விழித்தெழு!-க்கான செராஷாவின் போற்றுதலால் தூண்டப்பட்டார்
அ.ஐ.மா.-வில் வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளம் நபர் எழுதினார் “ஆங்கில வகுப்பில் ஒரு பத்திரிக்கைக்கு அல்லது ஒரு செய்தித்தாளுக்கு எழுத வேண்டியிருந்தது. ஆகவே நான் பதில் எழுதுவதற்கு பத்திரிகைகளிலிருந்த கட்டுரைகளைப் பார்க்கத் துவங்கினேன்.
“நேற்று தபாலில் வந்த விழித்தெழு! பத்திரிகையிலிருந்த கட்டுரைகளைப் பார்க்க முடிவெடுத்தேன். நான் அவ்விதம் பார்த்ததற்காக மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பிப்ரவரி 22, 1995 வெளியிட்டிருந்த ‘ரஷ்யாவிற்கு மறுவிஜயம்’ என்ற கட்டுரை, மிக உட்சாகமளிப்பதாய் இருந்தது. கடவுளுடைய ராஜ்யத்தின் பேரிலிருந்த ஏழு வயதான செராஷாவின் வைராக்கியத்தைப்பற்றி வாசித்தது விசேஷமாக உற்சாகமளிப்பதாய் இருந்தது. விழித்தெழு! பத்திரிக்கைக்கான அவனது விருப்பமும் போற்றுதலும் நான் வாசித்திராத விழித்தெழு! கட்டுரைகளைப்பற்றி என்னைச் சிந்திக்க வைத்தது விழித்தெழு!, காவற்கோபுரம் ஆகிய இரண்டிலுமுள்ள வியத்தகு கட்டுரைகள் அனைத்தையும் வாசிக்க அதிகப்படியான முயற்சியெடுப்பேன் என்று இப்போது நான் நம்புகிறேன்.”
நீங்கள் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிக்கையின் ஒரு பிரதியைப் பெற விரும்புவீர்களானால் அல்லது ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பு நடத்தும்படி விரும்புவீர்களானால், தயவுசெய்து Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410401, Mah., India, என்ற முகவரிக்கோ அல்லது பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான முகவரிக்கோ எழுதுங்கள்.