உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 3/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • லைம் வியாதி—நீங்கள் அபாயத்தில் இருக்கிறீர்களா?
    விழித்தெழு!—1996
  • கார்னிவல் கொண்டாட்டங்கள்—சரியா, தவறா?
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 3/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

கார்னிவல்கள் “பைபிளின் கருத்து: கார்னிவல் கொண்டாட்டங்கள்—சரியா, தவறா?” (ஜூன் 8, 1996) என்ற கட்டுரைக்காக நன்றி. நான் பிரேஸிலில் வசிக்கிறேன்; இங்கே, கார்னிவல் ரொம்பப் பரவசமூட்டும் ஒரு காலம். அந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள எனக்கு எப்போதுமே கொள்ளை ஆசை இருந்தது. அது தவறென்று எனக்குத் தெரியும், ஆனால் ஏன் தவறென்று நிஜமாகவே எனக்குப் புரியவில்லை. என்றாலும், கார்னிவல், களியாட்டத்தை உட்படுத்தியது என்றும், அப்படிப்பட்ட கொண்டாட்டங்களை, ‘இருண்ட கிரியைகளுடன் தொடர்புடையதாய்’ கடவுள் கருதுகிறார் என்றும் இந்தக் கட்டுரை காட்டியது.—ரோமர் 13:12, NW.

எஃப். எம். எம்., பிரேஸில்

விடுமுறைகள் “விடுமுறையில் போகிறீர்களா?—நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை” (ஜூன் 22, 1996) என்ற தொடர் கட்டுரைக்காக ரொம்ப நன்றி. அது சரியான நேரத்தில் வந்து சேர்ந்தது; ஏனெனில் அதற்குப் பிறகு ஒருசில நாட்களில் நாங்கள் விடுமுறையில் சென்றோம். அந்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாய் இருந்தன. மீண்டும் நன்றி.

எல். ஜே., ஐக்கிய மாகாணங்கள்

லைம் வியாதி “லைம் வியாதி—நீங்கள் அபாயத்தில் இருக்கிறீர்களா?” (ஜூன் 22, 1996) என்ற கட்டுரைக்காக நன்றி. ஒரு மருத்துவராக, சமீபத்தில் இந்த வியாதியையுடைய எண்ணற்ற நோயாளிகளை நான் பார்த்திருக்கிறேன்; நீங்கள் குறிப்பிட்டிருந்த முன்னெச்சரிக்கைகளையே கடைப்பிடிக்கும்படி நானும் சொல்கிறேன். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோயாளிகளுக்கிருக்கும் அறிகுறிகள் முக்கியமானவையாய் எடுத்துக்கொள்ளப்படாததால் நீண்ட காலமாய் அவதியுறுகின்றனர். விழித்தெழு! சொல்லியிருந்த லைம் வியாதி, மூட்டு வலியுடன் சம்பந்தப்பட்ட வகை; அது ஐக்கிய மாகாணங்களில் எங்கும் காணப்படுகிறது. இந்த நோய்க்குக் காரணமான மற்ற இரண்டு நுண்ணுயிரிகளையும் ஐரோப்பாவில் கண்டறிந்துள்ளனர்; வழக்கமான ஆய்வுக்கூட பரிசோதனைகளின் மூலம் அவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை. லைம் வியாதியின் ஆரம்பக் கட்டத்தில் மட்டுமே நோயுயிர் முறிகள் (antibiotics) வேலை செய்கின்றன, பெரும்பாலும் பிந்திய கட்டங்களில் அவற்றால் பிரயோஜனமில்லை.

ஐ. எஸ்., ஜெர்மனி

லைம் வியாதியால் அவதியுறும் ஒருவராக, எனக்கு இந்த நல்ல கட்டுரை மிகவும் உற்சாகமளித்திருக்கிறது. இதை வாசிக்கும் அனைவருமே இந்த வியாதியை முக்கியமான ஒன்றாகக் கருதி, தேவைப்படும் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பார்கள்.

டி. பி., ஐக்கிய மாகாணங்கள்

கற்பதில் குறைபாடுகள் “இளைஞர் கேட்கின்றனர் . . . என்னால் ஏன் கற்க முடியவில்லை?” (ஜூன் 22, 1996) என்ற கட்டுரையை நான் உண்மையிலேயே மதித்துணர்ந்தேன். அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த காரணங்கள் சிலவற்றால் நான் பள்ளியில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கொடுத்திருந்த ஆலோசனைகளை நான் பின்பற்றப்போகிறேன். மிக்க நன்றி.

ஆர். சி., ஐக்கிய மாகாணங்கள்

கற்பதில் ஆர்வம் அடியோடு இல்லாமல் போயிருந்தது. ஆகவே பள்ளியிலும் கருத்தூன்றி கற்கவில்லை. அந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த ஆலோசனைகளை நடைமுறையில் பிரயோகிப்பதன் மூலம், கல்வி கற்கும் பழக்கங்களை என்னால் முன்னேற்றுவிக்க முடியும் என்று நம்புகிறேன்.

எம். இ. ஓ., உகாந்தா

எனக்கு கற்பதில் குறைபாடுகள் எதுவும் இல்லை, ஆனால் ஏனோ, எனக்குப் படிக்கவே விருப்பமில்லை. கணிதத்தில் வரும் சூத்திரங்களை ஞாபகத்தில் வைப்பதிலும் எனக்குச் சிரமம் இருக்கிறது. இந்தக் கட்டுரையில், வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப சொல்லுவதும் வாய்விட்டுச் சொல்வதும் குறுகிய கால ஞாபகசக்தி தொடர்பான பிரச்சினைகளுக்கான பரிகாரமாக குறிப்பிடப்பட்டிருந்தது சரிதான். முதலில் எனக்கு நானே வாய்விட்டு சப்தமாக வாசிப்பதை அற்பமானதாய் நினைத்தேன், ஆனால் நான் அவ்வாறு செய்தபோது, அது வேடிக்கையாய் இருந்தது!

என். ஐ., ஜப்பான்

சட்டவிரோதி “நான் ஒரு சட்டவிரோதியாய் இருந்தேன்” என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையில், ஃபிராங்க் மான்னினோவின் அனுபவத்தைப் பிரசுரித்ததற்காக நன்றி. (ஜூன் 22, 1996) அது என் கவனத்தை ஈர்த்ததோடு, நம் சிருஷ்டிகரான யெகோவா எப்பேர்ப்பட்ட சக்திவாய்ந்தவராகவும் அன்பானவராகவும் இருக்கிறார் என்று புரிந்துகொள்ளவும் உதவி செய்தது. நான் 30 ஆண்டுகளாக அவருக்கு சேவை செய்து வருகிறேன்; பிரசங்க வேலையைச் செய்வதற்கு எனக்கு சுதந்திரம் இருக்கும் அதே சமயத்தில், அதை என்னால் முடிந்த மட்டும் மிகச் சிறப்பாக செய்யும்படி என்னை இந்த அனுபவம் உற்சாகப்படுத்தியுள்ளது.

இ. பி., இத்தாலி

கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராகும் சிலாக்கியத்தை நான் மதித்துணர இந்தக் கட்டுரை எனக்கு உதவியது. தனிப்பட்ட விதமாக சரிவர ஒழுங்கமைத்துக்கொள்ளாமல் இருந்ததால், கூட்டங்களுக்கு வழக்கமாகவே தாமதமாய் போய்க்கொண்டிருந்தேன். ஃபிராங்க் மான்னினோவுக்கு சிறையில் குறைந்த சுதந்திரமே இருந்தது, ஆனால் அவருடைய வாழ்வு பலனுள்ளதாய் இருந்தது.

டி. டபிள்யூ., ஐக்கிய மாகாணங்கள்

ஃபிராங்க் மான்னினோ சிறையில் இருந்தபோதிலும்கூட வைராக்கியமாய் இருந்ததானது, என் உள்ளத்தை நெகிழச் செய்தது. ஒருவகையில் அவருடைய வாழ்வு மோசமான ஒரு வழியில் ஆரம்பித்திருந்தாலும், இப்பொழுது அவர் ஒரு மிகச் சிறந்த முன்மாதிரி.

சி. ஆர்., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்