பக்கம் இரண்டு
துப்பாக்கிகள் ஏராளம்
அதிகமான துப்பாக்கிகள், அதிகமான சுடுதல்கள், அதிகமான படுகொலைகள். ஐக்கிய மாகாணங்களில் துப்பாக்கி ஏந்திய ஒரு மனிதன் வேகமான வேட்டுத் தாக்குதல் சுழல்துப்பாக்கியிலிருந்து பள்ளிப் பிள்ளைகளின் ஒரு கூட்டத்தின் மேல் ஒரு நூறு சுற்றுகளைத் தெளிக்கிறான்: 5 பேர் உயிரிழக்கின்றனர், 29 பேர் காயமடைகின்றனர். இங்கிலாந்தில், பித்துபிடித்த ஒரு மனிதன் AK-47 சுழல்துப்பாக்கிக் கொண்டு 16 பேரைக் கொன்றுவிடுகிறான். கானடாவில் பெண்கள் மீது வெறுப்புற்ற ஒரு மனிதன் மான்ட்ரியல் பல்கலைக்கழகத்துக்குச் சென்று அவர்களில் 14 பேரைச் சுட்டுத்தள்ளுகிறான். சான் சால்வடாரில் காவலர்கள் காவலர்கள் வேட்டைத் துப்பாக்கியோடு பல்பொருள் அங்காடியின் பக்கங்களில் ரோந்து வருகிறார்கள், கடைக்குச் செல்வோர் வாசலில் தங்கள் ஆயுதங்களைச் சோதித்துப் பார்த்துக்கொள்ளும்படி கேட்கப்படுகிறார்கள்.
அதிகமான பெண்கள் இப்பொழுது துப்பாக்கிகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கைத்துப்பாக்கிகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கைத்துப்பாக்கி மற்றும் சுழல் துப்பாக்கியால் சுட பழகிக்கொள்ளும் இடங்களுக்கு திரளாக வந்து, ஆண்களின் ஆளுயர சுவரொட்டி வேட்டிலக்கிற்குள் ஒரு சுற்றுக்கு பின் மற்றொரு சுற்றாக வெடிமருந்தைத் திணித்து அவர்கள் கண்களுக்கிடையே துப்பாக்கிக் குண்டு துளைகளை உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள் நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
மேலும் பிள்ளைகளை விட்டுவிடாதீர்கள். பல உதாரணங்களில் ஒன்று: பத்து வயது பையன் ஒருவன் “தன் தந்தையின் உயர்-சக்தி வேட்டை சுழல் துப்பாக்கியில் மருந்தைத் திணித்து, வீடியோ விளையாட்டுகளில் அவனைவிட சிறந்தவள் என்பதாகத் தற்பெருமையடித்துக் கொண்ட ஒரு சிறுமியைச் சுட்டுக்கொன்றான்.”
வீட்டுப் படைக்கலப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது எங்கே போய் முடிவடையும்? அது எப்போது முடிவடையும்?