பைபிள் அறிவிற்காக தாகமுள்ளோராய் இருக்கிறீர்களா?
பல பத்தாண்டுகளாக, கம்யூனிஸ நாடுகளில் பைபிளைக் கலந்தாலோசிப்பதற்கான தனிப்பட்ட சுயாதீனம் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் பனிப்போர் முடிவடைந்ததோடு, அங்குள்ள லட்சக்கணக்கானோர் பைபிள் அறிவை நாடித்தேட ஆரம்பித்துள்ளனர். விசேஷமாக முன்னாள் சோவியத் யூனியன் குடியரசுகளில் இவ்வாறு நிகழ்ந்துகொண்டிருக்கும் சமயத்தில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதேபோன்ற சூழ்நிலை உள்ளது.
உதாரணமாக, ஹங்கேரியில், பேச் என்ற இடத்தைச் சேர்ந்த 45 வயதான உயிரியல் மற்றும் வேதியியல் ஆசிரியை ஒருவருக்கு பைபிள் கலந்தாலோசிப்பு ஒன்று மிகுந்த மகிழ்ச்சியளித்தது. “நான் புடாபெஸ்ட்டுக்குச் சென்றிருந்தபோது, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரோடு பேசினது, கிளர்ச்சியூட்டும், மகிழ்ச்சியான ஓர் அனுபவமாயிருந்தது” என்று அந்த ஆசிரியை எழுதினார். “வேதாகமத்தை வாசிப்பதை நான் விரும்புகிறேன், ஒரு பைபிள் படிப்பு எனக்கு நடத்தப்படுவதையும் நான் போற்றுவேன். உங்கள் உதவியை நன்றியுடன் ஏற்றுக்கொள்வேன்.”
எங்குமுள்ள மக்களுக்கு அப்பேர்ப்பட்ட உதவியை அளிக்க யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுள்ளோராய் இருக்கின்றனர். பைபிளை உங்களோடு கலந்தாலோசிக்கும்படி உங்கள் வீட்டில் எவரேனும் உங்களைச் சந்திக்க நீங்கள் விரும்பினால், தயவுசெய்து, Watch Tower, Niederselters, Am Steinfels, D-65618 Selters, Germany, அல்லது பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதுங்கள்.