உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 3/22 பக். 32
  • மதிப்புமிக்க ஒரு பத்திரிகை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மதிப்புமிக்க ஒரு பத்திரிகை
  • விழித்தெழு!—1997
விழித்தெழு!—1997
g97 3/22 பக். 32

மதிப்புமிக்க ஒரு பத்திரிகை

லண்டனைச் சேர்ந்த ஒரு நர்ஸ், விழித்தெழு! பிரசுரிப்பாளர்களுக்கு பின்வருமாறு எழுதினார்:

“புதிதாய் பக்கத்து வீட்டிற்கு குடிவந்திருந்த ஜாக்கியிடம் வயதானவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய எனது வேலையைப் பற்றி நான் ஒருநாள் பேசிக்கொண்டிருந்தேன். ‘அவர்கள் படிப்பதற்கு விரும்பும் சில பத்திரிகைகள் என்னிடம் இருக்கின்றன’ என அவர் என்னிடம் சொன்னார். நான் அவர்களது பத்திரிகைகளை வேலைபார்க்கும் இடத்திற்கு எடுத்துச்சென்று அங்கிருந்த டீப்பாய்களில் வைத்துவிட்டேன். ஆட்கள் அதைப் படித்து வந்தனர், ஏனென்றால் சில நாட்களுக்கு பிறகு அந்தப் பத்திரிகைகள் கைகள் பட்டு அழுக்காக்கப்பட்டிருந்தது நன்கு தெரிந்தது.

“பின்பு நான் வேறு இடத்திற்கு வேலைக்குப் போனேன்; ஒரு ஆஸ்பத்திரியில் வேலை பார்க்க ஆரம்பித்தேன். வெயிட்டிங் ரூமில் ஜாக்கியின் சில பத்திரிகைகளை வைத்துவிட்டேன். இந்த முறையும் அவை புரட்டப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தேன். ஒருநாள் காலையில் ஒரு வயதான பெண்மணியின் கைக்கு நான் சிகிச்சையளித்துக்கொண்டிருக்கையில் அவரது கணவர் என்னிடம் சொன்னார்: ‘வெயிட்டிங் ரூமிலிருந்து நான் இந்தப் பத்திரிகையை எடுத்தேன், பரவாயில்லைதானே. அதில் ரொம்ப நல்ல ஒரு கட்டுரை இருக்கிறது, என் மகனுக்குக் காட்ட வேண்டும்.’

“அந்தப் பத்திரிகைகள் எனக்கும்கூட மிகவும் பிரயோஜனமானவையாய் இருக்கின்றன. நான் இன்னும் நர்ஸ் பயிற்சி பெற்றுவருவதால் எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்காக இந்தப் பத்திரிகைகளிலுள்ள தகவலைப் பயன்படுத்தியிருக்கிறேன், என் பயிற்சியாளர்களும் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.

“எனது பக்கத்து வீட்டுக்காரரான ஜாக்கி ஒரு யெகோவாவின் சாட்சி, நான் குறிப்பிட்டுக்கொண்டிருக்கும் அந்தப் பத்திரிகை விழித்தெழு! நான் இந்தப் பத்திரிகையில் வாசித்திருக்கும் காரியங்கள் என்னைப் பற்றியும் மனிதரின் எதிர்காலத்தைப் பற்றியும் அதிகத்தைத் தெரிந்துகொள்ள எனக்கு உதவியிருக்கின்றன.”

விழித்தெழு! பத்திரிகைப் பிரதிகளை இதுமுதற்கொண்டு நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பினால் உள்ளூரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்புகொள்ளுங்கள் அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள விலாசங்களில் உங்களுக்கு அருகாமையிலிருக்கும் ஒன்றிற்கு எழுதுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்