நீங்கள் அங்கிருப்பீர்களா?
கடந்த ஆண்டின்போது, உலக முழுவதிலும் 87,00,000 பேருக்கும் மேலானோர் யெகோவாவின் சாட்சிகளுடைய “சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாட்டிற்கு ஆஜராயினர். “தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாடுகள் ஒன்றிற்கு நீங்கள் வருவீர்களா? நீங்கள் ஆஜராகும்படி இதயப்பூர்வமாக வரவேற்கப்படுகிறீர்கள்.
பெரும்பாலான இடங்களில், வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு இசையோடு அம்மாநாடு தொடங்கும். ஆரம்ப நிகழ்ச்சிநிரல், “கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?” என்ற உற்சாகமளிக்கும் பேச்சை முக்கியப்படுத்திக் காட்டும். கடவுள் தேவைப்படுத்தும் காரியங்களைச் செய்ய லட்சக்கணக்கானோருக்கு உதவும்படி நாம் பயன்படுத்தக்கூடிய தகவலை இது உள்ளடக்கும்.
பிற்பகலில் அளிக்கப்படும் “கடவுள் தேவைப்படுத்துகிறவற்றை கற்றுக்கொள்ள பிறருக்கு உதவுதல்” என்ற பேச்சு, சீஷராக்கும் வேலையில் இன்னும் சிறந்த முறையில் பங்குபெற மாநாட்டினரை ஆயத்தப்படுத்தும். பிறகு, “பொழுதுபோக்கின் மறைவான கண்ணிகளைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்” என்ற இரு-பகுதி தொடர்ப்பேச்சு, தவிர்க்க வேண்டிய பேய்த்தனமான கண்ணிகளைக் குறித்து எச்சரிக்கும். “கடவுளுடைய வார்த்தையின் உண்மைத்தன்மையை பற்றுறுதியுடன் ஆதரித்தல்” என்ற முக்கியமான பேச்சோடு வெள்ளிக்கிழமையின் நிகழ்ச்சிநிரல் முடிவடையும்.
“சமாதானத்தின் சுவிசேஷத்தைக் கொண்டுவரும் தூதுவர்கள்” என்ற தலைப்புடைய மூன்று-பகுதி தொடர்ப்பேச்சின் மூலம் சீஷராக்கும் வேலையின் முக்கியத்துவத்தை சனிக்கிழமை காலையின் நிகழ்ச்சிநிரல் அழுத்திக் காட்டும். ஒப்புக்கொடுத்தல் மற்றும் முழுக்காட்டுதல் பற்றி அந்நிகழ்ச்சிநிரலின் முடிவான பேச்சு இருக்கும், அதைத் தொடர்ந்து புதிய சீஷர்களின் முழுக்காட்டுதல் நடைபெறும்.
சனிக்கிழமை பிற்பகலில் அளிக்கப்படும் “காரியங்களின்பேரில் யெகோவாவின் எண்ணங்களைச் சிந்தித்துப்பாருங்கள்” என்ற பேச்சு, தற்போதைய பொருள்களின்பேரில் பலருக்கு இருந்திருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும். “சமாதானத்தின் தேவன் உங்கள்மீது அக்கறைகொள்கிறார்” என்ற தலைப்பிலான இதயத்தைக் கனிவிக்கும் இரு-பகுதி தொடர்ப்பேச்சை நீங்கள் அனுபவிப்பீர்கள். பிறகு, “குடும்ப வாழ்க்கையில் தேவ சமாதானத்தை நாடுங்கள்” என்ற தலைப்புடைய அந்நிகழ்ச்சிநிரலின் முடிவான பேச்சின்போது விசேஷித்த ஒன்றை அனுபவிப்போம்.
“சரியான வகையான தூதுவர்களை அடையாளம் கண்டுகொள்ளுதல்” என்ற தலைப்பிலான ஞாயிறு காலையின் மூன்று-பகுதி தொடர்ப்பேச்சு, பைபிள் தீர்க்கதரிசிகளின் உதாரணங்களைக் கவனத்தில் கொண்டுவருவதன் மூலம் அம்மாநாட்டின் பொருளைச் சிறப்பித்துக் காட்டும். நியாயாதிபதி கிதியோனைப் பற்றிய பைபிள் பதிவிலிருந்து மதிப்புமிக்க பாடங்களைக் கவனத்தில் கொண்டுவரும் முழு-ஒப்பனை நாடகமொன்றுடன் அக்காலை நிகழ்ச்சி முடிவடையும்.—நியாயாதிபதிகள் 6:11–8:28.
ஞாயிறு பிற்பகலில் அம்மாநாட்டின் இறுதி நிகழ்ச்சிநிரல், “மெய் சமாதானம் இறுதியில்!—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?” என்ற தலைப்பிலான பொதுப்பேச்சை முக்கியப்படுத்திக் காட்டும். முடிவாக, “தேவ சமாதான தூதுவராக முன்னேறுதல்” என்ற உந்துவிக்கும் பேச்சுடன் அம்மாநாடு முடிவுக்கு வரும்.
இந்தியாவில் மட்டும் 15 மாநாடுகள் அட்டவணைப்படுத்தப்பட்டிருப்பதால், நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் ஏதாவதொரு மாநாடு நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. உங்களுக்கு வெகு அருகில் நடைபெறும் மாநாட்டின் நேரத்தையும் இடத்தையும் பற்றித் தெரிந்துகொள்வதற்காக உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளிடம் விசாரியுங்கள். இந்தியாவில் மாநாடு நடைபெறும் இடங்கள், ஜூன் 8 விழித்தெழு! இதழில் பட்டியலிடப்படும்.