விழித்தெழு!-வின் அச்சடிப்பைக்கண்டு வியந்தார்
அ.ஐ.மா., மின்னிசோடாவிலுள்ள விழித்தெழு! வாசகர் ஒருவர், கல்லூரி ஒன்றில் வேலைபார்க்கிறார். அங்கு, கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சியாளராகிய சாம் லாபட் என்பவர் ஓர் உரை ஆற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதன் தலைப்பு, “டால்ஃபின்கள் எங்கே போய்விட்டன?” என்பதாகும். “மிதவை வலை மீன்பிடித்தல் போய்விடுமா?” (ஆங்கிலத்தில் மே 22, 1992) என்ற விழித்தெழு! கட்டுரையில் அவருடைய மேற்கோள் இருந்ததை நினைவுகூர்ந்து, அவள் அந்தப் பத்திரிகையை சொற்பொழிவுக்குத் தன்னுடன் கொண்டுசென்றாள்.
“பத்திரிகையின்மீது திரு. லாபட் என்ற பெயரெழுதி, ஒரு குறிப்பை நான் எழுதினேன். இந்த அருமையான கட்டுரை உலகமுழுவதிலும் அநேக மொழிகளில் விநியோகிக்கப்படவிருந்தது, இந்தப் பத்திரிகை 1,30,00,000-க்கும் மேலாக அச்சிடப்பட்டது என்பதை அறிந்துகொள்வதில் தாங்கள் மகிழ்ச்சியடைவீர்களென நான் நினைக்கிறேன் என்று எழுதியிருந்தேன். பின்பு நான் என்னுடைய கையொப்பமிட்டு, அந்த விழித்தெழு! பத்திரிகையை பேச்சாளரின் மேடையில் திறந்தவாறு வைத்துவிட்டு என்னுடைய இருக்கைக்கு திரும்பிவிட்டேன்.
“சற்று நேரத்திற்குப் பிறகு, பேச்சாளரின் மேடைக்கு ஒரு மனிதர் சென்றதை நான் பார்த்தேன். அவர் அந்தப் பத்திரிகையை கையில் எடுத்து, படிக்க ஆரம்பித்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, இந்தப் பத்திரிகையை விட்டுச்சென்ற நபர் இருக்கிறாரா என்று சப்தமாகக் கேட்டார். நான் என்னுடைய கையை உயர்த்தி, ‘இருக்கிறேன்’ என்று சொன்னேன், அவர் கீழே வந்து எனக்கடுத்தாற்போல் அமர்ந்துகொண்டார். அந்தப் பத்திரிகைக்காக அவர் எனக்கு நன்றிதெரிவித்தார். தன்னுடைய துறையிலுள்ள வேலையை அல்லது சாதனைகளை முக்கியப்படுத்திக் காட்டுகிற தகவல்களை ஒருவர் அவருக்குக் கொடுக்கும்போது தான் அதைப் போற்றுவதாகக் கூறினார். என்றாலும், சராசரி அச்சடிப்பு 1,30,00,000 என்று நான் தவறாக சொல்லிவிட்டேன் என்று அவர் நினைத்தார். 13,000 என்று நான் கருதியிருக்க வேண்டும் என்று நினைத்தார். பத்திரிகையின் முதல் பக்கத்தைத் திருப்பி, அது 1,30,00,000 என்பதை நான் அவருக்குக் காண்பித்தேன். அவர் வியப்படைந்தார். அந்தப் பத்திரிகை பிரசுரிக்கப்படுகிற மொழிகளின் எண்ணிக்கையை [இப்பொழுது 74 மொழிகளில்] கண்டும்கூட அவர் மனங்கவரப்பட்டார். ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே அந்தப் பத்திரிகை விநியோகிக்கப்படுகிறது என்பதாக அவர் நினைத்தார், ஆனால் அது எவ்வாறு உலகமுழுவதும் விநியோகிக்கப்படுகிறது என்பதை நான் விளக்கிக் கூறினேன்.”
உங்களுடைய வீட்டிற்கு ஒரு பிரதி அனுப்பப்படும்படி நீங்கள் விரும்புவீர்களானால், தயவுசெய்து Praharidurg Prakashan Society, Plot A/35, Nr Industrial Estate, Nangargoan, Lonavla, 410 401, Mah., அல்லது பக்கம் 5-ல் பட்டியலிடப்பட்ட பொருத்தமான விலாசத்துக்கு அனுப்புங்கள்.