”
விழித்தெழு! பிரதி ஒன்றையோ, அல்லது ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பையோ நீங்கள் பெற விரும்பினால், Praharidurg Prakashan Society, Plot A/35 Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410 401, Mah., India என்ற விலாசத்திற்கோ பக்கம் 5-ல் பட்டியலிடப்பட்டுள்ள பொருத்தமான விலாசம் ஒன்றிற்கோ தயவுசெய்து எழுதுங்கள்.