இரத்தம்: யாருடைய தெரிவு, யாருடைய மனச்சாட்சி?
நியு யார்க் மருத்துவ சங்கத்தின் பதிப்புரிமையுடைய நியு யார்க் மாநில மருத்துவ பத்திரிகை (New York State Journal of Medicine), 1988; 88:463-464, அனுமதி பெற்று மறு அச்சு செய்யப்பட்டிருக்கிறது.
மருத்துவர்கள் நோயையும் மரணத்தையும் எதிர்த்துப் போரடுவதில் தங்களுடைய அறிவையும், திறமைகளையும், அனுபவத்தையும் பயன்படுத்தத் தங்களை அற்பணித்திருக்கின்றனர். என்றபோதிலும், ஒரு நோயாளி சிபாரிசுசெய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட சிகிச்சை முறையை மறுப்பாரானால், அப்பொழுது என்ன? இது அநேகமாக நோயாளி ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பாரானால், சிபாரிசு செய்யப்படும் சிகிச்சை முழு இரத்தமாக, சேமிக்கப்பட்ட சிவப்பு இரத்த அணுக்களாக, நிணநீராக அல்லது ப்ளேட்லட்ஸ் ஆக இருக்குமானால் அப்படியிருக்கக்கூடும்.
இரத்தத்தைப் பயன்படுத்துதல் என்ற நிலை வரும் போது, நோயாளி இரத்தமில்லாத சிகிச்சையைத் தெரிந்துகொள்ளுதல் தன்னை அற்பணித்திருக்கும் மருத்துவரின் கைகளை அது கட்டிவிடும் என்பதாக உணரக்கூடும். என்றபோதிலும், யெகோவாவின் சாட்சிகளாயிராத மற்ற நோயாளிகளுங்கூட தங்களுடைய மருத்துவர் சிபாரிசு செய்யும் சிகிச்சையைத் தெரிந்துகொள்வதில்லை என்பதை ஒருவர் மறந்துவிடக்கூடது. அப்பல்பாம் மற்றும் ரோத்1 என்பவர்கள் கருத்துப்படி, மருத்துவக் கல்வி புகட்டப்படும் மருத்துவமனைகளில் 19% நோயாளிகள் ஏதாவது ஒரு வகை சிகிச்சையை அல்லது சிகிச்சை முறையையாவது மறுப்பவர்களாயிருந்தனர், அப்படிப்பட்ட மறுப்புகளில் 15% “உயிருக்கு ஆபத்தானவையாக இருந்தபோதிலும்,” அப்படிச் செய்தனர்.
“சிறந்தது எதுவோ அது மருத்துவருக்குத்தான் தெரியும்,” என்ற பொதுவான கருத்து, அநேக நோயாளிகளைத் தங்களுடைய மருத்துவரின் திறமை மற்றும் அறிவுக்கு இணங்கிப் போகும்படிச் செய்கிறது. ஆனால் இந்தக் கூற்று ஒரு விஞ்ஞான உண்மை என்று கருதி அதற்கேற்ப நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பது தந்திரமான முறையில் எவ்வளவு ஆபத்தாக இருக்கும். உண்மைதான், நம்முடைய மருத்துவப் பயிற்சி, உரிமை, மற்றும் அனுபவம் மருத்துவக் களத்தில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை அளிக்கிறது. என்றபோதிலும், நம்முடைய நோயாளிகளுங்கூட உரிமைகளைக் கொண்டிருக்கின்றனர். நாம் அறிந்திருக்கிறபடி, சட்டம் (அரசியல் அமைப்புச் சட்டம் கூட) உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
பெரும்பான்மையான மருத்துவமனைகளின் சுவர்களில் ஒருவர் “நோயாளியின் உரிமைகள் மசோதா” பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதை பார்க்கிறார். இந்த உரிமைகளில் ஒன்று தகவலறிந்த ஒப்புதல், இதை இன்னும் திருத்தமாக தகவலறிந்த தெரிவு என்று சொல்லலாம். நோயாளிக்கு வித்தியாசமான சிகிச்சைகளின் (அல்லது சிகிச்சையின்மையின்) பலன்களைப் பற்றிய தகவல் அளிக்கப்பட்டபின்பு, எதற்குத் தன்னை இசையப்பண்ணுவான் என்பது அவனுடைய தெரிவு. நியு யார்க்கில், பிராங்க்ஸிலுள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் இரத்தமேற்றுதல் மற்றும் யெகோவாவின் சாட்சிகளின் பேரில் தயாரிக்கப்பட்ட ஒரு வரைவுக் கொள்கை இப்படியாகக் குறிப்பிட்டது: “செயலற்றுப் போகத எந்த ஒரு வயதுவந்த நோயாளிக்கும் சிகிச்சையை மறுக்க உரிமையுண்டு, அப்படிப்பட்ட ஒரு மறுப்பு அவனுடைய உடல்நலத்துக்கு எவ்வளவு கெடுதலாக இருக்கக்கூடுமானாலும்.”2
மருத்துவர்கள் நெறிமுறைகள் அல்லது சட்டக் கட்டுப்பாடுகள் குறித்து எவ்வளவுதான் குரல் எழுப்பினாலும், நீதிமன்றங்கள் நோயாளிகளின் தெரிவைத்தான் மேன்மையாக வலியுறுத்திவந்திருக்கின்றன.3 நியு யார்க் மேல் வழக்கு மன்றம் குறிப்பிட்டதாவது, “தான் சுயமாக எந்தச் சிகிச்சை முறையைத் தொடரப்போகிறான் என்பதைத் தீர்மானிக்கும் நோயாளியின் உரிமைதானே மிக முக்கியமானது . . . தகுதிவாய்ந்த ஒரு வயதுவந்த நோயாளி மருத்துவ சிகிச்சையை மறுத்திட அவனுக்கிருக்கும் உரிமையை மதித்து செயல்படும் [ஒரு] மருத்துவர் தன்னுடைய சட்டப்பூர்வமான அல்லது தொழில் சார்ந்த உத்தரவாதங்களை மீறினதாகக் குற்றஞ்சாட்டப்படமுடியாது.”4 “மருத்துவப் பணியின் நெறிமுறைகள் முக்கியமாயிருந்தாலும், இங்கு அப்பியாசிக்கப்படும் தனிப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளை மிஞ்சிவிட முடியாது” என்பதாகவும்கூட நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. “நிறுவனத்தின் தேவைகள் அல்ல, ஆனால் தனிநபரின் உரிமைகளும் விருப்பங்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவை.”5
ஒரு சாட்சி இரத்தத்தை மறுக்கும்போது, மிக அதிகப்படியானதைவிடக் குறைவானதாகத் தென்படுவதையே செய்யும் எதிர்பார்ப்பைக் கண்டு மனச்சாட்சி வேதனைப்படுவதை உணரக்கூடும். என்றபோதிலும், மனச்சாட்சியுடன் பணிபுரியும் மருத்துவர்களிடம் சாட்சிகள் செய்யக் கேட்பதெல்லம் அந்தச் சூழ்நிலையில் கூடியமட்டும் மிகச்சிறந்த மாற்று சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்பதுதான். நாம் அநேக சமயங்களில் சூழ்நிலைகளுக்கேற்ப, உதாரணமாக மட்டுக்கு மீறிய இரத்த அழுத்தத்தின்போது, சில நோயெதிர்ப்பு மருந்துகள் உடலுக்கு ஒவ்வாதிருக்கும்போது அல்லது குறிப்பிட்ட ஒரு விலையுயர்ந்த மருந்து கிடைக்கப்பெறாமல் இருக்கும் போது நம்முடைய சிகிச்சையை மாற்றிக்கொள்கிறோம். ஒரு சாட்சி நோயாளியாயிருப்பாரானால், அந்த மருத்துவ அல்லது அறுவை சிகிச்சை சார்ந்த பிரச்னையை நோயாளியின் தெரிவுக்கும் மனச்சாட்சிக்கும் ஏற்ப, இரத்தத்திற்கு விலகியிருக்க அவர் மேற்கொண்டுள்ள நெறிமுறை/மத தீர்மானத்துக்கு இசைவாகக் கையாளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இரத்தம் செலுத்த வேண்டாம் என்ற வேண்டுகோளை அநேக மருத்துவர்கள் நல்மனச்சாட்சியுடனும் வெற்றியுடனும் கையாள முடியும் என்பதைத்தான் சாட்சிகளாயிருக்கும் நோயாளிகளுக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை சம்பந்தப்பட்ட ஏராளமான அறிக்கைகள் காண்பிக்கின்றன. உதாரணமாக, 1981-ல் கூலி என்பவர் 1,026 (இவற்றில் 22% சிறுவர் பேரில் செய்யப்பட்டது) இருதய நாளங்கள் சம்பந்தப்பட்ட அறுவைச்சிகிச்சைகளை விமர்சித்துப் பார்த்தார். “யெகோவாவின் சாட்சி தொகுதியைச் சேர்ந்த நோயாளிகளுக்குச் செய்யப்பட்ட அறுவைசிகிச்சைகளில் இருக்கும் ஆபத்துகள் மற்றவர்களில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் இருப்பதைவிட குறிப்பிடத்தக்கவிதத்தில் அதிகமாக இல்லை.”6 கம்பொரிஸ்7 சாட்சிகளுக்குச் செய்யப்பட்ட பெரிய அறுவைசிகிச்சைகளின் பேரில் அறிக்கை செய்தார். அவர்களில் சிலர் “இரத்தமேற்றிக்கொள்ள மறுத்ததால், அறுவைசிகிச்சை அவசரமாகச் செய்யப்படவேண்டிய காரியம் அவர்களுக்கு மறுக்கப்பட்டது.” அவர் சொன்னார்: “அறுவைசிகிச்சை செய்யப்படும் அறையில் என்ன சூழ்நிலை ஏற்பட்டாலும் அவர்களுடைய மத நம்பிக்கைகள் மதிக்கப்படும் என்ற சிகிச்சைக்கு முன்னான உறுதியை எல்லா நோயாளிகளும் பெற்றுக்கொண்டனர். இந்தக் கொள்கையின் பேரில் எந்தவித அசம்பாவிதமான சூழ்நிலைகளும் எழும்பவில்லை.”
நோயாளி ஒருவர் யெகோவாவின் சாட்சியாக இருந்தால், அவருடைய தெரிவுக்கும் அப்பால், மனச்சாட்சி இடம்பெறுகிறது. ஒருவர் மருத்துவரின் மனச்சாட்சியை மட்டும் நினைத்துப்பார்க்கக் கூடாது. நோயாளியின் மனச்சாட்சியைப் பற்றியதென்ன? யெகோவாவின் சாட்சிகள் இரத்தம் பிரதிநிதித்துவஞ் செய்யும் உயிரைக் கடவுளுடைய ஈவாகக் கருதுகின்றனர். கிறிஸ்தவர்கள் “இரத்தத்துக்கு விலகியிருக்கவேண்டும்,” என்ற பைபிள் கட்டளையை அவர்கள் நம்புகின்றனர். (அப்போஸ்தலர் 15:28, 29)8 எனவே ஒரு மருத்துவர் அப்படிப்பட்ட நோயாளியின் ஆழ்ந்த நீண்ட நாள் நம்பிக்கையை மீறினால், விளைவு கவலைக்குரியதாக இருக்கக்கூடும். ஒருவரை அவருடைய மனச்சாட்சியை மீறும்படி வற்புறுத்துவது, “மனிதனுடைய மதிப்புக்கு வேதனைதரும் பலமான அடியாக இருக்கும். ஒரு கருத்தில் அது சரீரப்பிரகாரமாக மரணத்தை அல்லது கொலையை ஏற்படுத்துவதைவிட மோசமானது” என்று போப் பால் II கவனித்தார்.9
யெகோவாவின் சாட்சிகள் மத காரணங்களுக்காக இரத்தமேற்றிக்கொள்ள மறுத்திட, சாட்சிகளாக இல்லாத நோயாளிகளில் அநேகர் எய்ட்ஸ், A, B அல்லாத நீரிழிவு நோய் மற்றும் நோய்த்தடைக் காப்புத் திறன் சார்ந்த எதிர்ப்பாதிப்புகள் காரணமாக இரத்தமேற்றிக்கொள்ளுதலை மறுக்கின்றனர். அப்படிப்பட்ட தெரிவு, நன்மைகளுடன் ஒப்பிடுகையில் ஆபத்துகள் குறைவு என்ற நம்முடைய கருத்துக்களை அவர்களுக்கு அளிக்கலாம். ஆனால் அமெரிக்க மருத்துவ கழகம் குறிப்பிடுவது போல், “மருத்துவர் சிபாரிசு செய்யும் சிகிச்சையின் அல்லது அறுவைசிகிச்சையின் ஆபத்துகள் அல்லது அது இல்லாததில் உட்பட்டிருக்கும் ஆபத்துகளை நிதானித்து கடைசி தீர்மானம் எடுப்பது” அந்த நோயாளியே. “அதுதான் தனிப்பட்ட நபரின் இயல்பான உரிமை, இதைச் சட்டமுங்கூட ஏற்கிறது.”10
இதன் சம்பந்தமாக “இரத்தமேற்றுதல் இல்லாமல் மரணம்வரை இரத்தத்தை இழப்பதையும் பொருட்படுத்தாத” ஒரு சாட்சியைக் குறித்த ஓர் உயிரிழக்கும் ஆபத்து/பயன் விவாதத்தை மக்லின்11 கொண்டுவந்தார். ஒரு மருத்துவ மாணவன் பின்வருமாறு சொன்னான்: “அவன் யோசனாசக்தி நல்ல நிலையிலேயே இருந்தது. மத நம்பிக்கைகள் கிடைக்கக்கூடிய ஒரே சிகிச்சைமுறைக்கு எதிராக இருக்குமானால் அப்பொழுது என்ன செய்வீர்கள்?” மக்லின் இப்படியாக விவாதித்தார்: “இந்த மனிதன் தவறு செய்கிறான் என்று நாம் பலமாக நம்பக்கூடும். ஆனால் இரத்தமேற்றிக்கொள்ளுதல் . . . நித்திய கண்டனத்தில் விளைவடையும் என்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகின்றனர். மருத்துவத்தில் நாம் உயிரிழக்கும் ஆபத்து–நன்மை சார்ந்த பரிசோதனைகளைச் செய்ய பயிற்றுவிக்கப்படுகிறோம், ஆனால் பூமியில் இருக்கும் எஞ்சிய வாழ்வுடன் நித்திய கண்டனத்தை எடை போட்டு பார்ப்பீர்களானால், பரிசோதனை வித்தியாசமான ஒரு கோணத்தை ஏற்கிறது.”11
தங்களைச் சார்ந்திருப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அக்கறையைக் குறிப்பாக எடுத்துக்காட்ட ஜர்னல் என்ற பத்திரிகையில் வெர்சில்லோ மற்றும் டுப்ரே12 இன் ரெ ஆஸ்பார்ன்-ஐ மேற்கோள் காண்பிக்கிறார், ஆனால் அந்த வழக்கு எப்படி தீர்க்கப்பட்டது? அது வயதுவராத இரண்டு பிள்ளைகளின் கடுமையாகக் காயமுற்ற தகப்பனைப் பற்றியது. அவர் மரிப்பாரானால், உறவினர்கள் பிள்ளைகளைப் பொருள்சம்பந்தமாகவும் ஆவிக்குரியபிரகாரமாயும் கவனிப்பார்கள் என்று நீதிமன்றம் தீர்மானித்தது. எனவே, அண்மையில் நடந்த மற்ற சம்பவங்களில்13 செய்ததுபோல, சிகிச்சை சம்பந்தமாக நோயாளியின் தெரிவை மீறி செயல்படுவதை நியாயநிரூபணம் செய்வதற்கு தெரிவிக்கப்படும் எந்த ஒரு பலமான அக்கறையும் இருப்பதை நீதிமன்றம் காணவில்லை; அவர் பலமாக மறுக்கும் ஒரு சிகிச்சையை அளிப்பதற்கு வழக்குமன்றத்தின் தலையிடுதல் தேவையற்றதாயிருந்தது.14 மாற்று சிகிச்சை பெற்று அந்த நோயாளி குணமடைந்து தன்னுடைய குடும்பத்தைத் தொடர்ந்து கவனித்துவந்தார்.
மருத்துவர்கள் சந்திக்க நேரிட்டிருக்கும் அல்லது சந்திக்க நேரிடும் பெரும்பான்மையான நோயாளிகளை இரத்தமில்லாமலேயே சிகிச்சையளித்திருக்கமுடியும் அல்லவா? நாம் படித்து அறிந்திருக்கும் மிகச்சிறந்த காரியங்கள் மருத்துவப் பிரச்னைகள் சார்ந்தது, என்றபோதிலும், நோயாளிகள் மனிதர்கள், அவர்களுடைய தனிப்பட்ட மதிப்பீடுகளும் இலட்சியங்களும் அசட்டைசெய்யப்படமுடியாதவை. வாழ்க்கையை அவர்களுக்கு அர்த்தமுள்ளதாக்கும் காரியங்களாகிய தாங்கள் முதலாவது வைக்கும் காரியங்கள், தங்களுடைய சொந்த ஒழுக்கநெறிகள் மற்றும் மனச்சாட்சி ஆகியவற்றை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.
சாட்சிகளாயிருக்கும் பெற்றோரின் மதம் சார்ந்த மனச்சாட்சிக்கு மதிப்பளித்தல் நம்முடைய திறமைகளை சவாலுக்கு உட்படுத்தக்கூடும். ஆனால் நாம் இந்தச் சவாலை சந்திக்கும்போது, நாம் அனைவருமே பேணிக்காக்கும் மதிப்புவாய்ந்த சுயாதீனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். சரியாகவே ஜான் ஸ்ட்வார்ட் மில் எழுதினார்: “இந்தச் சுயாதீனங்கள் மொத்தத்தில் மதிக்கப்படாத எந்த ஒரு சமுதாயமும் சுதந்திரமாயில்லை, அது எந்த வகை அரசாங்கத்தைக் கொண்டிருந்தாலும் சரி . . . தன்னுடைய சொந்த ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்வதற்கு—அது உடல் சம்பந்தமாக, மனம் சம்பந்தமாக, ஆவிக்குரியதாக இருந்தாலும்—சரியானவே அவனவன் உத்திரவாதமுள்ளவனாக இருக்கிறான். ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு நல்லதாகப்படும் விதத்தில் வாழ வற்புறுத்துவதற்குப் பதிலாக, அவரவர்களுக்கு நல்லதாகப்படும் விதத்தில் ஒவ்வொருவரும் வாழ அனுமதிப்பதன் மூலமே மனிதவர்க்கம் அதிக நன்மையடைகிறவர்களாக இருக்கிறார்கள்.”15
1. Appelbaum PS, Roth LH: Patients who refuse treatment in medical hospitals. JAMA 1983; 250:1296-1301.
2. Macklin R: The inner workings of an ethics committee: Latest battle over Jehovah’s Witnesses. Hastings Cent Rep 1988; 18(1):15-20.
3. Bouvia v Superior Court, 179 Cal App 3d 1127, 225 Cal Rptr 297 (1986); In re Brown, 478 So 2d 1033 (Miss 1985).
4. In re Storar, 438 NYS 2d 266, 273, 420 NE 2d 64, 71 (NY 1981).
5. Rivers v Katz, 504 NYS 2d 74, 80 n 6, 495 NE 2d 337, 343 n 6 (NY 1986).
6. Dixon JL, Smalley MG: Jehovah’s Witnesses. The surgical/ethical challenge. JAMA 1981; 246:2471-2472.
7. Kambouris AA: Major abdominal operations on Jehovah’s Witnesses. Am Surg 1987; 53:350-356.
8. Jehovah’s Witnesses and the Question of Blood. Brooklyn, NY, Watchtower Bible and Tract Society, 1977, pp 1-64.
9. Pope denounces Polish crackdown. NY Times, January 11, 1982, p A9.
10. Office of the General Counsel: Medicolegal Forms with Legal Analysis. Chicago, American Medical Association, 1973, p 24.
11. Kleiman D: Hospital philosopher confronts decisions of life. NY Times, January 23, 1984, pp B1, B3.
12. Vercillo AP, Duprey SV: Jehovah’s Witnesses and the transfusion of blood products. NY State J Med 1988; 88:000-000.
13. Wons v Public Health Trust, 500 So 2d 679 (Fla Dist Ct App) (1987); Randolph v City of New York, 117 AD 2d 44, 501 NYS 2d 837 (1986); Taft v Taft, 383 Mass 331, 446 NE 2d 395 (1983).
14. In re Osborne, 294 A 2d 372 (DC Ct App 1972).
15. Mill JS: On liberty, in Adler MJ (ed): Great Books of the Western World. Chicago, Encyclopaedia Britannica, Inc, 1952, vol 43, p 273. (g89 2/22)