உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 2/8 பக். 30
  • எமது வசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1996
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 2/8 பக். 30

எமது வசகரிடமிருந்து

சாட்சிகளின் மாநாடுகள் “அவள் வாழ்க்கையை மாற்றிய ஒரு நாள்,” (மார்ச் 22, 1995) என்ற தலைப்புடைய அனுபவத்திற்காக நன்றி. யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு விசேஷித்த மாநாட்டு தினத்திற்கு தன்னுடைய அத்தையால் அழைக்கப்பட்ட அந்த இளம்பெண்ணின் அனுபவம், அதேபோன்ற ஒன்று எனக்கும் நடந்ததென்பதை நினைப்பூட்டியது. என்னுடைய சகோதரனால் அழைக்கப்பட்டபின்பு, 1985-ன் கோடைகாலத்தில் என்னுடைய முதல் மாநாட்டிற்கு சென்றிருந்தேன். எனக்கு ஆரம்பத்திலிருந்த அவநம்பிக்கை ஒரு அனலான உணர்வால் விரைவில் மாற்றீடு செய்யப்பட்டது; ஒரு பெரிய குடும்பத்தின் மத்தியில் நான் இருப்பதாக உணர்ந்தேன். நான் தொடர்ந்து பைபிளை படிக்க தீர்மானித்தேன், இன்று நான் ஒரு ஒழுங்கான பயனியர், ஒரு முழுநேர சுவிசேஷகர்.

ஈ. எஃப்., இத்தாலி

கடன் “கடனாளியாவதில் லாபமுண்டா?” (ஜூன் 8, 1995) என்ற உங்களுடைய கட்டுரைக்கு நன்றி. எனக்கு வெறும் 13 வயதுதான் ஆகிறது, ஆனால் என்னுடைய பணத்தை நான் நல்ல விதத்தில் கையாளாமல் இருந்தேன். இந்த கட்டுரை பெரும் விதத்தில் எனக்கு உதவும் என்று நினைக்கிறேன்.

சி. ஏ., ஐக்கிய மாகாணங்கள்

அடிமைத்தனம் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்ணாக, ஜூன் 8, 1995, “அடிமைத்தனத்தின் விலங்கும் கண்ணீரும்” என்ற தொடர் கட்டுரைகளை நான் நன்றியுணர்வோடு மிகவும் மதித்துணர்ந்தேன். அந்த அட்டைப் படம் கண்ணீரை வரவழைத்தது. இந்த வெட்கக்கேடான சரித்திர உண்மைகளை கையாளுவதற்கு உங்களுக்கு தைரியம் இருந்ததென்பது என்னை நெகிழவைத்தது. கட்டுரை அதிக உணர்ச்சியோடு அளிக்கப்பட்டிருந்தது, அதிக தகவல் நிறைந்ததாகவும் இருந்தது.

பி. எம்., ஐக்கிய மாகாணங்கள்

சரித்திர வகுப்பில் இதே பொருளை நாங்கள் கலந்தாலோசித்துக்கொண்டிருந்ததால் இந்தக் கட்டுரை சரியாகவே ஏற்ற நேரத்தில் வந்தது. சில கட்டாயமற்ற வீட்டுப்பாடத்தை முடிப்பதற்காக இந்தக் கட்டுரையை பயன்படுத்தினேன், நல்ல மதிப்பெண்களைப் பெற்றேன். அடிமைகளுக்காக நான் அதிக வருத்தப்படவும் செய்தேன்.

எம். சி., ஜெர்மனி

வாழ்க்கை சரிதை “வாழ்க்கையின் அர்த்தத்தை தேடுவதில் நான் கண்ட வெற்றி” (மே 22, 1995) என்ற கட்டுரை மிகவும் நெகிழவைத்த ஒன்றாகும். முழுநேர ஊழியத்தை ஆரம்பிப்பதா வேண்டாமா என்று நான் தீர்மானிக்க ஹாரல்ட் டைஸ்-ன் சரிதை எனக்கு உதவியது. நியூ யார்க்கில் புருக்லினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகமான பெத்தேலை சென்று பார்ப்பதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்தேன். நான் மிகவும் கவரப்பட்டேன். இப்பொழுது நான் முழுநேர ஊழியத்தை ஆரம்பிப்பதைக் குறித்த கேள்விக்கே இடமில்லை!

ஏ. சி., ஐக்கிய மாகாணங்கள்

மன்னித்து மறந்துவிடுங்கள் “பைபிளின் கருத்து: மன்னித்து மறந்துவிடுங்கள்—அது எப்படி முடியும்?” (ஜூன் 8, 1995) என்ற மிகச் சிறந்த கட்டுரைக்காக நன்றி. அபூரண மனிதர்களால் செய்யமுடியாத ஒன்றை பைபிள் வற்புறுத்திக் கேட்கிறதா என்பதைக் குறித்து நான் யோசித்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது மன்னித்து மறந்துவிடுவது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். கடவுளுடைய கட்டளைகள் பாரமானவையல்ல என்ற திடநம்பிக்கையை நான் பெற இந்த கட்டுரை உதவியிருக்கிறது.

சி. ஐ. சி., நைஜீரியா

இந்தக் கட்டுரையை நான் எவ்வளவு போற்றுகிறேன் என்பதை எழுதி உங்களுக்குத் தெரியப்படுத்தாமல் இருக்கமுடியவில்லை. ஒரு சிறு பிள்ளையாக, என்னுடைய அப்பாவின் சகோதரர்கள் இருவரால் நான் பாலுறவு சம்பந்தமாக துர்ப்பிரயோகம் செய்யப்பட்டேன். பின்பு, ஒரு மனைவியாக நான் துர்ப்பிரயோகம் செய்யப்பட்டு மோசமாக நடத்தப்பட்டேன். ஒரு கிறிஸ்தவளாக ஆன பின்பு, அன்பு காண்பிப்பதற்கும் மன்னிப்பவளாயிருப்பதற்கும் முயற்சி செய்தேன். எனினும், அநேக வருடங்களாக எனக்கு ஆழமான வேதனையைக் கொடுத்த இந்த மூன்று நபர்களையும் நான் மன்னித்தேன் என்று எப்போதுமே என்னால் நேர்மையோடு சொல்லமுடிந்ததில்லை. யெகோவாவின் கரங்களில் விடப்படவேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன என்பதை இப்பொழுது நான் உணருகிறேன், மேலுமாக என்னுடைய வாழ்க்கையை நான் தொடரமுடியும். என்னை பாதித்திருக்கும் இந்த ஆழமான வேதனை வெகு சீக்கிரத்தில் போய்விடும் என்பதாக வெளிப்படுத்துதல் 21:4 எனக்கு உறுதியளிக்கிறது.

ஏ. பி., ஐக்கிய மாகாணங்கள்

கட்டுரையை இப்போதுதான் படித்து முடித்தேன். இந்தத் தருணத்தில் நான் யெகோவாவோடு இவ்வளவு நெருக்கமாயிருப்பதாக உணர்வதுபோல எப்போதுமே உணர்ந்ததில்லை. சிறிது காலத்திற்கு முன்பு நான் ஒரு வினைமையான பாவத்தில் உட்பட்டிருந்தேன். அதற்காக சபையின் மூப்பர்களுடைய உதவியை நாடினேன். தயவான மற்றும் அன்பான ஆலோசனையை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டபோதிலும், ஜெபத்தில் யெகோவாவிடம் பேச இன்னும் தடை செய்யப்பட்டதுபோல் உணர்ந்தேன். எனக்கு மிகவும் தேவைப்பட்ட ஒன்றை, அதாவது எவ்வாறு நம்முடைய பரலோகத் தகப்பன் மன்னித்தும் மறந்துவிடவும் செய்கிறார் என்பதைக் குறித்த தெளிவான புரிந்துகொள்ளுதலை இந்தக் கட்டுரை எனக்கு அளித்துள்ளது. நான் முட்டாள்தனமாக தவிர்த்துக்கொண்டுவந்த ஒரு சிலாக்கியமான, இருதயப்பூர்வமான ஜெபத்தில் அவரை நான் தடையின்றி அணுகுவதை இது சாத்தியமாக்கியிருக்கிறது. ‘ஏற்றவேளையில் போஜனத்தை’ எனக்கு கொடுத்ததற்காக யெகோவாவிற்கு நன்றி.—மத்தேயு 24:45.

டி. ஜே. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்