இளைஞர் போற்றுதல் தெரிவிக்கின்றனர்
இந்தப் படத்தில் காண்கிற இளைஞர் எல்லாருமே நைஜீரிய மேனிலைப்பள்ளி மாணாக்கர்கள். நைஜீரியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்கு அவர்கள் ஒரு மடல் வரைந்தனர்: “இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தை இளைஞராகிய எங்களுக்குப் பிரசுரிப்பதில் நீங்கள் காட்டிய கரிசனைக்காக நாங்கள் நன்றி சொல்ல விரும்புகிறோம்.
“உலகின் அழுத்தங்களையும் வேதப்பூர்வமற்ற போதனைகளைத் தவறென நிரூபிக்கவும் இந்தப் பிரசுரம் எங்களுக்கு உதவியிருக்கிறது. இளைஞரின் அக்கறைகளைக் குறித்ததில் வெவ்வேறான, பலவாறான விஷயங்களை அது உள்ளடக்கியிருக்கிறது, அதன் புத்திமதி பைபிளைச் சார்ந்தே இருக்கிறது. சகாக்களின் அழுத்தத்தைச் சிந்திக்கும் பிரிவு, ஞானிகளோடே சஞ்சரிக்கவும் மூடருடைய தோழமையைத் தவிர்க்கவும் சொல்லக்கூடிய பைபிளின் புத்திமதியிலுள்ள அதன் ஞானத்தைப் புரிந்துகொள்ள எங்களுக்கு விசேஷமாக உதவியிருந்திருக்கிறது. எங்களுடைய பள்ளியிலுள்ள இதர மாணாக்கர்கள், அன்பிலே எவ்வாறு நாங்கள் ஒருவரையொருவர் தாங்குகிறோம் என்பதையும் சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் கடைப்பிடிக்க எவ்வாறு நாங்கள் ஊக்கமாக நாடுகிறோம் என்பதையும் கண்டு ஆச்சரியப்படுகின்றனர்.
“பள்ளியிலுள்ள மாணாக்கர்களின் மத்தியில் எப்போதுமே எங்களுடைய நடத்தையை நேர்த்தியாகக் காத்துக்கொள்ள நாடுபவர்களாக, தவறான வழியில் எங்களைச் செல்வாக்குச் செலுத்த முயற்சி செய்பவர்களைப் பொருட்படுத்தாமல், எங்களுக்குச் செவிகொடுத்துக் கேட்கும் எல்லா மாணாக்கர்களுக்கும் ராஜ்ய நம்பிக்கையை வைராக்கியமாக நாங்கள் பிரஸ்தாபிக்கிறோம்.”
“நைஜீரியாவிலுள்ள ஆபியா மாநிலத்தின் ஆபாவிலிருக்கும் ஆல் செயின்ட்ஸ் மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த இளம் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து” என்று இந்த மடல் கையெழுத்திடப்பட்டிருந்தது.
இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற பிரதியைப் பெற விரும்பினாலோ இலவச வீட்டுப் பைபிள் படிப்பைக் கொண்டிருக்க நீங்கள் விரும்பினாலோ Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India என்ற முகவரிக்கோ 5-ம் பக்கத்திலுள்ள பொருத்தமான முகவரிக்கோ தயவுசெய்து எழுதுங்கள்.