பக்கம் இரண்டு
கடந்த சில பத்தாண்டுகளில், மனிதன் தெரிவு செய்த வாழ்க்கை பாணி உயிர்வாழக்கூடிய இந்தப் பூமியின் பெரும்படியான தூய்மைக்கேட்டில் விளைவடைந்திருக்கிறது—நிலம், ஆறுகள், சமுத்திரங்கள், மற்றும் வளிமண்டலம் நச்சுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்னை உண்மையாகவே உலகளாவிய ஒன்று. உலக சமாதானநாளுக்கான (ஜனவரி 1, 1990) தன்னுடைய செய்தியில் போப் குறிப்பிட்டதுபோல்: “அநேக காரியங்களில் உயிர் வாழ்க்கைச் சூழ்நிலையின் பிரச்னைகள் தனி மாநிலங்களின் எல்லைகளை மீறுகின்றன. எனவே அவைகளின் பரிகாரம் தேசீய அளவில் மட்டுமே காணமுடிகிறது.”—L‘Osservatore Romano, டிசம்பர் 18-26 1989.
மனிதனுடைய அசட்டை மனப்பான்மை அவனுடைய எதிர்காலத்திற்கு பூமிக்கான கடவுளுடைய அக்கறையோடு முரண்படுகிறது. என்றபோதிலும் அது அவருடைய சிருஷ்டிப்பாகவும் உடைமையாகவும் இருக்கிறது. (ஏசாயா 45:18) தூய்மையான ஒரு பூமி சாத்தியமா? சாத்தியமென்றால், எவ்வாறு மற்றும் எப்பொழுது? நம்முடைய முன் அட்டை கட்டுரைத் தொடர் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றன.