தெய்வபக்தியுள்ள பெற்றோரைப் போற்றுதல்
தங்களுடைய பிள்ளைகளைப் பொறுப்பு உள்ளவர்களாகவும் கடவுள் பயமுள்ள ஆட்களாகவும் வளர்க்க கடினமாக உழைக்கும் பெற்றோர், தங்களுடைய முயற்சிகள் வெற்றியடையும்போது மனநிறைவடைகின்றனர். அவர்களுடைய பிள்ளைகள் அவ்வாறு நன்கு வளர்க்கப்பட்டதற்குப் போற்றுதலைத் தெரிவிக்கும்போதும் அவர்கள் மிகவும் மனமகிழ்கின்றனர்.
கீழ்காணும் கடிதம் ஒரு மகனாலும் அவனுடைய மனைவியாலும், அவர்களுடைய திருமணத்திற்குப் பிறகு, அவனுடைய பெற்றோருக்கு எழுதப்பட்டதாகும்: (g93 8/8)
“அன்புள்ள அப்பாவுக்கும் அம்மாவுக்கும்:
“ம்ம், நாங்கள் எங்குத் தொடங்குவது? முதலில் எங்களுடைய திருமண நாளன்று நீங்கள் காண்பித்த அன்பு, ஆதரவு, மற்றும் தாராள குணத்தை நாங்கள் எவ்வளவு போற்றினோம் என்று கூறி தொடங்குகிறோம். அது உண்மையிலேயே ஒரு விசேஷித்த நாளாக இருந்தது, மேலும் நீங்கள் எங்களோடு இருந்ததோ மதிப்பிடமுடியாததாக இருந்தது. கூடுதலாக, அதுவும் போதாததுபோல, எங்களுடைய தேன்நிலவை மிகவும் அனுபவித்துக்களிக்கப்படக்கூடிய ஒன்றாக்குவதற்கு உதவினீர்கள். மேற்கூறியவை எல்லாம் நீங்கள் எவ்வளவு தனிச்சிறப்பு வாய்ந்த, அன்புள்ள, நியாயமான, கேளிக்கையை விரும்பும் பெற்றோராய் இருக்கிறீர்கள் மற்றும் எப்போதும் இருந்துவந்திருக்கிறீர்கள் என்பதற்கான கூடுதல் அத்தாட்சியாக இருக்கிறது!
“நான் ஏன் நேரான மற்றும் இடுக்கமான பாதையிலே தொடர்ந்திருக்க முடிந்திருக்கிறது என்பதைப் பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஏனென்றால், யெகோவா தேவனுக்கான என்னுடைய அன்போடுகூட, உங்கள் இருவருக்கும் நான் எப்போதுமே பெருமதிப்பு வைத்து இருந்திருக்கிறேன். இந்த மதிப்பு உங்களுடைய சிட்சையோடு சேர்ந்து, நான் காரியங்களைச் செய்யும்போதும் தீர்மானங்களை எடுக்கும்போதும் ஒருமுறைக்கு இருமுறை என்னைச் சிந்திக்க வைத்திருக்கிற அளவுக்கு உறுதியாக இருந்துவந்திருக்கிறது. கடவுளின் சித்தத்தைச் செய்வதில் என்னுடைய வாழ்க்கையின் வெற்றி உண்மையிலேயே பெருமளவு உங்களுடைய இசைவான அன்பு மற்றும் சிட்சை, யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் நீங்கள் வைத்திருக்கும் மாறா பக்தி போன்றவற்றின் காரணமாகவே இருக்கிறது.
“உங்களிருவரையும் பற்றிய என் பிள்ளைப்பருவ நினைவுகளையெல்லாம் நான் ஒன்று சேர்க்கவேண்டுமாயின், நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு நினைவு இல்லாமல் போனாலும், உங்களுடைய தனித்தன்மை வாய்ந்த நடத்தையை, முக்கியமாக மற்றவர்களுக்கும் யெகோவாவுக்குமான உங்களுடைய அன்பை, நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று அவை சொல்லும்.
“நாங்கள் உங்களை மிக, மிக நேசிக்கிறோம்.
“உங்கள் மகனும் மருமகளும்,
“L. மற்றும் W.”