நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா? பைபிளின் பதில்கள்
“இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.”—மத்தேயு 3:16, 17.
பின்வருபவை 11-ம் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கும் சில ஆதாரப்பூர்வ வாக்கியங்கள்:
1. மதக் களஞ்சியம் (The Encyclopedia of Religion) இவ்வாறு ஒத்துக்கொள்கிறது: “இன்றுள்ள இறையியல் வல்லுநர்கள் எபிரெய பைபிளில் திரித்துவ கொள்கை இல்லை என்று ஒத்துக்கொள்கின்றனர்.” நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியாகூட சொல்கிறது: “பரிசுத்த திரித்துவக் கொள்கை பழைய ஏற்பாட்டில் கற்பிக்கப்படவில்லை.”
2. “இஸ்ரவேலே, கேள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.” (உபாகமம் 6:4) “கர்த்தர் பூமியின் மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார்; அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.”—சகரியா 14:9.
3. “கர்த்தருடைய ஆவி [சிம்சோன்]மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று.” (நியாயாதிபதிகள் 15:14) “செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”—சகரியா 4:6.
4. “கர்த்தருடைய ஆவி [சிம்சோன்]மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்.” (நியாயாதிபதிகள் 14:6) “உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.”—ஏசாயா 44:3.
5. “நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; . . . அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல.”—தானியேல் 9:25, 26.
6. “வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.”—ஏசாயா 45:18.
7. “முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை.”—ஏசாயா 46:9.
8. “நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.” (யோவான் 5:30) “நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.”—யோவான் 14:28.
9. “நான் என் சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன்.”—யோவான் 7:28, 29.
10. “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.” (யோவான் 1:18) “தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.”—யோவான் 6:46.
11. “பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டு, உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?”—யோவான் 10:36.
12. “நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.”—யோவான் 14:28.
13. “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.” (மாற்கு 13:32) “அவர்களெல்லாரும் [இயேசுவைப் பின்பற்றுபவர்களெல்லாரும்] ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் [இயேசுவைப் பின்பற்றுபவர்களெல்லாரும்] நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.”—யோவான் 17:21.
14. “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” (யோவான் 1:29) “நீர் கடவுளின் பரிசுத்தர் என்றும் நாங்கள் நம்பி அறிந்திருக்கிறோம்.”—யோவான் 6:69, தி.மொ.
15. “இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.”—மாற்கு 9:7.
16. “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடை[வீர்கள்].” (அப்போஸ்தலர் 1:8) “இயேசுவை தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்.”—அப்போஸ்தலர் 10:38.
17. இடதிலுள்ள படத்தையும், மேலேயும் 12-ம் பக்கத்திலும் உள்ள வாக்கியத்தையும் பாருங்கள்.
18. “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, . . . அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.”—எபிரெயர் 12:1, 2.
19. “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.”—பிலிப்பியர் 2:9, 11ஆ.
20. ‘ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறார், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறார், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறார்.’—1 கொரிந்தியர் 11:3.
21. “ஈடற்றப் பேரரசராகிய கர்த்தர் யெகோவாவே, . . . வானங்களிலோ பூமியிலோ உமக்கொத்த செயல்களைச் செய்யத்தக்க கடவுள் யார்?” (உபாகமம் 3:24, NW) “சகலமும் அவருக்குக் [இயேசுவுக்குக்] கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.”—1 கொரிந்தியர் 15:28.
[பக்கம் 13-ன் படம்]
கடவுள் தம்மீதே தம்முடைய பரிசுத்த ஆவியைப் பொழிந்து கொண்டாரா?