ஒரு விழித்தெழு! பத்திரிகையின் மதிப்பு
ஆகஸ்ட் 1993-ல், பிரேஸிலிலுள்ள சாவோ பாலோவைச் சேர்ந்த நபர் ஒருவர், ஒரு விழித்தெழு! பிரதியை குப்பைத்தொட்டியில் கண்டெடுத்தார். போற்றுதலோடு அதை வாசித்த பிறகு, பிரேஸிலிலுள்ள உவாட்ச் டவர் சங்கத்தின் விலாசத்திற்கு அவர் குறிப்புரையை அனுப்பினார். அவர் இவ்வாறு எழுதினார்: “ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பைப் பற்றி தயவுசெய்து எனக்கு தகவலனுப்புங்கள். அது எனக்கு அதிகமாக உதவும் என்பதை நான் உறுதியோடு நம்புகிறேன்.”
அவர் வாழும் இடத்திற்கு அருகேயிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக்கு அவரது கடிதம் அனுப்பப்பட்டது. அந்த நபரை சந்தித்து, பைபிள் படிப்பும் அவரோடு ஆரம்பிக்கப்பட்டது. செப்டம்பர் 1995-ல், அவர் சாட்சிகளுடைய மாநாடு ஒன்றிலே தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் கடவுளுக்கு தனது ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தினார்.
ஒரு விழித்தெழு! பத்திரிகையின் மதிப்பையும்கூட குறைவாக எடைபோடக்கூடாது. அதில் இருப்பது வாழ்க்கையை தனிப்பட்ட விதத்தில் பாதிக்கிறது. இந்தப் பத்திரிகையை தவறாமல் பெற நீங்கள் விரும்பினால், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரைக் கேளுங்கள் அல்லது பக்கம் 5-ல் பட்டியலிடப்பட்டிருக்கும் பொருத்தமான விலாசத்திற்கு எழுதுங்கள்.