உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 3/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1996
  • இதே தகவல்
  • எமது வசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • கோஸ்டா ரிகா சிறிய நாடு, பல்வகை வித்தியாசங்கள்
    விழித்தெழு!—1995
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 3/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

தூக்கம் “உங்கள் உடம்புக்கு ஏன் தூக்கம் தேவை” (ஜூன் 8, 1995) என்ற உங்கள் கட்டுரைக்காக நன்றி. அது என் கண்களைத் திறந்தது என்றே நான் சொல்ல வேண்டும். ஒரு மருத்துவ மாணவியாக இருப்பதால், நான் படித்து படித்தே எத்தனையோ மதிப்புள்ள மணிநேர தூக்கத்தை இழக்கிறேன். அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட விளைவுகள் சிலவற்றை நான் அனுபவித்திருக்கிறேன். சிறந்த தூங்கும் பழக்கங்களை வளர்த்துக்கொள்ள முயலுவேன்.

எல். ஹெச்., ட்ரினிடாட்

தாத்தாபாட்டிமார் “நீங்கள் தாத்தாபாட்டியை உயர்வாய் மதிக்கிறீர்களா?” (ஜூலை 8, 1995) என்ற தொடர் கட்டுரைகளை வாசித்தபோது ஆனந்தக்கண்ணீர்விட்டேன். என் கணவனின் குடும்பத்தாருடன் கடினமான சமயத்தை அனுபவித்துக்கொண்டிருந்தேன், ஆகவே உங்களுடைய கட்டுரை இதைவிடவும் பொருத்தமான நேரத்தில் வந்திருக்க முடியாது. அவர்களுக்கு உரிய சரியான மதிப்புடன் நான் அவர்களை நடத்தி வரவில்லை என்பதை அது உணர வைத்தது. தேவையான மாற்றங்களை நான் செய்ய ஆரம்பித்தேன், நாங்கள் அனைவரும் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

ஏ. டி., கனடா

என்னுடைய அப்பாவை ஒரு நர்ஸிங் ஹோமில் சேர்க்கவேண்டியதாக இருந்தபோது, நாங்கள் அவரை வாரத்திற்கு மூன்றுமுறை போய் பார்க்க வேண்டுமென்று தீர்மானித்தோம். நாங்கள் இரண்டு வருடங்களுக்கு அந்த வாக்கைக் காத்துக்கொண்டோம். வீட்டிலுள்ள முக்கியத்துவமற்ற தினசரி செய்திகள் அவருக்கு அவ்வளவு முக்கியமானவை! இந்த வழக்கமுறையை தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு உறுதியான தீர்மானம் அவசியப்படுகிறது, ஆனாலும் பேரப்பிள்ளைகளும் தாத்தாபாட்டிமாரும் பயனடைகிறார்கள்.

பி. எல்., ஐக்கிய மாகாணங்கள்

ஒரு கத்தோலிக்கராக இருக்கும் நான், அந்தக் கட்டுரைகள் கோட்பாட்டிலோ மதத்திலோ கவனத்தைத் திருப்பாமல் பாரபட்சமற்றதாக இருந்ததால் ஈர்க்கப்பட்டேன். கிட்டத்தட்ட அசட்டை செய்யப்பட்டிருக்கும் ஒரு தேவையை நீங்கள் தைரியமாகக் கையாண்டிருக்கிறீர்கள்.

ஏ. பி., கோஸ்டா ரிகா

குடும்பத்தில் துன்பம் “என்னை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்ததுக்கு நன்றி அம்மா” (ஜூலை 8, 1995) என்ற கட்டுரையை நான் கண்ணீரோடு வாசித்தேன். நானும் என் கணவனை 1982-ல் ஒரு விபத்தில் இழந்தேன். ஊனமுற்றவளாக—மூன்று பிள்ளைகளையும் ஒரு தாயாரையும் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பில் நான் விடப்பட்டேன். அந்தக் கட்டுரையை வாசிப்பது என்னுடைய சொந்த கதையை வாசிப்பதைப் போல் இருந்தது. அவ்வாறு தொடருவதற்கு யெகோவா தைரியத்தைத் தருகிறார்.

சி. ஆர்., ஐக்கிய மாகாணங்கள்

இந்தக் கதை நிஜமாகவே என் நெஞ்சைத் தொட்டது. எனக்கு வயது 16, அப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் எப்போதாவது வந்தால் எப்படி சமாளிப்பேன் என்று நான் எப்போதும் யோசித்திருக்கிறேன். நாம் யெகோவாவில் சார்ந்திருக்கும் வரையாக அவர் எப்போதும் நமக்காக இருக்கிறார் என்பதை மதித்துணர டாடுவின் அனுபவம் எனக்கு உதவியிருக்கிறது.

என். எஃப்., டோமினிகா, மேற்கு இந்தியத் தீவுகள்

என்னை அழவைக்கும் அளவுக்கு அந்தக் கதை அவ்வளவு நன்றாகச் சொல்லப்பட்டிருந்தது. பாடி குடும்பத்தினரின் சோதனைகள் என்னுடைய சிறிய மனச்சோர்வுகளை அவ்வளவு முக்கியமற்றவையாகத் தோன்ற வைத்துவிட்டன. எங்களுடைய நிலைமைகள் வித்தியாசமானவையாக இருந்தாலும், யெகோவா எவ்வாறு அவர்களை ஆதரித்தார் என்று பார்ப்பது தொடர்ந்து செல்வதற்காக முயல எனக்கு உதவியிருக்கிறது.

வி. எஸ்., பிலிப்பீன்ஸ்

அநேக வருடங்களாய் மூப்பராக சேவை செய்திருக்கிற உண்மையுள்ள சாட்சியும் 33 வருடங்களாக என் கணவருமாக இருக்கிற அவருக்கு பிக் நோய் உள்ளது—நோயாளிக்கும் அவரது குடும்பத்துக்கும் மெதுவாக அதிக துன்பத்தை ஏற்படுத்தும் நீண்ட, கடுந்துயரூட்டும் நோய் அது. தன் கணவனை இழந்தபோதிலும் திருமதி பாடி கொண்டிருந்த பலமும், பல்லாண்டுகளாக தன் மகனுக்கு சுயதியாகத்துடனும் ஈடுபாட்டுடனும் காண்பித்த கவனிப்பும் என்னை ஆழமாகக் கவர்ந்தது. அவரையும் அவரது மகன்களையும் யெகோவா ஆசீர்வதிப்பாராக.

இ. என்., ஐக்கிய மாகாணங்கள்

வாய் துர்நாற்றம் “வாய் துர்நாற்றம் பற்றி நீங்கள் என்ன செய்யலாம்?” (ஜூலை 8, 1995) என்ற உங்களது தகவல்நிறைந்த கட்டுரைக்காக நன்றி சொல்ல வேண்டும். அது என்னுடைய பிரச்சினையாக இருந்தது! வாய் துர்நாற்றத்தைக் கொண்டிருப்பது உங்களை சோர்வாக உணரச் செய்யும் என்பது உண்மைதான். நான் இருமுறை என்னுடைய பல் மருத்துவரிடம் சென்றேன், ஆனால் இன்னும் அந்த நாற்றம் தொடர்ந்தது. அந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளைப் பொருத்திப் பிரயோகித்தேன், அவை பயனுள்ளவையாக இருக்கின்றன. உலகெங்குமுள்ள மக்களுக்கு தயவுசெய்து தொடர்ந்து உதவியளியுங்கள்.

ஆர். ஓ. ஐ., நைஜீரியா

கோஸ்டா ரிகா “கோஸ்டா ரிகா—சிறிய நாடு, பல்வகை வித்தியாசங்கள்” (ஜூலை 8, 1995) என்ற கட்டுரை, என்னுடைய பயணத்திற்கு ஒருசில நாட்களுக்கு முன்னர்தான் வந்தது; குறிப்புகளை நோக்குவதற்காக என்னோடு அதை எடுத்துச் சென்றேன். உண்மையிலேயே, அதிசயமும் கிளர்ச்சியும் நிறைந்த ஒரு நாடு அது! நாங்கள் சென்ற இடமெல்லாம் மக்கள் புன்சிரிப்புள்ளவர்களாகவும், எங்களைப் பார்த்து கையசைப்பவர்களாகவும் இருந்தார்கள். எங்குமுள்ள அனைவரும் அதேபோல் சிநேகபான்மையுள்ளவர்களாக இருக்கும் புதிய உலகைக் கற்பனைசெய்து பாருங்கள்!

டி. என்., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்