“நான் அதிகத்தைக் கற்றுக்கொள்ள ஆவலாயிருக்கிறேன்”
அ.ஐ.மா., கொலராடோவிலிருந்து வரும் ஒரு மனிதர், இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்பவர்களுக்கு ஒரு கடிதத்தில் மேலே காணப்படுவதைக் கடந்த டிசம்பர் மாதம் எழுதினார். அவர் விளக்கினார்:
“பெரும்பாலான மக்களின் கருத்துப்படி, நீங்கள் என்னை ஒரு மதப்பற்றுள்ள ஆளாக கருதமாட்டீர்களென்றாலும், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மேலாக வாழ்க்கைக்குக் கட்டாயமாகவே அதிகம் இருக்கவேண்டும் என்பதாக நான் எப்பொழுதும் நம்பிவந்திருக்கிறேன். குறிப்பிட்ட ஒரு மதத்திடமாக இல்லாவிட்டாலும், நான் எப்பொழுதும் ஓர் ஆவிக்குரிய ஈடுபாட்டைக் கொண்டவனாக இருக்கிறேன்.
“இருப்பினும், சமீப காலமாக என்னை ஓரளவு இக்கட்டான நிலைமைகளிலும், சமாளிப்பதற்கு உள்ளான பலத்தில் நான் குறைவுபடுவதையும் காண்கிறேன். வீட்டிலும் வேலையிலும் பிரச்னைகள், நான் முன்னொருபோதும் அனுபவித்திராத அளவுக்கு என்னுடைய கவலையின் அளவை அதிகரித்திருக்கின்றன. . . .
“அதிசயமாக, ஏமாற்றத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கையில், பொருள் வாங்க சென்ற நடைபாதைக் கடையில் தற்செயலாக உங்களுடைய பிரசுரங்களில் ஒன்றை நான் கண்டேன். பரிசுத்த தந்தைப் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் புத்துயிரளிப்பவையாக உள்ளன, நான் அதிகத்தைக் கற்றுக்கொள்ள ஆவலாயிருக்கிறேன், ஆனால் அதிகமான தகவலை எங்கே பெறுவது என்பது எனக்கு நிச்சயமாக தெரியவில்லை.
“யெகோவாவின் சாட்சிகளையும் உங்களுடைய நம்பிக்கைகளையும் பற்றி அதிகத்தைக் கற்றுக்கொள்ள நீங்கள் எனக்கு கொடுக்கக்கூடிய எந்த உதவியையும் நான் வெகுவாக போற்றுவேன். நான் குறிப்பிட்டவிதமாக, என்னுடைய ஏமாற்றத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கையில் உங்களுடைய பிரசுரங்களில் ஒன்றை தற்செயலாகப் பார்த்தது எனக்கு அதிசயமாக இருந்தது—அது தெய்வீக வழிநடத்தலுக்கு அறிகுறியாக இருக்கலாம்.”
இந்த மனிதனுக்கு யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் ஆதாரமுள்ள நம்பிக்கைகளை அளிக்கும் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற தலைப்பைக் கொண்ட புத்தகத்தின் ஒரு பிரதி அனுப்பிவைக்கப்பட்டது. நீங்கள் 256 பக்கங்களடங்கிய இந்த பவுண்டு புத்தகத்தின் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ளவோ இலவச வீட்டு பைபிள் படிப்பு ஒன்றைக் கொண்டிருக்கவோ விரும்பினால், தயவுசெய்து Watchtower, H-58, Old Khandala Road, Lonavla 410 401, Mah., என்ற விலாசத்துக்கு அல்லது பக்கம் 5-ல் பட்டியலிடப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதவும்.