“யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ள எனக்கு உதவியதற்காக நன்றி!”
அ.ஐ.மா.-லுள்ள ஃப்ளாரிடாவைச் சேர்ந்த 16 வயது பெண்ணின் உள்ளப்பூர்வமான கூற்று அது. யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பிரசுரங்களை வாசித்தப் பிறகு அவள் எழுதினாள்:
“எனக்கு அந்தப் புத்தகத்தின் பெயர் ஞாபகம் இல்லை, ஆனால் நீங்கள் பிரசுரித்ததாக நான் நினைக்கிற, இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு புத்தகத்தை வாசித்தேன். அந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கு முன், எனக்கு தெரிந்திருக்க வேண்டிய அனைத்தையும் தெரிந்திருந்ததாக நினைத்தேன். கடவுளிலும் இயேசுவிலும் நம்பிக்கை உடையவளாக இருக்கிறேன்; இரவு உணவுக்கு முன்னரும், மீண்டும் இரவிலும் ஜெபம் செய்கிறேன்; ஓரளவுக்கு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். ஆனால் அந்தப் புத்தகத்தை வாசித்தப் பிறகு, எனக்கு அதிகம் தெரியவே இல்லை என்பதையும் யெகோவா தேவனையும் இயேசுவையும் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள மற்றவர்களையும் பற்றி வாசிப்பதும் படிப்பதும் அவசியம் என்பதையும் உணர்ந்துகொண்டேன்.
“கடவுளுக்கு சிறந்த ஊழியக்காரியாகும்படியாக என்னுடைய நடத்தைப்போக்குகளில் சிலவற்றை மெதுவாக மாற்றி வருகிறேன். உவாட்ச் டவர் சொஸைட்டி இல்லையென்றால், நான் இன்னும் கடவுளைப் பற்றியும் பைபிளிலுள்ள கதைகளைப் பற்றியும் அறியாதவளாகவே இருப்பேன். யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ள எனக்கு உதவியதற்காக நன்றி!”
எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்பதே அந்தப் பெண் குறிப்பிட்டுக்கொண்டிருந்த புத்தகத்தின் தலைப்பு. நான்கு சுவிசேஷங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கிறபடி, இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும் அளிப்பதற்கு அதில் முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிரதி ஒன்றைப் பெற அல்லது இலவசமான வீட்டு பைபிள் படிப்பு ஒன்றைக் கொண்டிருக்க நீங்கள் விரும்பினால், தயவுசெய்து, Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410401, Mah., India, அல்லது பக்கம் 5-லுள்ள பொருத்தமான விலாசத்திற்கு எழுதுங்கள்.