கடவுள் அக்கறையுள்ளவராக இருக்கிறாரா?
அவர் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார்? அது எப்போதாவது முடிவுக்கு வருமா?
கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? அப்படியென்றால், அவர் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார்? அது எப்போதாவது முடிவுக்கு வருமா?
ஆவலைத் தூண்டும் கேள்விகள் அல்லவா அவை? யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட ஒரு சிற்றேட்டின் அட்டையில் தோன்றுகின்றன அவை. அதை நீங்கள் படித்தீர்களா? ஏற்கெனவே அது அநேகருக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. அ.ஐ.மா., பென்ஸில்வேனியாவின் ஃபிலடெல்ஃபியாவிலிருந்து ஒரு பெண்மணி இந்தச் சிற்றேட்டைப்பற்றி எழுதுகிறார்:
“அவ்வளவு அழகாக, இருதயத்தைத் தொடுகிற ரீதியில் வார்த்தைகளை ஒன்றுசேர்க்க முடியும் என்று எனக்குத் தெரியாமல் இருந்தது. நான் ஓர் இருட்டறையில் இருக்கையில், திடீரென யாரோ ஒருவர் ஒரு விளக்கை எரியவிட்டது போல இருந்தது; ‘கடவுள் அக்கறையுள்ளவராக இருக்கிறார்!’ என்று நான் உணர்ந்தேன்.
“நான் எப்போதுமே அறிவியல் நாட்டமுடைய ஒரு நபராக இருந்தேன். ஆகவே, நான் எப்போதாவது உற்சாகமிழந்தால் விஞ்ஞானப்பூர்வ சொற்பொழிவுகள், கட்டுரைகள், அல்லது திரைப்படங்கள் போன்றவை எனக்குப் புத்துயிர் அளிப்பனவாக இருந்திருக்கின்றன. எனினும், இந்தச் சிற்றேடு எனக்குப் புத்துயிர் அளித்தது மட்டுமல்லாமல் என்னை மென்மையாக அன்போடு தொட்டது.
“உங்கள் கண்ணைக் கவரும் முதல் காரியம் அதன் அட்டை. அதில் உள்ளவர்கள் உண்மையான ஆட்களாக இருப்பதால் அது ஆற்றல் வாய்ந்ததாய் இருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவருடைய முகங்களும் கருத்த தடித்த எழுத்துக்களில் உள்ள, ‘கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா?’ என்ற கேள்வியின் மீது ஆர்வத்தைப் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன. இந்நாட்களில் ஒவ்வொருவரும் உணருகிற விதத்தைக் கண்ணாடியைப் போல் காண்பிக்கின்றன அவர்களின் முக பாவனைகள்.
“அதில் அடங்கியுள்ள பொருள் மிக எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருக்கிறது. அது எளிதாகவும், குறிப்பாகவும், பொருள் விளங்கக்கூடியதாகவும் இருந்தது. அது நியாயமாக இருக்கிறது. படிப்பதற்கு அவ்வளவு மகிழ்ச்சி தருவதாகவும் அவ்வளவு எளிதாகவும் இருப்பதால் நீங்கள், படிக்கத் தொடங்கினால் உங்களால் நிறுத்தமுடியாததாக இருக்கிறது.”
கூடுதல் விவரங்கள் பெற விரும்பினால், தயவுசெய்து Watchtower, H-58 Old Khandala Road, Lonavla, 410 401. Mah. விலாசத்துக்கோ, பக்கம் 5-ல் பட்டியலிடப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்துக்கோ எழுதுங்கள்.