“இனி எந்தப் பிரதியையும் படித்துமுடிக்காமல் தூக்கிப்போட மாட்டேன்”
விழித்தெழு! பிரசுரிப்போருக்கு ஒருவர் இவ்வாறு விளக்கமாக எழுதினார்: “என் கதவின் வலைத்திரையில் ஏப்ரல் 8, 1994, தேதியிட்ட விழித்தெழு! பிரதி ஒன்றை சமீபத்தில் கண்டேன். அட! என்ன ஆனது? 90-களின் நம் நாளுக்கேற்ற, தகவல் நிறைந்த பிரசுரத்தை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். ஒரு பொருளிலிருந்து மற்றொன்றிற்கு மாறும் மாற்றம் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாய் இருப்பதை உணருகிறேன், உண்மையில் முதன்முறையாகக் கட்டுரைகளைப் படித்தேன். (நான் பொதுவாக, ‘அய்ய, அவர்களா மறுபடியும்,’ என்று நினைத்து, அதை தூக்கிப் போட்டுவிடுவேன்.) அதில் எவருக்கும் பொருந்தும் ஏதாவது இருந்தது.”
முடிவுரையில் அவர் எழுதியிருந்தார்: “நீங்கள் சரியான திசையில்தான் போகிறீர்கள். இந்த நல்ல பணியைத் தொடருங்கள். இனி எந்தப் பிரதியையும் படித்துமுடிக்காமல் தூக்கிப்போட மாட்டேன் என்று உறுதிகூறுகிறேன்.”
விழித்தெழு! பிரதி ஒன்று உங்கள் வீட்டிற்கு தபாலில் அனுப்பிவைக்கப்பட நீங்கள் விரும்பினால் அல்லது ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பை நீங்கள் விரும்பினால், தயவுசெய்து Praharidurg Prakashan Society, Plot A/35, Near Industrial Estate, Nangargaon, Lonavla 410 401 Mah., India என்ற விலாசத்துக்கு அல்லது பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதுங்கள்.