“எவருக்கும் மதிப்புவாய்ந்த ஒரு பரிசு”
இப்படித்தான் எழுதினார் ஸ்விட்ஸர்லாந்திலுள்ள 82 வயதுள்ள ஒரு நபர் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தைப்பற்றி. முதன்முதலில் 1991-ல் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகம், நான்கு சுவிசேஷங்களிலும் விவரிக்கப்பட்டிருப்பதுபோல இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவத்தையும் 133 அதிகாரங்களுக்குள் அளிக்கிறது. அந்த வாசகர் ஏன் அவ்வளவு திளைப்படைந்தார்?
“அந்தப் புத்தகம் படிப்பதற்கு மகிழ்ச்சி தருவதாய் இருக்கிறது,” அவர் எழுதினார். “தெளிவாக அச்சடிக்கப்பட்ட எழுத்துக்களையும், மிகச் சிறந்த இலக்கணத்தையும் அது கொண்டிருக்கிறது. பெரும்பாலான மற்ற புத்தகங்களில் அது அவ்வாறிருப்பதில்லை.” அந்த நபர் 200-க்கும் அதிகமான கலர் படங்களைக் கண்டு அதிசயித்தும்போனார். அவை “மிகவும் தத்ரூபமாக இருக்கின்றன.” அவர் மேலும் கூறினார்: “சைகைகள், முகபாவங்கள், மிதமான வர்ணங்கள் போன்றவை அவ்வளவு நிஜமாக இருக்கின்றன.”
அந்தப் புத்தகத்தை அன்பளிப்பாக மற்றவர்களுக்கு அளிக்கலாம் என வயது முதிர்ந்த அந்தப் பண்புள்ள மனிதர் ஆலோசனை கூறுகிறார். அவர் “அதிசயிக்கத்தக்க மற்றும் அறிவுரை வழங்கும் இந்தப் புத்தகத்தை . . . எவருக்கும் மதிப்புவாய்ந்த ஒரு பரிசு” எனவும் கருதுகிறார். நாமும் அவ்வாறே கருதுகிறோம்.
எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தின் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ளவோ இலவச வீட்டு பைபிள் படிப்பு ஒன்றைக் கொண்டிருக்கவோ நீங்கள் விரும்பினால், Watchtower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., என்ற விலாசத்துக்கோ பக்கம் 5-ல் பட்டியலிடப்பட்ட பொருத்தமான விலாசத்துக்கோ தயவுசெய்து எழுதுங்கள். (g93 10/22)
[பக்கம் 32-ன் படம்]
எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்