உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 12/8 பக். 10-32
  • “கடந்த காலத்தைத் துடைத்தழித்தல்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “கடந்த காலத்தைத் துடைத்தழித்தல்”
  • விழித்தெழு!—1994
விழித்தெழு!—1994
g94 12/8 பக். 10-32

“கடந்த காலத்தைத் துடைத்தழித்தல்”

“நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வசிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.” இந்த வார்த்தைகள் சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட போது உண்மையாய் இருந்தன, இன்றும் அவை உண்மையாயிருக்கின்றன. ஆனால் எல்லா மானிட துயரத்தோடும்கூடிய சரித்திரத்தின் விளைவுகள் துடைத்தழிக்கப்பட முடியுமா?ரோமர் 8: 22.

கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற தலைப்பைக் கொண்ட 32-பக்க முழு-வண்ண சிற்றேடு இதே விஷயத்தைக் குறித்து கலந்தாலோசிக்கிறது. “நாம் இந்த உலகில் சகித்திருக்கக்கூடிய துன்பத்துக்கு கடவுள் நமக்கு ஈடுசெய்வார்,” என்று அது சொல்கிறது. “மிகுதியான இரக்கத்தோடு கடவுள் நம்மீது சுமத்தப்பட்ட மோசமான கடந்தகாலத்துக்கு ஈடுசெய்வதற்கும் மேலாக செய்வார்.”

ஒரு பிரகாசமான எதிர்காலம் நமக்காகக் காத்திருக்கிறது என்ற நம்பவைக்கும் அத்தாட்சியை இப்பிரசுரம் தொகுத்துரைக்கிறது. இச்சிற்றேட்டை வாசித்தப் பின்பு, கனடா நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் இவ்வாறு எழுதினார்: “இந்தப் பிரசுரம் என் இருதயத்தை எவ்வளவாக தொட்டது என்பதை நான் வார்த்தைகளால் எடுத்துச் சொல்ல முடியாது! அது உண்மையிலேயே ஓர் அருமையான இரத்தினக்கல். கடவுள் நமக்காக வைத்திருக்கும் அற்புதமான நம்பிக்கையை அது நமக்கு நினைப்பூட்டுகிறது. ‘கடந்த காலத்தைத் துடைத்தழித்தல்’ என்ற பகுதி அன்புடன் எழுதப்பட்டது என நான் உணருகிறேன். யெகோவா நம்மை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறார் என்பதை எங்களுக்கு நினைப்பூட்டியதற்கு உங்களுக்கு நன்றி.”

இச்சிற்றேட்டின் பிரதி ஒன்றைப் பெற நீங்கள் விரும்பினால், அல்லது இவ்விஷயத்தைப் பற்றி கலந்தாலோசிக்க யாராவது உங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று விரும்பினால், தயவுசெய்து Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla, 410 401, Mah., அல்லது பக்கம் 5-ல் பட்டியலிடப்பட்டிருக்கும் பொருத்தமான விலாசத்துக்கு எழுதுங்கள்.

[பக்கம் 32-ன் படம்]

கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?

அப்படியென்றால், அவர் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?

அது எப்போதாவது முடிவுக்கு வருமா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்