நல்நடத்தைக்கு உதவும் ஒரு கல்வி ஏடு
ஆப்பிரிக்காவிலுள்ள ஜிம்பாப்வியில் நயாட்சீமி என்னும் கல்விக்கூடத்தில் “நல்நடத்தைக்கு கல்வி” என்ற தலைப்பில் பாடம் நடத்தப்படுவதாக அங்கு பாடம் கற்றுத்தரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறினார். தான் எதிர்ப்பட்ட குடும்ப பிரச்சினைகளை விவரமாக கூறி, அவற்றைத் தீர்க்க தனக்கு உதவி தேவைப்பட்டதை அவர் ஒத்துக்கொண்டார்.
தன் திருமணத்துக்குப்பின் வாழ்க்கைக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்லிவிட்டு, இவ்வாறு அவர் கூறினார்: “எங்கள் மண வாழ்க்கையை ஆரம்பித்த உடனேயே எழுந்த பிரச்சினைகள், நவம்பர் 1989-ல் நாங்கள் பிரிந்துசெல்ல முடிவு எடுப்பதில் போய் முடிந்தன.” போதாத குறைக்கு வேறுசில பிரச்சினைகளும் வந்து ஒட்டிக்கொண்டன. அவர் இவ்வாறு எழுதினார்: “என் அப்பாவுக்கு என் அம்மாத்தான் முதல் தாரம். என் அம்மாவுக்கு நான் தலைச்சன் பிள்ளை. நான் இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், என் தம்பி தங்கைகள் 16 பேரையும் என் கையில் ஒப்படைத்துவிட்டு என் அப்பா கண்ணை மூடிவிட்டார்.”
யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளை படித்தது, பிரச்சினைகளைத் தீர்க்க இந்தப் பள்ளி ஆசிரியருக்கு உதவியது. இப்பொழுது அவரும் அவருடைய மனைவியும் மறுபடியும் ஒன்றுசேர்ந்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர் எழுதியதாவது: “கடவுளின் துணையின்றி பிரச்சினைகளை சரிசெய்ய மனிதன் எடுக்கும் எல்லா முயற்சியும் வீணே. நானும் என் மனைவியும் இந்த உண்மையை எங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் மூலம் கற்றுக்கொண்டோம்.” ஆனால், பிரச்சினைகளில் கஷ்டப்படும் தன்னுடைய மாணவர்களுக்கு உதவ அவர் என்ன செய்தார்?
“இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் என்ற புத்தகம் ஓர் ஏற்ற பாடநூலாக இருக்கிறது என்று நான் என் பள்ளி தலைமை ஆசிரியருக்கும், மற்ற ஆசிரியர்களுக்கும் பரிந்துரை செய்தேன். அதை அவர்கள் அனைவரும் ஒத்துக்கொண்டு, பள்ளிக்கூடத்திற்காக 56 புத்தகங்களை வாங்கித்தரும்படி கூறினார்கள், நான் அவற்றை வாங்கிக்கொடுத்தேன்” என்பதாக அவர் எழுதினார்.
அழகிய வண்ணப்படங்கள் நிறைந்து காணப்படும் இந்த 320 பக்க கல்வி ஏட்டிலிருந்து நீங்களும் பெரும் நன்மை அடைவீர்கள் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம். நீங்கள் ஒரு பிரதியை பெற்றுக்கொள்ள விரும்பினால் அல்லது இலவச பைபிள் படிப்பை கொண்டிருக்க விரும்பினால், Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India என்ற விலாசத்திற்கோ பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ தயவுசெய்து எழுதுங்கள்.